Sunday 27 March 2016

இனி தமிழகம் மூன்று முதல்வர் ஐந்து முதல்வர்களை தாங்காது – ஆண்டு தோறும் அதிகரித்து வரும் வராக்கடன் தமிழக அரசு வஞ்சனை செய்வதால் தான் விவசாயத்தில் பின் தங்கியுள்ளது – கரூரில் அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் பேட்டி






கரூரில் அப்துல்கலாம் இலட்சிய இந்தியக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.என்.ஆர்.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இக்கட்சியின் நிறுவனத்தலைவர் பொன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது., தமிழகம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. தமிழகம் அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ளது. விவசாயத்துறையிலும், தொழிற்துறையிலும், சேவைத்துறையிலும் வராக் கடன்களாக 2013 வருடம் 8800 கோடி 2014 ல் 9200 கோடி, 2015 ல் 14 ஆயிரத்து 200 கோடி என்று சொன்னால் தொழிற்துறையிலும், விவசாயத்துறையிலும், சேவைத்தொழில் என எல்லாத்துறைகளிலும், நஷ்டம் கண்டுள்ளது. வேலை இல்லை. தமிழகம் சைனாவிற்கு நிகரான ஒரு நாடாக இருந்தது. ஆனால் இந்த வாய்ப்பை கொடுக்க தவறி இருப்பது தமிழக அரசு அவர்களுக்கு உரிய தண்ணீர், கட்டமைப்பு, தேவையான விதைகளை ஒதுக்க தவறியுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் விவசாயிகளுக்கு கொடுக்க வில்லை. மூன்று முதல்வர்கள், மூன்று முறை வேவ்வேறு முதல்வர்கள்., 24 முறை அமைச்சரவை மாற்றம், இனிமேலும் இந்த தமிழகம் மூன்று முதல்வர்களையும், ஐந்து முதல்வர்களையும் தமிழகம் தாங்காது, தமிழகம் சீரான வளர்ச்சி அடைய வேண்டுமா ? விவசாயிகளுக்கு விவசாயிகளின் பொருட்கள் நன்கு சந்தைப்படுத்த வேண்டுமா ? நதிநீர் பாசன திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் ? தொழிலாளர்களுக்கான தேவையான தொழில் தொடங்க வேண்டுமா ? அதற்கும் இனி தமிழகம் நதிகளை இணைக்க வேண்டும். இத்தனைக்கும் தேவை 10 வருடத்திற்கு ஒரு வல்லமை பெற்ற முதல்வர் வர வேண்டும். உங்களது ஒட்டு, உங்களது முடிவு நல்ல தலைமையை கொடுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள் என்றார். ஆகவே 32 மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களை நியமித்து உள்ளோம். எங்களது கனவை நிலை நிறுத்த சென்று கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் பேட்டியின் போது இக்கட்சியின் பொதுச்செயலாளர் திருச்செந்தூரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
பேட்டி : பொன்ராஜ் – நிறுவனத்தலைவர் – அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி

Saturday 26 March 2016

கன்னி வேட்பாளரான எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் – மக்கள் சேவகனாக பணியாற்ற உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும் – கரூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சிவசாமி உருக்கமான பேட்டி







தமிழகத்திற்கு வரும் மே மாதம் 16 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பா.ம.க கட்சியானது முதன் முதலில் முதல்வர்  வேட்பாளராக அன்புமணி இராமதாசுவை களம் இறக்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் வை.கோ, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க கட்சியிகள் ஒன்றினைந்து முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் ஐ வைத்து தேர்தல் களம் கண்டு வருகிறது. தி.மு.க கட்சியானது காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றினைந்து களம் கண்டு வருகிறது. அந்த கூட்டணி இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டணிகளை பேசி வருகின்றன. அ.தி.மு.க வானது இன்று வரை தேர்தல் கூட்டணிகளை அறிவித்தோடு, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளோடு ஆதரவு திரட்டி மேலும் பல கட்சிகள் ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று பா.ஜ.க கட்சியானது மாலை 54 வேட்பாளர்களை முதல் கட்டமாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது. அந்த வேட்பாளர் பட்டியலில் கரூர் மாவட்ட அளவில் முதல் முதலில் பா.ஜ.க கட்சியானது கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பா.ஜ.க வின் முன்னாள் மாவட்ட தலைவர் கே.சிவசாமியை நியமித்தது. இன்று மதியம் ராகு காலத்திற்கு முன்பு வேட்பாளர் கே.சிவசாமி செய்தியாளர்களை, சந்தித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க கட்சி மற்றும் முந்தைய தி.மு.க கட்சி ஆகிய இரு கட்சிகளும், மக்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை. இந்திய பிரதமர் மோடி அவர்களின் 21 மாத ஆட்சி காலத்தில் நல்ல வகையில் இந்தியாவிற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதே வழியில் தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை நாங்கள் செய்வோம், 2016 ம் சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளின் ஊழலையும், மோடி அரசின் சாதனைகளையும் மக்களிடையே தெரிவித்து பா.ஜ.க வேட்பாளராகிய நான் வாக்குகள் கேட்பேன். மேலும் இந்த அ.தி.மு.க அரசு கரூர் ரிங் ரோடு, கரூர் பூங்கா, கரூருக்கு புதிய பேருந்து நிலையம், காவிரி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களை தீட்டியதே தவிர அது வெறும் அறிவிப்பாக தான் உள்ளது திட்டங்கள் முழுமையாக தீர்க்கப்பட வில்லை. தற்போது அ.தி.மு.க கட்சியானது கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வலுவிழுந்துள்ளது. தி.மு.க கட்சியானது செயல் இழந்துள்ளது. இது ஒன்று போதும் எங்களின் வாக்குகள் முழுதாக பெற, நாடு நல்ல நிலையில் இருக்க, நல்லாட்சி மலர தாமரை மலர வேண்டும், இந்தியாவில் மலர்ந்த தாமரை தமிழகத்தில் விரைவில் மலரும், உங்களில் ஒருவனாக வாக்குகள் கேட்பேன், கடந்த அ.தி.மு.க அமைச்சர் போல ஏ.சி. வாகனத்திலே இருந்து பல வேலைகளை நடத்தி முடிக்க மாட்டேன், கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 6 கோடியில் அறிவிக்கப்பட்ட கரூர் டூ பசுபதிபாளையம் உயர்மட்டப்பாலம் தற்போது சுமார் ரூ 20 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று வரை அந்த பாலம் கட்டி முடிக்க பட வில்லை. தற்போது நான் கடந்த இரு முறை கரூர் மாவட்ட பா.ஜ.க மாவட்ட தலைவராக இருந்து வந்த நான், எந்த வித தேர்தலிலும் நிற்க வில்லை. அதாவது உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நிற்க வில்லை. முதன்முறையாக கன்னி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன் என்று கூறிய அவர். முதல் முதலில் சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் போது கன்னிச்சாமி என்கின்றனர். அதே போல சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை முதன் முதலில் பேசினால் கன்னி பேச்சு என்பார்கள். அது போல தான். இதுவும் எனக்கு முதல் தேர்தல், முதல் வேட்பாளராக கன்னி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன். எனக்கு வாக்களியுங்கள், மக்கள் சேவைக்காக பணியாற்ற எனக்கு ஒரு முறை வாய்ப்பளியுங்கள் நான் உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்றார். பேட்டியின் போது கரூர் மாவட்ட தலைவர் நீ.முருகானந்தம், மாவட்டதுணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நகுலன், வழக்கறிஞர் அணி பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.பி.மோகன் உள்ளிட்டோர் இருந்தனர்

Sunday 13 March 2016

பா.ம.க கட்சியின் செயல்பாடுகளை காப்பி அடிப்பதே வழக்கமாக கொண்ட தி.மு.க கட்சி தற்போது தேர்தல் அறிக்கையையும் காப்பி அடிக்கிறது – காப்பி அடிப்பதே தனது தொழிலாக கொண்டுள்ளதாக கரூரில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கடும் குற்றச்சாட்டு







தமிழகத்தில் அதிமுக ஒரு தீமை கட்சி திமுக ஒரு தீமை கட்சி இந்த இரண்டு தீமை கட்சிகளையும் ஒழித்து நன்மை தரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் கரூரில் பா.ம.க முதல் அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

தமிழக பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கரூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பூக்கராம்மா, டீக்கடைக்காரர், ஹோட்டல் தொழிலாளி மற்றும் முதலாளி, நரிக்குறவர்களிடம் மற்றும் பல தரப்பட்ட பொதுமக்களிடம் வாக்குகள் கேட்ட அன்புமணி இராமதாசு ஆங்காங்கே அன்புமணியாகிய நான் எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றார். கரூர் கோவை ரோடு, கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த அவர்., பொதுமக்களிடம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தீர்கள், ஆனால் அக்கட்சிகள் பொதுமக்களாகிய உங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும். ஒரு முறை அன்புமணியாகிய எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் கொடுக்க மாட்டோம், தாலி அறுக்கும் டாஸ்மாக்கை மூடுவோம், நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்றார். மேலும் இலவச மிக்ஸி கிரைண்டர்களை நாங்கள் கொடுக்க மாட்டோம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைகள் கொடுப்போம்,  என்று கூறி துண்டு பிரசூரங்களை விநியோகித்தார். அப்போது கரூர் பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறுகையில்., அப்போது தே.மு.தி.க கட்சியின் நிலைப்பாட்டை பற்றி கூறிய அன்புமணி இராமதாசு., கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே கருத்தை தான் கூறினார். மக்களுடன் நல்ல கூட்டணி என்று கூறினார். தி.மு.க வுடன் பேசினார். மலேசியாவில் சென்று பேசினார். பிறகு காங்கிரஸுடன் டெல்லியில் பேசினார். பிறகு பா.ஜ.க கட்சியில் போய் சேர்ந்து விட்டார். எதிர் கட்சி தலைவராக இருக்கும் போது மக்களுக்கு போராட்டம் நடத்தாத இவர் முதல்வராகி என்ன செய்ய போகிறார். தேர்தல் அறிக்கையை தி.மு.க வினர் காப்பிஅடித்து வருகின்றனர். பூரண மதுவிலக்கு, லோக் ஆயுக்தா சட்டம், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிக்கைகளாக பா.ம.க ஆகிய நாங்கள் அறிவிப்பதை தி.மு.க வினரும் அறிவிக்கின்றனர். எங்களை காப்பி அடிப்பதே தி.மு.க வின் வழக்காமாயிற்று, தமிழகத்தில் அ.தி.மு.க என்ற தீமையும், தி.மு.க என்ற தீமையும் ஒழிக்கப்பட்டு நன்மை செய்யும் ஒரே கட்சி பா.ம.க என்ற ஒரு கட்சி தான் என்றார். மேலும் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு நீதி விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் அரசு நிதி உதவி கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளானதை நான் அறிவேன் என்று கூறிய அவர் முதல்வர் ஆனவுடன் முதலில் அனைவருக்கும் நல்ல கல்வி, வேலை என்று பல்வேறு திட்டங்களை தீட்டுவேன் என்றார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசங்களை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறிய அவர் ஒரு குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் ஒரு வருடத்திற்கு மிச்சம் கொடுப்போம் என்றார். மேலும் பா.ம.க கட்சி மட்டுமே ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும் என்றார். பேட்டியின்  போது பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், வான்னியர் சங்க மாநில துணை தலைவர் மருத்துவர் மணி, மாவட்ட செயலாளர் கண்ணன், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேஷன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த சிறப்பான ஏற்பாட்டை செய்து தந்த பா.ம.க நிர்வாகிகளுக்கு முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் திருச்சி கருத்தரங்கிற்கு புறப்பட்டு சென்றார். சாதாரண பாமர மக்களிடம் தான் ஒரு சாதாரண வேட்பாளர் என்றும் கொளுத்தும் வெயிலையும் பாராமல் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகள் கேட்ட முதன் முதல் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசுவின் இந்த வித்யாச வாக்குகள் சேகரிப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது