Monday, 31 October 2016
Saturday, 29 October 2016
Friday, 28 October 2016
Wednesday, 26 October 2016
Monday, 24 October 2016
Sunday, 23 October 2016
Saturday, 22 October 2016
Friday, 21 October 2016
Tuesday, 18 October 2016
Monday, 17 October 2016
Sunday, 16 October 2016
Saturday, 15 October 2016
Friday, 14 October 2016
Wednesday, 12 October 2016
கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி 10008 பால்குட நிகழ்ச்சி – தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
கரூர் மாவட்ட அ.தி.மு.க
சார்பில் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி 10008 பால்குட நிகழ்ச்சி – தமிழக போக்குவரத்து
துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
தமிழக முதல்வரும்
அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேறி
வருவதாக அந்த தனியார் மருத்துவமனையே அடிக்கடி செய்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பல்வேறு கோயில்கள், சர்ச்சுகள் மற்றும்
மசூதிகளில் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த தொடர் வழிபாட்டினை தொடர்ந்து இன்று சுமார்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் பால்குட நிகழ்ச்சி கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்
நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தலைமையில் தொடங்கிய இந்த பால்குடத்தில் மூன்று நாட்கள் விரதமிருந்து காப்பு கட்டி பெண்கள்
ஏராளமானோர் அமராவதி நதியின் கரையோரத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக கரூர் மாரியம்மன்
கோயிலை வந்தடைந்தனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் குட நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின்
உருவம் பொறித்த பால்குடங்களை கொண்டு பெண்கள் வலம் வந்ததோடு,, மாரியம்மன் கோயிலில் சிறப்பு
அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர்
மாவட்ட அ.தி.மு.க வினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட
அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர்
மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.செந்தில்நாதன் உள்ளிட்ட முக்கிய
பிரமுகர்கள் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பொதுமக்கள் மற்றும்
அ.தி.மு.க வினரோடு பிரார்த்தனை நடத்தினர்.
Tuesday, 11 October 2016
Monday, 10 October 2016
Saturday, 8 October 2016
Thursday, 6 October 2016
Wednesday, 5 October 2016
Tuesday, 4 October 2016
Monday, 3 October 2016
Sunday, 2 October 2016
Saturday, 1 October 2016
Subscribe to:
Posts (Atom)