பாரதியார் நாள் விழா ! கரூர் திருக்குறள் பேரவையும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் இணைந்து கொண்டாடியது ! சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பாடியவன் பாரதி ! கரூரில் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு !






கரூர் திருக்குறள் பேரவையும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கமும் இணைந்து பாரதியார் நாள் விழா 324 ஏ 2 அரிமா மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் நகரத்தார் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநர் டாக்டர் பி.வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினர் திருப்பூர் கிருஷ்ணன், மாவட்ட தலைவரும், கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பன் மற்றும் அரிமா மாவட்ட தலைவர்கள் சூர்யா வே.கதிரவன், பி.என்.அனந்தநாராயணன், எஸ்.எஸ்.வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கும், பிரபல பத்திரிக்கையாளர் துக்ளக் சோ, அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பாரதியார் படத்திற்கு மலர் தூவி பாரதியின் உணர்வுகளை போற்றினர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாரதியார் வேடமிட்டு வந்த மாணவர்கள், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மார்னிங் ஸ்டார், குளித்தலை பாரதி வித்யாலயா, காந்திகிராமம் சீனிவாசா பள்ளி, தொழிற்பேட்டை சக்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், 40 படைப்பாளர்களுக்கும் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டது. ஆளுநர் வெங்கட்ராமன் துவக்க உரையாற்றி மாவட்ட தலைவர் மாவட்டத் தலைவரும், கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பனுக்கு மாவட்ட லயன்ஸ் சார்பில் பாராட்டு விருது வழங்கினார்.
இதை தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது., அரிமா கொண்டாடும், பாரதி விழா மிகுந்த பாராட்டுக்குரியது. ஜாதியை வெறுத்து சமத்துவத்தை பாட்டில் காட்டியவன், பாரதி ! நாத்திகமும் ஆத்திகமும் இணைந்து பணி செய்யப் பாடியவன் பாரதி, தன் சிறுகதையில் அற்புதமாகச் சொல்கிறான். முருகன்., வள்ளி., தெய்வானை., உற்சவர் ஊர்வலம், அன்றைக்கு குறவர்கள் தான், சாமி தூக்கியிருக்கின்றார்கள், ஊர்வலத்தில் பட்டர் மீது சாமி தூக்கிய குறவன் கை படுகின்றது, ச்சீ என்கின்றார் பட்டர், கிளிக் என்று ஒரு நகைச்சுவைக்குரல் யார் அது ? முருகன் அருகில் இருக்கின்ற வள்ளிக்குறத்தி சிரித்த சிரிப்பொலியாம் அது., முருகனுக்கு அருகிலேயே நான் இருக்கின்றேன், ஆனால் குறவனின் கை பட்ட போது ஏன் ? வெறுக்கிறீர்கள் என்பதாக சிரிப்பு அமைந்தது என்கிறார் பாரதி ! அப்படி ஜாதியை வெறுத்து சமத்துவத்தை பாட்டில் காட்டியவர் தான் பாரதியார் என்றார் !
மேலும் இந்நிகழ்ச்சியில் கடவூர் மணிமாறன் அருணா பொன்னுசாமி, எழில் ஒவியா, நாமக்கல் நாதன், நாவை சிவம் உள்ளிட்டோர் ஏற்புரையாற்றினார்கள். கரூர் அரிமா மாவட்டத்தலைவரும், திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு, நன்றியுரையையும் ஆற்றினார்கள். மேலும் தமிழ் ஆர்வலர்கள், முனைவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

வாட்ஸ் அப் வாத்தியாரை கைது செய்ய கோரியும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினர் புகார்





கரூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலரை பற்றியும், அரசுத்தேர்வுகள் இயக்கத்தை பற்றியும் கேவலமாக பேசி அவதூறு பரப்பி வரும் ஆசிரியரை கைது செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 14 வகை நலத்திட்டங்களை மாணவர்களுக்கு சிறப்பாக விநியோகம் செய்து அரசுக்கு நற்பெயரை ஈட்டி வரும் வேலையில், கரூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களையும், மற்ற அலுவலர்களையும், மாவட்ட கல்வி அலுவலரை பற்றியும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பரப்பி வருவதோடு, அரசுத்தேர்வுகள் பற்றியும் அவதூறு பரப்பி அவமானபடுத்தி வரும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவரை சைபர் க்ரைம் நடவடிக்கை எடுப்பதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட கல்வி அலுவலர்களையும், அதிகாரியையும் பற்றி கேவலமாக பேசியதோடு, மன உளைச்சல் ஆளாவதால் மனவேதனையில் ஈடுபடுவதாகவும் முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் நீடித்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்பிரச்சினையில் துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுப்பதோடு, முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையிலும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் கல்வித்துறையினரிடையே சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தலைவர் சு.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த புகார் கொடுத்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நா.அன்பழகன், மாவட்ட பொருளாளர் இரா.விக்னேஷ், துணைத்தலைவர்கள் இரா.பால்ராஜ், இரா.குமரேஷன், கோ.அமுதவேல், வ.ஸ்டாலின், கி.சாந்தி, அமைப்பு செயலாளர் ப.கடம்பலிங்கம், பிரச்சாரச் செயலாளர் க.ராமசாமி, இளைஞரணிச் செயலாளர், கே.ராதிகா, மகளிர் அணி செயலாளர் மா.சாரதா, மத்திய செயற்குழு உறுப்பினர் து.ஸ்டீபன், தணிக்கையாளர் பெ.சிவக்குமார், இணை செயலாளர்கள் பி.பி.காமராஜ், சா.கருப்பசாமி, சி.தர்மலிங்கம், க.சிவராஜ், ரா.கலியப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, 13 November 2016

தங்கமணி தங்கமான அமைச்சர் – கால்நடைத்துறை அமைச்சர் எங்களை கால்நடையாகவே பார்க்கின்றார் – அரவக்குறிச்சி தொகுதி மக்கள் வேதனை – ஒரே தொகுதியில் பல்வேறு அமைச்சர்களால் பெரும் பரபரப்பு – சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் ! அமைச்சர் பதவி விரைவில் பறிப்பு ?







தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என தகவல் வெளியாகியானதையடுத்து தற்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு பாலகிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டதோடு, அ.தி.மு.க கட்சியில் சர்ச்சை ஏற்படும் விதமாக அவர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண் ஆட்சியில் பெண்களை கேவலமாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி-க்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது என்றும், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதற்கிடையில் அமைச்சரின் பதில் என்னவோ ? என்று கூறிய விவகாரமே இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
தமிழக அளவில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே அமைச்சர்களை பொறுப்பாளர்களாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அளவில் எதிர்பார்க்கப்படுவது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மட்டுமே, ஏனென்றால் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை தீட்டியதோடு, இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருந்ததால் அரசியல் சதியால் கட்சியை விட்டு ஒரங்கட்டப்பட்டவர். மேலும் அந்த கட்சியே அதை எண்ணியும் வருத்தப்பட்ட நிலையில் அந்த வேட்பாளர் நிற்க, அந்த வேட்பாளருக்காக தமிழக அமைச்சர்கள், எம்.பி க்கள், எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாது நட்சத்திர பேச்சாளர்களும், திரைப்பட நடிகர்களும் களத்தில் இறங்க, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, பாலகிருஷ்ணரெட்டி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் இங்கே தீவிரப்பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகின்றது. ஆனால் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் மட்டுமே தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களோடு திரைப்பட நடகர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் களமிறங்க ? ஒசூரை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவரும், அதே தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக கால்நடைத்துறை அமைச்சரோ, வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சிக்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அதே அரவக்குறிச்சி தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், அ.தி.மு.க வினரிடையே புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமானது, அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தை அபகரித்து போடப்பட்டிருந்ததோடு, ஒசூரிலிருந்து வரவைக்கப்பட்ட மக்கள் மட்டுமே அமர்வதற்காக சேர்கள் போடப்பட்டு, அதே அரவக்குறிச்சி தொகுதியில் வாக்களிக்கும் மக்களை தரையில் அமர வைத்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அ.தி.மு.க வினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. பெண் அடிமைத்தனத்தை வேறெடுத்த பெரியார் பிறந்த பூமியில் பெண்களை இழிவு படுத்தும் வகையில், தரையில் அமரவைத்த காட்சியை பார்த்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அவர்கள் அமர்வதற்கு எந்த வித ஏற்பாடும் செய்யாமல் அள்ளல்படும் பொதுமக்களை (வாக்காளர்களை) கண்டு ரசித்தார். இந்நிலையில் பொதுநல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களோடு, நடுநிலையாளர்கள் இந்த அவலநிலையை பார்த்து கால்நடைத்துறை அமைச்சர் ஒரு வேளை அரவக்குறிச்சி மக்களை கால்நடையாக நினைக்கின்றாரோ என்னவோ தெரியவில்லை என்று புலம்பிய படி பொதுமக்கள் விரக்தியாக பொதுக்கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையில் தங்கமணி தங்கமானவர், எங்கள் பக்கத்து மாவட்டக்காரர், நாமக்கல் மாவட்டத்திலிருந்து கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வருவார் என்றும், அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், உண்மையான அ.தி.மு.க வினர் ஒன்று திரண்டு கரூர் அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்கள் செல்லுமிடத்திற்கே தங்களது கவனத்தை செலுத்துகின்றனர். காரணம் கால்நடைத்துறை அமைச்சர் அங்கிருந்து (ஒசூரிலிருந்து) ஒரு டீமை இறக்கியுள்ளாராம், அவர்கள் எல்லோரும் தெலுங்கிலேயே பேசிக்கொண்டு வருகின்றனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது உறவினர்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டு, கூட்டத்தை நடத்துவதாகவும், மேலும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே கூட்டத்தை காட்டுகின்றார்கள்,. ஆனால் வாக்குகள் நாங்கள் தானே போட வேண்டும், ஒசூரிலிருந்து வந்த மக்களா ? போடப்போகின்றார்கள் என்றும் காரசாரமாக பேசி வருகின்றனர். இத்தொகுதி மக்கள், ஏற்கனவே கோஷ்டி பூசல் இல்லாத ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க தான் என்ற ஒரு நல்ல பெயர் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் உள்ளது. தற்போது இந்த கால்நடைத்துறை அமைச்சரின் செய்கையால் கோஷ்டி பூசல் அமைச்சர்களிடையே மட்டுமில்லாமல் அரவக்குறிச்சி தொகுதி மக்களிடையே கூட ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை அதிகபடியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறசெய்ய வேண்டுமென்றால் இவரது மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பதோடு, இவரது பொறுப்பிற்கு பதில் வேறு யாரையாவது நியமிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ பொறுத்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர். பொதுமக்கள்



Thursday, 3 November 2016

வாக்காளர்களின் போர்கொடி ! தேர்தலின் போதே காலில் விழ வைக்கின்றார் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ! அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ ! வயது வித்யாசமின்றி காலில் விழுந்து வாக்குகள் கேட்கின்றார் !












வாக்காளர்களின் போர்கொடி ! தேர்தலின் போதே காலில் விழ வைக்கின்றார் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ! அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ ! வயது வித்யாசமின்றி காலில் விழுந்து வாக்குகள் கேட்கின்றார் !
தினமும் காலையில் 7 ஆயிரம் மாலையில் 7 ஆயிரம் வாக்காளர்களை நேரில் சந்திக்கும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி எங்கே ?
சுமார் 700 வாக்காளர்களை கூட நேரில் பார்க்காத தி.மு.க வேட்பாளர் எங்கே ?
அரவக்குறிச்சி வாக்காளர்களின் மனநிலை !!! ஒரு ஷாக் ரிப்போர்ட்

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து, ஆங்காங்கே அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களின் கவனமும் அரவக்குறிச்சி தொகுதி மட்டுமே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. காரணம் செந்தில் பாலாஜி, என்ற அ.தி.மு.க வேட்பாளருக்காக தானாம்,
கரூர் தொகுதியில் தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக மாறியதோடு மட்டுமில்லாமல் அ.தி.மு.க தொகுதியாகவே மாற்றியது என்றால் அது முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆகும், இந்நிலையில் அங்கு சுற்றி இங்கு சுற்றி, கரூர் மாவட்டத்தையே அ.தி.மு.க கோட்டையாக மாற்ற நினைத்த செந்தில் பாலாஜி க்கு கட்சி பதவி பறிப்பு மற்றும் அமைச்சர் பதவி பறிப்பு என்று எதிர்கட்சியினர் மற்றும் ஆளுகின்ற அ.தி.மு.க வில் போட்டுக் கொடுத்து செந்தில் பாலாஜியை அரசியல் வரலாற்றிலிருந்து நீக்க பல சதி திட்டங்கள் தீட்டி, அ.தி.மு.க விலிருந்து ஒரங்கட்டப்பட்டு, அ.தி.மு.க விலிருந்து விலக்க பல சதி திட்டங்களை தீட்டி வந்த நிலையில், அவரை அதே அ.தி.மு.க கட்சி தொகுதி மாறி போட்டியிட வைத்தது. காரணம் ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் அ.தி.மு.க கட்சியும், அரவக்குறிச்சி தொகுதி மட்டும் தி.மு.க கைப்பற்றியது. ஆகையால் இந்த முறை அதே அரவக்குறிச்சி தொகுதியையும் அ.தி.மு.க கைப்பற்ற வேண்டுமென்பதற்காக கட்சியில் வேண்டி இத்தொகுதி பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரங்கள் ,மேற்கொண்டு வரும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ, தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ இருவரின் வாக்குகள் சேகரிப்பதில் பல பல அர்த்தங்கள் வெளியாகி உள்ளது.
காலை 7 மணி முதல் இரவு வரை பல பல பகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், கிராமம், குக்கிராமம் என்று காலையில் 7 ஆயிரம், மாலையில் 7 ஆயிரம் மொத்தம் 14 ஆயிரம் நபர்களை சுமாராக தினமும் சென்று வாக்குகள் சேகரித்து வரும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மத்தியில், அதே தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ ! காலை மற்றும் இரவு மட்டும் வாக்குகள் சேகரித்து வருவதாகவும், மேலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்கும் இவருக்கு சூரிய ஒளி பிடிக்க வில்லையாம் ? மேலும் சூரியன் உதிக்கும் போதும் மறையும் போது மட்டும் தான் இவரது செயல்பாடுகளும், வாக்கு சேகரிப்பும் தொடங்குகின்றதாம். மேலும் நேற்று (02-11-16) குப்பம் பகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ வாக்குகள் சேகரிக்கும் போது, அவரது காலில் வாக்காளர்கள் விழுந்து கும்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,. மேலும் ராஜபுரம் பகுதியில் ஆரத்தி தட்டிற்கு பணம் பிரித்து கொடுக்கும் போது தி.மு.க கட்சியினருக்கும் பொதுமக்களுக்குமிடையே பெரும் களகலப்பு ஏற்பட்டதாம். மேலும் பகுத்தறிவு பேசும் இவரது கட்சிக்கு ஆரத்தி எடுக்கும் மக்களிடையே அந்த ஆரத்தி தட்டை தொட்டு கும்பிடுவது கூட இல்லையாம். பல பல குற்றச்சாட்டுகளுக்கிடையே அங்குமிங்குமாக வாக்குகள் சேகரிக்கும் போது, அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று மக்களிடையே கூறும் போது நடுநிலையாளர்கள் இதையெல்லாம் செய்வதற்காக தான் போனமுறை உங்களை எம்.எல்.ஏ வாக ஆக்கினோம், ஒன்றும் செய்ய வில்லை, எம்.பி யுமாக ஆக்கினோம் அப்போதும் ஒன்றும் செய்ய வில்லை என்று கூறி ஒரு சில இடங்களில் இன்று போய் நாளை வா ? என்று அனுப்பி வைக்கப்படுகின்றாராம் ?

ஆனால் இதே தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆரத்தி  எடுக்கும் பொதுமக்களிடையே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வயது வித்யாசம் பார்க்காமல் காலில் விழுந்து வாக்குகள் சேகரிப்பதோடு, பொதுமக்கள் தாங்கள் இடும் ஆரத்தியை அப்படியே அவர்களையே வைத்தும் விட சொல்கின்றராம் ! மேலும் காலை முதல் இரவு வரை சில சில கி.மீட்டர் தூரம் இருந்தால் நடந்தே செல்வதோடு, பல, பல கி.மீட்டர் இருந்தால் காரில் மட்டும் சென்று ஒய்வில்லாமல் முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கின்றராம். விளம்பரம் செய்வதில் மட்டுமில்ல ? பிரச்சாரத்தையும் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க முதலிடம் வகிக்கின்றது. மக்கள் மனதில் கேள்வி கேட்கும் போது இது வடகிழக்கு பருவ மழை காலம் இது இனி சூரியனுக்கு தற்போது வேலை கிடையாது என்று நாசுக்காக கூறுகின்றராம் பொதுமக்கள். சரி, இந்த தேர்தலும் அ.தி.மு.க விற்கு தானாம் வெற்றி வாய்ப்பு என்று கூறி தி.மு.க வினரே தங்களது பிரச்சாரத்தில் தயக்கம் காட்டுகின்றனர்