Tuesday 31 May 2016

சாக்பீஸ் தயாரிப்பதை பற்றியும், சாக்பீஸ்ஸை பற்றியும் தயாரிப்பாளர் முனியப்...

தமிழகத்தில் ஜுன் 1 (நாளை) பள்ளிகள் துவங்குவதையொட்டி சாக்பீஸ் தயாரிப்பு ப...

மஞ்சள் விலை சரிவை அரசு சரி செய்ய மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் கோரிக்கை

மஞ்சள் விலை திடீர் சரிவு கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

நொய்யல் ஆற்றில் திடீரென்று கலக்கும் சாயக்கழிவு நீர் விஸ்வரூபமெடுக்கும் ச...

கரூர் அருகே மீண்டும் பிரச்சினையை கிளப்பும் திருப்பூர் மாவட்ட சாயக்கழிவு ...

அரசு மருத்துவமனையின் அவல நிலை - கரூரில் பொதுமக்கள் கண்டனம்

Wednesday 25 May 2016

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கம்பம் விடும்...

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் காக்கர்...

கெஜலெட்சுமி வாகன திருவீதி உலா நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவிகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்விலும் சாதனை

12 ம் வகுப்பு தேர்வில் சாதனையை தொடர்ந்து 10 வகுப்பு தேர்விலும் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் சாதனை




கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவன் B.கிஷோர் மற்றும் மாணவி S.கீர்த்தனா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட இரண்டாமிடமும், கரூர் பரணி பார்க் பள்ளி அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி S.கிருபாலினி, T.ராஜ்பிரியா மற்றும் மாணவன் M.கெளசிக் ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளி அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். மாணவி R.அபர்ணா, மாணவன் M.P.தர்ஷன் மற்றும் S.ராகுல் ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.  மேலும் இதே பள்ளியில் மொத்த மதிப்பெண்களில் 500 க்கு 495 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும், 500 க்கு 490 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாணவர்களும் பெற்றுள்ளனர். மேலும் கணிதத்தில் 26 மாணவர்களும், அறிவியலில் 16 மாணவர்களும், சமூக அறிவியலில் 36 மாணவர்களும் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் 100  சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட சாதனை புரிந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதிமோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் M.சுரேஷ் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் K.சேகர், துணை முதல்வர்  G.நவீன்குமார் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தினர்.

Tuesday 24 May 2016

அம்மாவினால் நான், அம்மாவிற்காக எப்போதுமே நான், செந்தில் பாலாஜியின் டெக்னிக் புதுசு அல்ல, எப்போதும் ஒரே டெக்னிக் – வெளிச்சத்திற்கு வராத பல உண்மைகள்







அ.தி.மு.க வை அழிக்க அன்புநாதனை வைத்து ராஜதந்திரியாக வைத்து தி.மு.க தலைமை திட்டமா ? நத்தம் விஸ்வநாதனின் திட்டமா ?
செந்தில் பாலாஜியின் மேல் பழியை சுமத்திவிட்டு, கே.சி.பி –ன் பலத்தால் நடந்த சதுரங்க வேட்டை – மாவட்ட தேர்தல் கூடுதல் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடைபெற்ற குதிரை பேரம்
இந்திய அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தையே ஒரு கலக்கு கலக்கிய கரூர் அன்புநாதன் அ.தி.மு.க வின் நால்வரணியின் சொத்துக்களுக்கு பினாமியாவார் என்று கூறப்படுகிறது. ஐவர் அணி நால்வரணி ஆனது இறைவன் தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும், அது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியினால் தான் என்பது இந்த குற்றச்சாட்டு மேலிடம் வரை தெரிந்து எங்களின் பதவி பறிக்கப்பட்டதோடு, எந்த பலியாக இருந்தாலும், முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல் போட்டு விட்டு அன்புநாதனின் பணம் முழுவதும் கரூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க வினரின் செலவிற்கு எடுத்து செலவு  செய்து கடைசியில் அவர்கள் எதிர்ப்பார்த்த மாதிரி மூன்று தொகுதிகளில் ஒரு சட்டமன்ற தொகுதி ஜெயித்தே காண்பித்து விட்டனர் என்றால் அது அன்புநாதனின் பணமும், இங்குள்ள கரூர் கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமியின் பக்கபலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டுமென்றும், நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து நிற்கும் ஐ.பி என்கிற ஐ.பெரியசாமி தோற்க வேண்டுமென்றும் ரகசிய திட்டம் தீட்டி தி.மு.க விற்கு கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நல்லவனாகவும், அ.தி.மு.க விற்கு திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நல்லவனாகவும் இருக்கும் அன்புநாதன் ஒரு பெரிய சதுரங்க வேட்டையை நிகழ்த்தியுள்ளார்.
தமிழக முன்னாள் மதுவிலக்கு ஆயத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் என்பவர், அத்துறையை அவர் தகப்பனார் நிர்வகித்ததால் அதானி குழுமத்திடம் கையெழுத்திற்காக காத்திருந்தார். அப்போது தமிழக மின்வாரியம் அதானி குழுமத்திடம் இருந்து 4500 கோடி ஒப்பந்தம் மூலம் சூர்ய மின்சாரம் 648 மெகாவாட் தயாரிக்க திட்டம் தீட்டி இவர் அமைச்சராக இருந்த போதே கடந்த வருடம் கையெழுத்தும் போட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் முதலீட்டில், அதானி குழும நிறுவனங்கள், ஐந்து சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த வருடம் கையெழுத்தானது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 2014 செப்டம்பர், 12ம் தேதி நிர்ணயித்துள்ளபடி, யூனிட் ஒன்றுக்கு, 7 ரூபாய் ஒரு பைசா என்ற விலையில், சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.
அப்போது., அந்த வகையில், 436 மெகாவாட் அளவிற்கு, சூரிய சக்தி மின்சாரம் வாங்க, 31 உற்பத்தியாளர்களுடன், தமிழ்நாடு மின் வாரியம், ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.இந்நிலையில், அதானி குழும நிறுவனம் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் மதிப்பில், சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட், சூரியசக்தி மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின் வாரியம், முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் கடந்த வருடம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, இதுவரை மொத்தம், 1,084 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தில் சூரியசக்தி மின்சார உற்பத்தி நிறுவனங்களால், 7,588 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

மேலும் அந்நிகழ்ச்சியில் பேசிய., அதானி குழும நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் அதானி கூறும்போது, ''கமுதி சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், உலகில் ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ள, மிகப்பெரிய உற்பத்தி நிலையம்,'' என்றார்.
முதல்வர் கூறும்போது,''மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும். தமிழக அரசுக்கு, உங்கள் நிறுவனத்துடன் உள்ள உறவு தொடரும்,'' என்றார்.

ஒப்பந்தம் கையெழுத்தான போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சாய்குமார்
வரவேற்றார்.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நிறுவப்பட உள்ள சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்களில், உற்பத்தியாகும் மின்சாரத்தை, எடுத்து செல்ல,
*
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், 435.50 கோடி ரூபாய் மதிப்பில், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம்.
*
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, 47.51 கோடி ரூபாயில், 230 கி.வோ, புதிய முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையம் அமைக்கும் பணி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால்,
மேற்கொள்ளப்பட்டுள்ளது.ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், 208.50 கோடி ரூபாய் மதிப்பில், மின்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் துணை மின் நிலைய மேம்பாட்டுப் பணிகள், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை ஒப்பந்தங்கள் செய்துள்ள நிறுவனங்கள் தவிர, மேலும், 107 சூரியசக்தி மின்சார உற்பத்தியாளர்கள், 2,722.5 மெகாவாட் நிறுவு திறனுடைய, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் வாரியத்தில், பதிவு செய்துள்ளனர்.
அதில் மொத்தம், 1,132 மெகாவாட் திறனுள்ள, 53 உற்பத்தியாளர்களின் திட்டங்களுக்கான,
மின்னோட்ட பகுப்பாய்வு முடிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், நில ஆவணங்களை சமர்ப்பித்து, வைப்புத் தொகை செலுத்தியவுடன், மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் இதெல்லாம் பழைய கதை என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால் இதிலிருந்து அப்போதைய மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பதவி வகித்த நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான மகன் ஆர்.வி.அமர்நாத் உடைய இந்த பேரம் பேசப்பட்டு கமிஷன் தொகைகளை கரூர் அன்புநாதன் வீட்டில் வைத்தும், பின்பு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வைக்கப்பட்டும் அன்புநாதன் மூத்த அமைச்சர்களின் பினாமியாக செயல்பட்டு வந்தார். அதில் ஒருவர் நத்தம் விஸ்வநாதனும் அடங்குவார்.
அதாவது அயன் படத்தில் சூர்யா காங்கோவில் வைரம் கடத்தும் காட்சி நினைவிருக்கிறதா. அந்த வைரங்கள் எத்தனை மக்களின் உயிர்களை வாங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
வைரங்களுக்காக, கனிமங்களுக்காக ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு ஆப்பிரிக்க நாட்டில் ஒரு யுத்தத்தை நடத்தியிருக்கின்றன(1998-2003). இதில் சுமார் 54 லட்சம் மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். முடமானவர்கள், அனாதையான குழந்தைகள், இடம் பெயர்ந்த அகதிகள், வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் ஏராளம். இப்படிப்பட்டதொரு கொடூரமான போர் நடந்த நாடு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோலிய ஜனநாயகக் குடியரசு(Democratic Republic of Congo). ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரும் போர்களில் இது ஒன்று. காங்கோ(.கு) ஆப்பிரிக்காவின் முன்றாவது பெரிய நாடு. காங்கோ முன்பு ஸையர் (Zaire) என்ற நாமகரணத்துடன் இருந்தது. பெல்ஜியத்தின் காலனியாக இருந்த ஒரு நாடு. ஆறு கோடி மக்கள் தொகை. மத்திய ஆப்பிரிக்காவில் அங்கோலா, குடியரசு காங்கோ (இது வேறு காங்கோ), மத்திய ஆப்ரிக்கா குடியரசு, சூடான், உகண்டா, ருவாண்டா, புருண்டி, தான்சானியா, சாம்பியா இவ்வளவு நாடுகள் சூழ ஒரு பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வளமான நாடக இருந்தது. காங்கோ பெருநதியின் கடல் புகுவாய் இந்த நாட்டின் அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரமாக உள்ளது. அப்படி பட்ட காங்கோவில் நிலக்கரி சுரங்கத்திற்காக மூன்று இடங்களையும், தீவையும் வாங்கியுள்ளதாக தெரிவந்துள்ளது. மேலும் இந்த தீவிலிருந்து குப்பைகளாக வெளியேற்றப்படும் மூன்றாவது ரக நிலக்கரிகளை சென்ற முறை மின் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் நிலையத்திற்கு சப்ளை செய்யப்பட்டது. மேலும் கடந்த 2001 ல்  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த நத்தம் விஸ்வநாதன்,  பிறகு 2011 ல் அதே போக்குவரத்து துறை அமைச்சராக  இளைஞர் செந்தில் பாலாஜி பதவியேற்ற பிறகு நத்தம் விஸ்வநாதனின் முழு கவனமும், செந்தில் பாலாஜி மூலம் திரும்பியது. மேலும்  என்னால் (நத்தம் விஸ்வநாதனால்) முடியாததை கூட போக்குவரத்தில் பல மாற்றங்களை செய்ததோடு, அம்மா வாட்டர் என்று பயணிகளுக்கு புதிய திட்டத்தை உருவாக்கியது நாடளவில் பேசப்பட்டது. ஆதலால்  செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வைக்க நத்தம் விஸ்வநாதன் தரப்பும், ஒ.பி.எஸ். என்கிற ஒ.பின்னீர்செல்வம் தரப்பும் ஒன்று சேர்ந்தது.
மூத்த அமைச்சர்களின் பார்வை இவர் மேல் பட குறிப்பாக  ஒ.பன்னீர் செல்வம் பார்வை இவர் மேல் பட முதல்வர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவி வகித்த போது, சொத்து குவிப்பு வழக்கில் பார்ப்பன நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பாகி கைது செய்யப்பட்ட போது, தமிழக முதல்வர் யார் என்று ஆங்கில, ஹிந்தி, கன்னட மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் அதிகம் பேசப்பட்டவர் செந்தில் பாலாஜி ஏனென்றால் சிறுவயதிலேயே இருந்து அ.தி.மு.க வின் விரும்பி என்பதை விட அம்மாவின் உண்மை விசுவாசி என்பது தான் இன்று வரை, அதனால் இப்படி இருக்க முதல்வர் சீட்டில் அமரவைத்தது ஊடகங்கள் தான். இதை வியப்புடன் வேடிக்கை பார்த்த தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலாகிருஷ்ணன், ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பார்வை ஒரே தரப்பில் பார்க்கப்பட்டவர் செந்தில் பாலாஜி ஒருவரே ஆவார், ஆகவே நமக்கு தான் அந்த பொறுப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் செந்தில் பாலாஜி அதை தட்டி பார்க்கிறார். என்றும் அவர்களே கருதி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வைத்தார். எப்படி ஒரு இளைஞன் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா ? என்று அவரவரின் செயலாலும், முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பல முறை மந்திரியாக இருந்தவர்களும், அவர்களுடன் இணைந்த தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் இணைந்தது மட்டுமில்லாமல், செந்தில் பாலாஜிக்கு எதிராக திட்டம் தீட்டி பழி வாங்கத்துடித்தனர்.
அதில் முதல் காயை நகர்த்தினார். எப்படி தெரியுமா ?  முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஜெயிலுக்கு போகும் போது ஒ.பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக்கி விட்டு போவார். ஆனால் சென்ற முறை பெங்களூரு பார்ப்பன நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று கூறப்பட்டு ஆங்காங்கே சாலை மறியல், போராட்டங்கள், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தன. அந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போராட்டங்களை நடத்தி கர்நாடகா போலீஸாரால் அடித்து துவைக்கப்பட்டார். ஆனால் அங்கே இருந்த ஊடகங்கள் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மாநில ஊடகங்களால் பேசப்பட்டவர் ஷீலா பாலகிருஷ்ணன், செந்தில் பாலாஜி தான். ஏனென்றால் அ.தி.மு.க பொதுச்செயலாளரின் நம்பிக்கைக்கு உரியவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர் செந்தில் பாலாஜி, கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்த முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ததில் கரூர் தொகுதி முழு திருப்தி பெற்றுள்ளது என்றார். ஜெயலலிதாவிடம் பாராட்டு  பெற்றவர். அதனால் செந்தில் பாலாஜியின் பெயர் பரவலாக பரவியது. இந்நிலையில் செந்தில் பாலாஜியையும், அவரது துறையையும் பலத்தையும்  பறிக்க வேண்டுமென்றும், சமூக பிரச்சினைகளையும் காரணம் காட்டி, (கவுண்டர், தேவர்) தமிழகத்தை யார் ஆள வேண்டுமென்று கூறி, மல்லுக்கட்டு யுத்தமே நடத்தினர். இதில் மூத்த அமைச்சர்களால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், செந்தில் பாலாஜி அளவுக்கு அதிகமாக கட்சியின் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதை காண பிடிக்காத மூத்த அமைச்சர்கள் பொறாமையில் கட்சியின் எல்லை மீறும் காரணத்தை காட்டியும் புகாரை தலைமையிடம் தெரிவித்தனர். அப்போதும், ஜெயலலிதா நம்ப வில்லை. மேலும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக் கும் தி.மு.க விற்கும் தொடர்பு இருப்பதாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதனால் ஜெயா தரப்பிடம் குற்றம் சுமத்தப்பட்டது. பிறகு கொஞ்சம் ஜெயலலிதாவின் பார்வை அவர் மேல் பட செந்தில் பாலாஜியின் தமிழக போக்குவரத்து துறை பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் போனது. இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், டாக்டர் மு.தம்பித்துரை அவருக்கு ஆதரவாக இருக்க ஒரு நல்ல மாவட்ட செயலாளரை நியமித்தார். அப்போது ஒ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் பணத்திற்காகாக எதையும் செய்வார்கள் அன்புநாதனும், நத்தம் விஸ்வநாதனும் என்பதை அ.தி.மு.க வினரே மறந்து விட்டனர். என்னவென்றால் அதாவது, சுங்ககேட் வழியாக அப்போதைய அ.தி.மு.க அரசை பயன்படுத்தி கொண்டு தி.மு.க வை,. வீழ்த்துகிறோமோ ? அ.தி.மு.க வை நாம் வீழ்த்துகிறோமோ ? நன்கு நாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்று ஒ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதனும், அ.தி.மு.க விற்கு துரோகம் செய்து வருவதையும், மூத்த நிர்வாகிகள் இளைய தலைமுறையினரை வளர விடாமல் செய்கிறார்கள். இப்படி இருந்தால் நமது கழகத்தை (அ.தி.மு.க) எப்படி காப்பாற்றுவது என்று கவலையோடு அம்மாவிடம் செந்தில் பாலாஜி தரப்பில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புரிய வைத்தார். பின்னர் சுதாரித்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா ஐவர் அணியை உடைத்து, நால்வர் அணியாக மாற்றினார். அப்போது ஒ.பன்னீர்செல்வத்தின் ரெக்கமெண்டிலும், மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பித்துரையின் சிபாரிஷினாலும், கரூர் மாவட்ட புதிய அ.தி.மு.க செயலாளராக அவரால் பழிவாங்கபட்டதாக கூறும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை களமிறக்கினார்கள் அல்லவா ? அவரையும் பதவியை பறித்தார்கள். அவரின் பதவி பறிப்பிற்கும், செந்தில் பாலாஜிக்கும் சம்பந்தம் இல்லை. அதாவது மாவட்ட செயலாளராக அவர் இல்லா விட்டாலும் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும், அ.தி.மு.க வினருக்கும் இதுவரை எதாவது செய்ய வேண்டுமென்று அம்மாவின் பிறந்த நாளை கரூர் மாவட்ட அளவில் கரூர் சட்டசபை தொகுதி சார்பாக கொண்டாடினார்கள். அதில் ஒரு சில நிர்வாகிகள் வரவில்லை. எப்படியாக இருந்தாலும் அம்மாவிற்காக நான், அம்மாவால் நான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அவரின் செயல்பாடு இன்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் தற்போது மட்டுமில்லாமல் முன்னர் கடந்த 2011 ம் வருடம் முதல் ஆங்காங்கே மாவட்ட செயலாளர்கள் சிபாரிஸ் செய்தாலும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொடுக்கும் பரிந்துரையின் பேரிலையே அவரவருக்கு போஸ்டிங் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை ஒன்றிய குழு தலைவராக ராமலிங்கம் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கான பரிந்துரையை செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளர் ஆக இருந்ததால் தான் அந்த பதவி விஜயபாஸ்கருக்கு கிடைக்காமல் போய் விட்டது என்றும், தி.மு.க தரப்பில் கே.சி.பி தரப்பினர் தட்டி விட்டதோடு, அ.தி.மு.க வினரையும் நம்ப வைத்தனர். ஆனால் உண்மை கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பித்துரைக்கு ஒரு நல்ல ஆள் வேண்டும், மேலும் இந்திய அளவில் நாம் எவ்வளவோ, அரசியல் கண்டாலும் அ.தி.மு.க வில் குறிப்பாக கரூர் மாவட்ட அ.தி.மு.க வில் ஒரு அரசியல் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நாடகம். தான் இந்த காட்சிகள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அங்கம் வகிக்கும், காங்கிரஸ் கட்சி வேட்பாளார் பேங்க்.சுப்பிரமணியன் வாக்குகளுக்கு பணம் பட்டு வாடா நடைபெற்றதாகவும், அந்த பணம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணம் என்று அ.தி.மு.க வினரையே தி.மு.க வினர் நம்ப வைத்துள்ளனர் என்றால் அது எந்த அளவிற்கு என்றால் பாருங்கள். மேலும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான பேங்க்.சுப்பிரமணியனின் மகன் ஜெகதீஸ், கடந்த உள்ளாட்சி தேர்தலில் கரூர் நகராட்சி கவுன்சிலராக பொறுப்பெற்கவே சுமார் 60 லட்சம் செலவு செய்துள்ளார். அதற்கு தி.மு.க வின் கொடைக்குரிசில் கே.சி.பழனிச்சாமியின் பணமும், அப்போது பதவி வகித்த பல்லவன் கிராம வங்கி நிர்வாக இயக்குநராக இருந்த போது ஒரு பணம் வந்திருக்கும், அந்த பணத்தை கொண்டும், தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கே.சி.பழனிச்சாமியின் பணத்தை கொண்டும் காங்கிரஸ் வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியன் வாக்கிற்கு பணம் தர ஆரம்பித்தார்.
தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் அன்புநாதனின் வீடு மற்றும் தோட்டத்தில் பணத்தை மூட்டையாக மூட்டையாக பிடித்து கொடுத்தது செந்தில் பாலாஜி தான் என்று அன்புநாதன் கருதியும், மேலும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனக்கு எந்த வித உதவியும் செய்ய வில்லை என்று அன்புநாதன் கூறி, செந்தில் பாலாஜியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கரூர் சட்டமன்ற தொகுதியில் ஆளுகின்ற கட்சியை தவிர அவரை அதாவது அ.தி.மு.க சார்பில் களம் இறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோற்கடிக்க வேண்டுமென கருதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியனுக்கு ஒரு தொகை சுமார் ரூ 50 கோடி முதல் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதே நேரத்தில் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான செந்தில் பாலாஜி, அன்பழகனுக்கு துரோகம் செய்ததாக கூறி, அதே தொகுதியில் தி.மு.க தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமிக்கு தனது பணத்தை வாரி இறைத்தார். பண பலம் மற்றும் அரசியல் பலம் வாய்ந்த அன்புநாதனை பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதியே அறிக்கை விடும் பட்சத்தில் அதே தொகுதியில் பணம் பிடிக்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதியின் அதே கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ வும், வேட்பாளருமான கே.சி.பழனிச்சாமி வாய்திறக்க வில்லை. இது ஒன்றே நற்சான்று. மேலும் முழுக்க கரூர் தொகுதியில் அரசு அதிகாரிகளை பணத்தை வைத்து அன்புநாதன் ஆட்டம் போடவைத்தார். மேலும் பல கோடிகள் பிடி பட்ட நிலையில் கரூர் தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தனக்கு எந்த ஒரு உதவியும் செய்ய வில்லை. என்பது அவரது வாதம், தலைமையும், கட்சியும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு கட்டுப்படும் என்ற விதத்தில் மொளனம் காத்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை அன்புநாதன் பழி வாங்க காங்கிரஸ் வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியனுக்கு பல கோடிகள் கைமாறியதாகவும், அதில் செந்தில் பாலாஜியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் அ.தி.மு.க வை விட்டு தூக்கிவிடலாம் என்றும், பிறகு தி.மு.க வின் கோட்டையாக மாற்ற கே.சி.பி யும், அன்பழகனும் கூட்டுக் கொள்ளை நடத்தியதாக தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், இதையெல்லாம் தெரிந்த முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் தொகுதியை மாற்றி, ஐ.பி என்கிற ஐ.பெரியசாமி போட்டியிடும் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தது தான் வேடிக்கை. ரூ 500 கோடி ஆம்புலனஸ்சில் நத்தம் விஸ்வந்தானுக்கு பணம் பட்டுவாடா செய்ய கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்றதாக கூறி, அப்பகுதியின் மக்கள் விசுவாசியான அத்தொகுதியின் எம்.எல்.ஏ ஐ.பி என்கிற ஐ.பெரியசாமி சொல்லியும், அதே ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டதோடு, வாக்கிற்கு ரூ ஆயிரம் வீதமும், ரூ 2 ஆயிரம் வீதமும் பட்டுவாடா செய்தது வேடிக்கை. அதை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து பணம் பட்டுவாடா செய்யும் அன்புநாதனை ஏன் கே.சி.பி தட்டிக்கேட்க வில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி மட்டும் தான் அறிக்கை விட்டார். அதுவும் அரசியலுக்காக தான் என்கின்றனர் மற்ற அரசியல் வாதிகள். மேலும் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க இரண்டு பட்டால் தி.மு.க விற்கு கொண்டாட்டம் என்பது கரூர் மாவட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன் உதாரணம் தான் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் பணிமணையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய விஷயத்தையும், அந்த குற்றவாளிகளையும் இன்றும் மறைத்து பண பலத்தால் தேர்தல் கட்டுபாட்டில் இன்றும் அரவக்குறிச்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா எலெக்‌ஷனை ஒரு கலெக்‌ஷனாக கொண்டு வேலை செய்வது பத்திரிக்கையாளர்கள் கோணத்திலும் சமூக நல ஆர்வலர்கள் கோணத்திலும் ஒரே பார்வையாக உள்ளார். இதுவரை இவருக்கு அரசு கொடுத்துள்ள செல்போனில் இருந்து இன்று ஆயிரம் கால்களுக்கு ஒரு கால் மட்டும்  எடுப்பார். மேலும் துப்பாக்கி லைசன்ஸ் முதல், பட்டாசு கடை லைசன்ஸ் வரை பிரிட்ஜ், வாசிங் மெஷின் என என்னவெல்லாம் செய்ய முடியுமோ ? அவ்வளவு சாதித்து கொண்ட இப்பெண்மணி, இவரை போலவே ரேங்க் உள்ள மற்றொரு பெண்மணியான ஐ.பி.எஸ்.அதிகாரியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டேவையும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் இரண்டு பேரையும் மாட்டி விட்டு குளிர்காய்ந்தார். தேர்தல் ஆணையமும், தமிழக அரசு நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும், மாறி, மாறி அந்த சி.சி.டி.வி புட்டேஜ் எங்கே, எங்கே என்று டார்ச்சர் செய்ததில், ரெண்டு பேரையும் மாட்டி விட்டு அவர் தப்பியுள்ளார். என்னவென்றால்  கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்தக் கேமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும் அரசியல் செய்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அவரை வந்த பஸ்ஸிலேயே மாத்தி அனுப்பிய சக்தி இவர் ஒருவரையே சாறும். மேலும் அன்புநாதன் தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் என்னென்ன காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றி மக்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். கைப்பற்றப்பட்டது நாலரை கோடி ரூபாயா? 100 கோடி ரூபாயா?  அல்லது ரூ 500 கோடியா ? என்பதைப் பற்றி ஜெயலலிதா மக்களுக்கு விளக்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்தார். இதையே .தி.மு. பொதுச் செயலாளர் வைகோவும் வலியுறுத்தினார்.  இது குறித்து அப்பகுதி பிரமுகர் கூறியதாவது.,,,

" அய்யம்பாளையத்தில் 4 கோடியே 77 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் சொல்கின்றனர். இதுதவிர, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கொலுசுகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சேலைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இவை அனைத்தும் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டவை. திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணத்தை விநியோகிக்கும் முக்கிய சென்டர்  அன்புநாதனின் குடோன்தான். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பணத்தைக் கொண்டு வந்துவிட்டனர். இந்தக் குடோனுக்கு ஐவரணியில் பவர்புல்லாக இருந்த அமைச்சர்கள் இரண்டு பேர், ஆடி காரில் அடிக்கடி வந்து போயுள்ளனர். இவர்கள் வந்துபோன தடயங்கள் அனைத்தும் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளன. தவிர, மூத்த அமைச்சரின் மகன் வாரத்திற்கு இரண்டு முறை குடோனுக்கு வந்து போயிருக்கிறார். அதிகாரிகளிடம் பிடிபட்ட சி.சி.டி.வி ஆதாரம் மிக முக்கியமானது. இதை வெளியில் விடுவார்களா? என்று தெரியவில்லை.
கடந்த பதினைந்து நாட்களில் 12 தடவைக்கும் மேல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அய்யம்பாளையம் வழியாகச் சென்றுள்ளன. கரூர் பைபாஸ் சாலையில் பிடிபட்ட ஆம்புலன்ஸ் வண்டி பற்றி எந்தத் தகவலும் இதுவரையில் இல்லை. அன்புநாதனின் குடோனில் இருந்துதான் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் செலவுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. கடைசிநேரத்தில் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், பிடிபட்டவை அனைத்தும் மிச்சப் பணம்தான். அதிலும், அன்புநாதனின் பின்புலம் என்ன? அவரை இயக்கிய அமைச்சர்கள் யார்? என்ற தகவலையும் இதுவரையில் அதிகாரிகள் சொல்லவில்லை" என்றார் ஆதங்கத்தோடு. 

அன்புநாதனை அடுத்து எழும்பூரில் உள்ள பிரபலமான குடியிருப்பு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்தக் குடியிருப்பில் வசிக்கும் விஜய் கிருஷ்ணசாமியின் தந்தை விஜயகுமார், அமைச்சர் வைத்தியலிங்கத்தின் நண்பர் என்கிறார்கள். தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பில் இருக்கிறார் விஜயகுமார். இவர் வீட்டில் இருந்து வருமானவரித்துறை உதவி ஆணையர் சஞ்சய்காந்தி தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். நேற்று இரவு நீண்டநேரம் நடந்த ரெய்டில், கணக்கில் காட்டப்படாத ஐந்து கோடி ரூபாய் மற்றும் பணம் எண்ணும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சர் வைத்தியலிங்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட இருந்த பணம் இது என்கின்றனர் அதிகாரிகள். மிகப் பிரமாண்டமான இந்தக் குடியிருப்புக்கு வந்து சென்ற அமைச்சர்களின் விவரமும் சி.சி.டி.வியில் பதிவாகியிருக்கிறதுஇதைப் பற்றியும் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றன அரசியல் கட்சிகள். 

சி.சி.டி.வி காட்சிகள் அம்பலமானால், எத்தனை வாகனங்களில் பணம் கடத்தப்பட்டது? ஆடி காரில் வந்த அமைச்சர்கள் யார்? என்ற தகவலும் மக்கள் மன்றத்திற்குத் தெரியும். ஆணையத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். 

இதில் வேடிக்கை என்னவென்றால் கரூர் கே.சி.பி யும், அன்புநாதனும் சேர்ந்து செந்தில் பாலாஜியை முடித்து கட்ட சதி செய்த வேலையில் கரூர் கே.சி.பழனிச்சாமி வீட்டிலும் ஒரு ரைடு நடந்தது. அந்த ரைடில் ரூ 4.69 கோடி பணம் பிடிப்பட்டுள்ளது. அது அவரது மகன் சிவராமனின் கவனத்திற்கு எடுத்து சென்று மாமுல் வாங்கிய மாவட்ட கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா, அவரது மாமுல் வாங்கிய பட்சத்திற்காக கேஷ் ஒன்றும் போடாமல் விட்டு விட்டார். ஆனால் சென்னையில் அடுத்த நாள் ரைடில் சுமார் 1.50 கோடி பிடிப்பட்டுள்ளதாக நல்ல அதிகாரிகள் தெரிவித்தையடுத்து அன்று மதியமே கே.சி.பழனிச்சாமி, நிருபர்களிடம் நான் இத்தனை கோடி வருமான வரி கட்டுகிறேன். மேலும் எனது செலவிற்காக வீட்டில் சுமார் 3 கோடி இருப்பது இயல்பே என்று கூறிய அவர் மீது ஏன் மாவட்ட நிர்வாகமும், கரூர் மாவட்ட தேர்தல் ஆணையமும், நடவடிக்கை எடுக்க வில்லை என்று தான் தெரியவில்லை. தற்போது கூட, கரூர் கே.சி.பியும், அன்புநாதனும் ஒரே பாணியில் செயல்பட்டு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாணியில் அ.தி.மு.க வினரையே தூண்டு விடுகின்றனர். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் நிலைமை கரூர் மாவட்ட அ.தி.மு.க வினருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால் கரூர் கே.சி.பி மற்றும் அன்புநாதன் யார், அவர்களுக்கு என்ன உறவு, எப்படி இவர்களிடம் இவ்வளவு பணம் வந்ததை சி.பி.ஐ விசாரிப்பதற்கு முன்னர் தமிழக அரசும் தீவிர விசாரணை நடத்துவதோடு, அ.தி.மு.க கட்சியில் தான் அன்புநாதன் இருப்பதாக கூறும், அந்த அன்புநாதனை கட்சியில் விட்டு விலக்குவதோடு, அரவக்குறிச்சியில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும், விரைவில் கரூர் மாவட்டத்திற்கு நல்ல ஒரு மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டுமெனவும் அது இளைய தலைமுறையாக இருக்க வேண்டுமென்று பொது நல ஆர்வலர்களும், அ.தி.மு.க வினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே பகையை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காயும் தி.மு.க கட்சி மீதும், அன்புநாதன் போன்ற புல்லுருவிகளை அம்மா நடவடிக்கை எடுப்பாரா ? பொறுத்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர்.