அண்ணாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதா ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு – அம்மாவின் உத்திரவையே மீறும் மாவட்ட நிர்வாகம் – கரூர் அருகே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியும், இன்று வரை நிறைவேற்றாத தமிழக அரசு – இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க அரசை கண்டித்து விரைவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுமென எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.







கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்குட்பட்டது. பழைய ஜெயங்கொண்டம் பகுதி. இந்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தகுதி வாய்ந்தது. இந்நிலையில், இங்கே நிர்வாக சீர்கேட்டால் பழைய ஜெயங்கொண்டத்தின் வாரசந்தை, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு சமுதாய கூடம் ஆகியவைகள் சமூக விரோதிகள் மற்றும் மது குடிப்பகமாக மாறியுள்ள அவல நிலை நீடித்துள்ளது. அண்ணா பெயரால் இயங்கும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியிலேயே பழைய ஜெயங்கொண்டத்தின் அண்ணா சமுதாய கூடம் மூடப்பட்டிருக்கும் நிலை, அங்கே மதுக் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. மேலும் அப்பகுதியில் மது குடிப்பவர்கள் இரவு நேரத்தில் அருகில் உள்ள குப்பைகளையும், முட்செடிகளையும் கொளுத்தி விடுவதால் தினமும், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறதாகவும், இத்தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக்குகள் கேட்ட போது வந்தவர் தான். பின்னர் இப்பகுதிக்கு வருவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பகுதியின் அருகே அமைந்துள்ள மகாதானபுரம் (தெற்கு), கிராம நிர்வாக அலுவலகமும், அவரது குடியிருப்பும், கடந்த பிப்ரவரி மாதம் 27 ம் தேதி  இதே வருடம் இதே முதலமைச்சர் ஜெயலலிதாவினால் திறந்து வைக்கப்பட்டும், இன்று வரை மூடப்பட்டுள்ளதால் ஒருவேளை முதல்வராக இந்த கிராம நிர்வாக அலுவலர் ஏற்றுக் கொள்ள வில்லையா ? என்ற ஐயமும், இப்பகுதி மக்களிடையே நிலவி வருகின்றது. மேலும் இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கூட்டப்படும் வாரச்சந்தைகள் பயனில்லாமல் வீணாக போகின்ற நிலையில் மாணவ, மாணவிகள் கிரிக்கெட் விளையாடும் இடமாகவே தற்போது காட்சியளிக்கின்றது. மேலும் இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக விளையாட்டரங்கமும் இப்பகுதியில் அமைக்க வில்லை என்றும், இந்த வாரச்சந்தை கூடாரத்திலேயே அப்பகுதி வழியாக செல்லும் குடிகாரர்கள் அங்கேயே குடித்து விட்டு பாட்டிலை உடைத்து சமூக விரோதிகளின் கூடாரமாகவே இப்பகுதி திகழ்வதாகவும், இந்த வாரசந்தையை மூடாமல், மதுபான கடைக்கு செல்பவர்கள் மதுவை வாங்கி கொண்டு இங்கே தான் வந்து மது பருகுவதால், வீண் சண்டையோடு, அடிக்கடி தகராறு என்று தினந்தோறும் அரங்கேறுவதால், கிராம நிர்வாக அலுவலகம், அண்ணா சமுதாய கூடம் ஆகியவற்றை உடனே திறக்குமாறும், வாரச்சந்தையை உபயோகமில்லாத நாளில் பூட்டுமாறும், இதற்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்கும் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட மதுபான கடையை உடனே பூட்டுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே தமிழக முதல்வர் திறந்து வைத்தும் கிராம நிர்வாக அலுவலகம் திறக்காமல் இன்று வரை மொளனம் காக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படுமென பொதுமக்கள் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா இப்பகுதியில் வாக்குகள் சேகரிக்கும் போது மட்டுமே வந்ததாகவும், ஜெயித்த பிறகு வெற்றி பெற்றதால் இப்பகுதிக்கு வராததையும் சுட்டி காட்டிய இப்பகுதி மக்கள் இவரும், அ.தி.மு.க வை சார்ந்த எம்.எல்.ஏ என்பதையும்  சுட்டிக்காட்டியுள்ளனர்

Thursday, 16 June 2016

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு – துணை ஆளுநர் சேக்தாவூத் சிறப்புரை !





கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2016-17 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வழக்கறிஞர் பி.கார்த்திகேயன் தலைமையில்  கரூர் பி.எல்.ஏ ராம் ரெசிடென்சியில் நடைபெற்றது.
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் பொறியாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேக்தாவூத்தை லயன்ஸ் மாவட்ட தலைவர் மேலை.பழநியப்பன் அறிமுகப்படுத்தினார். மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேக்தாவூத் தன் உரையில்,. பன்னாட்டு அளவில் 45 ஆயிரம் சங்கங்கள் மூலம் நாம் செய்கிற அறம் மனித வாழ்வை மாண்பு கூட்டும் வகையில் அமைகிறது என்றார். தெய்வநம்பிக்கை தான், தெய்வ அச்சம், தான் தண்டனை மட்டுமல்ல, நற் கூலியைத் தரும் என்றார். சினம் தவிர்த்தல், மனதையும், வாழ்க்கையையும், சீர் செய்யும் என்றார். விலங்குகள் கூட உயிர் இரக்கம் கொண்டு செயல்படும் சூழலில் மனிதர்களிடையே உயிர் இரக்கம் பரவ வேண்டும் என்றார். குறுகிய காலத்திலேயே உயிர்நீத்த மகாகவி பாரதி, வறுமையை நினைக்காமல் குருவிகளோடு, பறவைகளோடு, கொஞ்சி மகிழ்ந்தான். மன அமைதி கொண்டான் என்றார். எனவே நிர்வாகிகள் ஏற்பது பதவி அல்ல, பொறுப்பு ஏற்பு என்றும், ஒரு ஆண்டு காலத்தில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சேவைச் சிறப்பால் புகழ் கூட்ட வேண்டும் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவராக வழக்கறிஞர் பி.கார்த்திகேயன், செயலாளராக குமாரராஜா, பொருளாளராக சிவக்குமார் குழுவினருக்கு பொறுப்பேற்கச்செய்து அதிகாரச் சின்னமான சுத்தியலை வழங்கினார். மண்டலத்தலைவர் டி.நாகராஜன், வட்டாரத்தலைவர் ஆர்.தினகரன், மண்டல செயலர் கே.மனோகரன், பிஎன்.ஆனந்தநாராயணன்., எஸ்.சந்திர சேது, சூர்யா வே.கதிரவன், மேலை.பழநியப்பன் வாழ்த்துரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர், புகழூர், குளித்தலை, சின்னதாராபுரம், வெள்ளியணை, நொய்யல், பள்ளப்பட்டி லயன்ஸ் சங்கங்கள், அரசுக்கலைக்கல்லூரி, ஜெய்ராம் கலைக்கல்லூரி, கொங்கு கலை கல்லூரி, சேலம் அரசுக்கலைக் கல்லூரி இளம் அரிமா சங்க லியோ நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் 

மாணவர்கள் மார்க்குக்கு என்றில்லாமல் மதிப்புற திருக்குறள் படிக்க வேண்டும் கரூர் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாவில் செளமா பேச்சு !





கரூர் திருக்குறள் பேரவை 30 ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக ”வள்ளுவத்தில் பதினாறு” நூல் வெளியீடு மற்றும் பல்துறை வித்தகர்களுக்குப் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் முன்புறம் அமைந்துள்ள கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை அறங்காவலரும், கரூர் தொழிலதிபருமான பி.டி.கோச் தங்கராசு தலைமை தாங்கினார். திருக்குறள் பேரவை நிறுவனரும், செயலாளருமான மேலை.பழநியப்பன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வள்ளுவத்தில் பதினாறு என்ற நூலை புரவலர் கு.ராமலிங்கம் வெளியிட புரவலர் பழ.ஈஸ்வரமூர்த்தி பெற்றுக் கொண்டார். தனலெட்சுமி வங்கி மேலாளர் மு.மு.அஷ்ரப் அலி வாழ்த்துரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்டம், மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செளமா இராஜரெத்தினம், இவ்விழாவில் திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல் என்றார். மேலும் திருக்குறள் ஒழுக்கத்தையும் பண்பையும் செதுக்கும் நூல் என்றும் பள்ளியில் மாணவர்கள் திருக்குறளை மார்க் பெற படிப்பது என்றும், பயனற்றது என்றும், நினைத்து கொண்டிருந்தார்கள். உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலை மதிப்புற கற்று, திருக்குறளை படித்து பின்பற்றுவதே சிறப்பு என்றார். வள்ளுவத்தில் பதினாறு வளரும், எல்லா தலைமுறையை சென்றடையும், மேலும் வள்ளுவம் தந்த திருக்குறளையும், அதன் நோக்கத்தையும் கூடியதுடன் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது பாராட்டிற்கு உரியது என்றார், விழாவில் படைப்பாளர்கள் திருக்குறள் திருக்குறள் பரப்புநர்கள், இலக்கிய நூலகச்சேவையாளர்கள், இசைக்கலைஞர்கள், பள்ளித்தாளாளர்கள், முதல்வர்கள் தமிழில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர் எஸ்.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டுப்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கரூர் கவிஞர் கன்னல், பாவலர் எழில்வாணன், அருணா பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி, சூர்யா வே.கதிரவன், அருண் கருப்புசாமி, அறிவுடை நம்பி, ஜெகன் நாத ஒதுவார், மெய்யப்பன், குறளகன், புலவர் பார்த்தசாரதி, கவிஞர் நன்செய்ப் புகழூர் அழகரசன், இறையரசன், எஸ்.வி.கந்தசாமி, பாலமுருகன், பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் கொளரவிக்கப்பட்டார்.
இறுதியில் க.ப.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.