Sunday 31 January 2016

தாய்மார்களே ! பெரியோர்களே !!! அம்மா சாதனைகள் குறித்து பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்தது தேர்தல் களம் முதன்முறையாக கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க வினர்கள்



தாய்மார்களே ! பெரியோர்களே !!! அம்மா சாதனைகள் குறித்து பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்தது தேர்தல் களம் முதன்முறையாக கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க வினர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தென்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும்  சட்டமன்ற தேர்தல் வருவதையடுத்து கூட்டணி பேரங்கள் ஒரு புறம் இருக்க, நாங்கள் தான் முதல்வர் வேட்பாளர் என்று பா.ம.க வினரும், கூட்டணி என்றும் மக்கள் நல கூட்டணியாக வை.கோ வை வைத்தும், நாங்கள் இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்காது என பாரதீய ஜனதா கட்சியினரும் ஆங்காங்கே தம்பட்டம் அடித்து வரும் நிலையில், அ.தி.மு.க வினரின் அதே பாணியில், தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் உத்திரவிற்கிணங்க நல்லாட்சி மீண்டும் தொடர்ந்திட அன்பு – அமைதி – வளர்ச்சி தமிழகத்தில் தொடர்ந்து நிலைத்திட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு என்ற வாசகங்கள் கொண்ட அ.தி.மு.க சாதனை பிரச்சாரத்தை துவக்கினார்கள். கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த துண்டு பிரச்சூரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் கரூர் பேருந்து நிலையம், மண்மங்கலம், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பல பகுதிகளில் துண்டு பிரச்சூரங்கள் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பித்துரை கரூரில் துவக்கி வைத்ததோடு, அவரும் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும், பிற அணி நிர்வாகிகள் ஏராளாமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திலும் அ.தி.மு.க நெ 1 தான் என்பதை நிருபித்து காட்டியுள்ளதாக மற்ற கட்சியினர் மட்டுமில்லாமல் அ.தி.மு.க வினர் பெருமை பட்டு வருகின்றனர்

தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை பாஜக தலைமை முடிவெடுக்கும்: பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல்



தமிழக தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, பிப்ரவரி 2-ம் தேதி வருகிறார். அன்றைய தினம் கொடிசியா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கும் இந்த பொதுக்கூட்டம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும். மோடியின் டிஜிட்டல்மயம் திட்டத்தால் மத்திய அரசுத் துறைகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் மத்தியில் ஊழல் இல்லா அட்சி நடைபெறுகிறது.
இதேபோல், தமிழகத்திலும் ஊழல் இல்லா ஆட்சி வேண்டும். அதற்கு, பாஜக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். தமிழக தேர்தலைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவும் எடுக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் எல்லாம் தேர்தலின்போது தகர்த்தெறியப்படும். தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக மூத்த அமைச்சர்கள் 10 பேர் வர உள்ளனர் என்றார்.

அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணம்: பிப். 10ல் நடத்தி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா


அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா வருகிற 10 ஆம் தேதி சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கிறார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வருகிற 10 ஆம் தேதி காலை 11 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கழக நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமையேற்று நடத்திவைக்கிறார்கள்.
திருமணம் நடைபெறும் நிர்வாகிகள் விவரம்:
1. கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் மகள் திருமணம்
2. திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான ஆர். காமராஜ் மகன் திருமணம்.
3. தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மகள் திருமணம்.
4. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் மகள் திருமணம்.
5. கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.வைரமுத்து மகள் திருமணம்.
6. கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி மகள் திருமணம்.
7. நீலகிரி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், உதகமண்டலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புத்திசந்திரன் மகள் திருமணம்.
8. திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் மகள் திருமணம்.
9. காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என். ராமச்சந்திரன் மகன் திருமணம்.
10. வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியக் கழகச் செயலாளரும், வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோவி. சம்பத்குமார் மகன் திருமணம்.
11. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் ஒன்றியக் கழகச் செயலாளரும், வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செய்யாவூர் வே.குணசீலன் மகன் திருமணம்.
12. மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா மகள் திருமணம்.
13. வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜா ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், திருப்பாற்கடல் ஊராட்சி மன்றத் தலைவருமான எம்.ஜி.கே. தனஞ்செழியனின் திருமணம்.
14. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் மகள் திருமணம்.
கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மழை, வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா? - பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை





பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். அதனால் தான் 5 ஆண்டுகளாக எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.
ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.
அப்போராட்டத்தில் நான் பங்கேற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். அதன்பிறகும் அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளை ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும் நடத்தவுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் ஒரு கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.
அதேபோல், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 60 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அந்த போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டால் ஒட்டுமொத்த நிர்வாகமும் நிலைகுலைந்து விடும். தமிழகத்திற்கோ, தமிழக மக்கள் நலனுக்கோ இது எந்த வகையிலும் நல்லதல்ல.
தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறை மூலம் கைது செய்திருக்கிறது. அதேபோல், தங்கள் கோரிக்கைகள் பற்றி விளக்குவதற்காக சந்திக்க வந்த அரசு ஊழியர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் பல மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தங்களை சந்தித்த அரசு ஊழியர்களிடம் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அரசு ஊழியர்களின் உண்ணாநிலை போராட்டம் உறுதியாகியுள்ளது.
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்,‘‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றவில்லையோ, அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தம் மேற்கொண்ட அரசு ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்ததுடன், ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெயலலிதா, இன்னும் திருந்தவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஜெயலலிதா வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்ற மாட்டார்.
தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசி, சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

ஊழலை சுட்டிக்காட்டுபவரை தாக்குவதா? - பழ.கருப்பையா மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம் - நேரில் பார்த்து நலம் விசாரித்த வை.கோ


கடந்த புதன் கிழமை அன்று [27-01-206] அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, வியாழக்கிழமை அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.
மேலும், அரசுக்கு எதிரான தனது அதிர்ப்தியையும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு நாட்டை சூறையாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ.கருப்பையாவின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு 11 மணி அளவில் தாக்குதல் நடத்தினர்.
இதில், அவரது வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியெறிந்ததில் கடுமையாக சேதம் அடைந்தன. மேலும், அந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடிகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ’’தமிழ்நாட்டில் பாசிச வெறி பிடித்த காட்டாட்சி நடக்கிறது. அதன் விளைவாகத்தான் அனைவராலும் மதிக்கப்படும் அன்புச் சகோதரர் பழ.கருப்பையா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் வன்முறையின் மூலம் அச்சுறுத்தி மிரட்டுகின்ற காலித் தனத்தில் அண்ணா திமுக குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று நிலவி வரும் அரசாங்கத்தின் ஊழலைச் சுட்டிக் காட்டி உண்மைகளை எடுத்து வைத்ததால், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ஜனநாயக நெறி சார்ந்த முடிவெடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்தார்.
நேற்று நள்ளிரவில் ஆளும் கட்சி ரௌடிகள் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிட முயன்று, வீட்டுக்குள் இருந்த அவர்களை வெளியே வரச்சொல்லி கூச்சலிட்டவாறு வீட்டுக் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் மீது கற்களை எறிந்து உடைத்துள்ளனர். அவரது காரை உடைத்து நொறுக்கியுள்ளனர். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வசைபாடி மிரட்டிச் சென்றுள்ளனர். 
வேலூர் மாநகரில் அவர் தொடங்கி வைப்பதாக இருந்த தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர் உயிரோடு திரும்ப முடியாது, கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.
எனவே பழ.கருப்பையா அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை எதேச்சதிகாரம் தலைதூக்கி வருகிறது. பத்திரிகைகளை மிரட்டுவது, நியாயமான விமர்சனங்களுக்கும் அவதூறு வழக்கு போடுவது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
பழ.கருப்பையா என்ற ஒரு தனி மனிதர் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை எவர் மீதும் பாயும். ஜனநாயகம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரம், நடமாடும் உரிமை இவற்றுக்கெல்லாம் இந்த ஆட்சியில் பேராபத்து வளர்ந்து வருகிறது.
பழ.கருப்பையா அவர்கள் புகார் கொடுக்கவில்லை என்றாலும், இந்த வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களை காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து, உரிய முறையில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினரின் வன்முறைச் செயலுக்கு எனது பலத்தகண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பின்பு இன்று காலை பழ.கருப்பையாவின் இல்லத்திற்கு சென்ற ம.தி.மு.க பொது செயலாளர் வை.கோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதி: பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இன்று (ஞாயிறு) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், வரும் தேர்தலில் தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் பாமக தலைமையில் தனித்துப் போட்டி என உறுதி செய்துள்ளோம். இதை பத்திரத்தில் எழுதிக்கொடுக்கக் கூட தயாராக உள்ளேன் என கூறியவர், அருகே உள்ள கட்சிக்காரர்களிடம் பத்திரம் வாங்கி வந்தீர்களா என கேட்டார்.

மேலும் பேசிய அவர், தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்துதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீனவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 9,988 கொலைகளும், 98 ஆயிரத்திற்கு மேல் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படித்தான் சீரழிந்துள்ளது தமிழகம்.

சாதி சங்கங்கள் தேர்தலின்போது ஆங்காங்கே தங்களது கொள்கைகளை முன்னிறுத்தி மாநாடுகளை நடத்துகின்றன. எங்களை பொறுத்தவரை அது தவறில்லை. திமுக மற்றும் அதிமுக தனித்துப் போட்டி என அறிவிக்கவில்லை. நாங்கள் தனித்துப்போட்டி என அறிவித்துள்ளோம். அந்தளவுக்கு நாங்கள் பலமாக உள்ளோம். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளையும் சேர்த்து போட்டியிடுகிறோம். எல்லா கட்சிகளுக்கும் எங்கள் கட்சியே மாற்று அணியாக செயல்படுகிறது என்றார்.

மக்கள் நலக் கூட்டணி என்றவுடன், அப்படி ஒரு கூட்டணி இருக்கா என்றார். பாமக கூட்டணியில் உள்ளது என பாஜக கூறுகிறதே என்ற கேள்விக்கு பதில் கூறாமல் கட்சியினருடன் புறப்பட்டார் ராமதாஸ்.

பெற்ற மகள்களை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாய் ச் சே பகிரங்க பேயா ? உண்மையில் நிகழ்ந்த சோகம்



அமெரிக்காவில் பெற்ற மகள்களை கள்ளக் காதலனை விட்டு கற்பழிக்க வைத்த தாயின் கொடூர செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமிகளின் தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாயாரின் கள்ளக்காதலனுக்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள ஓஹிஹோ மாகாணத்தை சேர்ந்த பெண்ணிற்கு 9 மற்றும் 11 வயதான இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த பெண்ணிற்கு அமெரிக்காவின் விர்ஜின் தீவில் கள்ளக்காதலன் ஒருவன் இருந்துள்ளான்.
 
இந்நிலையில், ஒரு நாள் உன்னுடைய மகள்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று கள்ளக்காதலன் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளான். அதற்கு அந்த அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, தன்னுடைய இரண்டு மகள்களை அடித்து துன்புறுத்தி நிர்வாண படுத்தி கட்டிலில் கட்டிப்போட்ட உள்ளார், அப்போது, அந்த பெண் தன்னுடைய. ஆசை காதலனை கற்பழிக்க அனுமதித்துள்ளார்.
 
இதுபோல், பல நாட்களாக மகள்களை நிர்வாண கோலத்தில் கட்டிலில் கட்டியவாறு அந்த பெண்ணும், அவளுடைய கள்ளக்காதலனும் பல சித்ரவதைகளை செய்து வந்துள்ளனர்.
 
ஆனால், பள்ளி பாடங்களை இணையதளம் மூலம் படிக்க மட்டும், தனது மகள்களை கட்டிலிலிருந்து அவர் அவிழ்த்து விட்டு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவரது மகள்களில் ஒருவர், நேற்று தன்னுடைய அம்மாவிற்கு தெரியாமல் தனது ஆசிரியருக்கு தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி மின்னஞ்லில் அனுப்பியுள்ளார். இதைப்பாடித்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாரை உடனடியாக தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார். 
 
இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமிகளை மீட்டதுடன், அவரது தாயார் மற்றும் அவளுடைய கள்ளக்காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் மீது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல், பாலத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்
 
இந்த வழக்கு ஓஹிஹோ மாகாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமிகளின் தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாயாரின் கள்ளக்காதலனுக்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுமென எதிர்பார்ப்பு


முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 28 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டுகள் நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்கள், வெள்ள நிவாரண பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும். பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது
 
மேலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை கூட்டத் தொடர் பிப்ரவரி 2வது வாரம் தாக்கல் செய்ய இருக்கிறது. எனவே, இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட திருத்தம் கொண்டுவருவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 3 மாணவிகள் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி எஸ்பியிடம் ஒப்படைப்பு




கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர் பான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் வசம் சின்னசேலம் போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதி மன்றத்துக்கு மாற்றக் கோரி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன் றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 பேரும் கடந்த 23-ம் தேதி கிணற்றில் இருந்து பிணமாக சின்னசேலம் போலீஸாரால் மீட்கப் பட்டனர். 3 மாணவிகளும் தற் கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதை பெற்றோர் ஏற்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி தாளாளர் வாசுகியின் மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகிய இருவரையும் 25-ம் தேதி சின்ன சேலம் போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் நீதிமன்றத்தில் தாளா ளர் வாசுகி 26-ம் தேதி சரண டைந்தார். வாசுகியை கள்ளக் குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிப்ரவரி 4-ம் தேதி வரை வாசு கியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி நேற்று காலை விழுப் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவல கத்துக்கு வந்தார். மாணவிகள் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஒப்படைத்தார். பின்னர், விழுப்புரம் எஸ்பி நரேந் திர நாயரை நாகஜோதி சந்தித்து வழக்கு விவரம் கேட்டறிந்தார்.
இந்த வழக்கு விசாரணையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத் தில் சிபிசிஐடி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கு விசாரணையை சிபிசிஐ டிக்கு மாற்றியதால் நேற்று முன் தினம் போலீஸ் காவலுக்கு அனுப் பப்பட்ட வாசுகியை நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில், கடலூர் பெண்கள் மத்திய சிறைக்கு வாசுகியை போலீஸார் அழைத்துச் சென்றனர். எனவே, வாசுகியை சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை (பிப்.1) சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி தகவல்



பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;- 

*நமது சுதந்திரத்துக்கும் கதர் ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

*ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இந்தியவர்கள் அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்

*ஓவ்வொரு இந்தியனும் காதி உடைகள் பயன்படுத்த வேண்டும் என்பது காந்தியின் ஆசையாக இருந்தது.

*காதி உடைகள் தற்போது இளைஞர்களையும் கவருவதாக உள்ளது.

*காதி பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*தீவிரவாத அச்சுறுத்தலையும் தாண்டி சமீபத்தில் குடியரசு தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளோம் , 

*அரியானா மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

*அங்கு கொண்டு வரப்பட்டுள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கல்வி முக்கியத்துவம் பாராட்டத்தக்கது .

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர்க்காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கான வரப்பிரசாதம் ஆகும் . 

*இந்த திட்டத்தில் வரும் இரண்டு ஆண்டுகளில் 50 சதவீத விவசாயிகள் மத்திய அரசின் பயிர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம் .

*விவசாயிகளுக்கு பயிர்க்காப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். 

*மேன் கி பாத் நிகழ்ச்சியை அவரவர் மொழியில் கேட்க வழி வகை செய்யப்படும் . 

*மொபைல் போன் மூலமும் இந்த பேச்சு கேட்க வழி வகை செய்யப்படும் 

*சமீபத்திய ஸடார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் பலர் பயன் பெறும் நிலை உருவாக்கியுள்ளோம்

* அடுத்த மாதம் உங்களை நான் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday 28 January 2016

புலியூர் செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியில் ஆண்டு விழா 29, 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது


கரூர் அருகே உள்ள புலியூர் செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியின் முதல்வர் வித்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்

கரூர் பரணிபார்க் கல்விக்குழுமத்தில் சாரண, சாரணீயத்தில் "முயல் குட்டி" பிரிவிற்கு சின்னம் சூட்டு விழா


பரணிபார்க் கல்விக் குழுமத்தில் கே.ஜி வகுப்பு மழலைகளுக்கு சாரண, சாரணீயத்தில்  "முயல் குட்டி" பிரிவில் "சின்னம் சூட்டும் விழா" நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் சாரண மாவட்டத்தின்  முதன்மை ஆணையரும், பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளருமான S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார்பரணிபார்க் சாரண மாவட்டத்தின் சாரணீய ஆணையரும், பரணிபார்க் கல்விக் குழுமத்தின் செயலாளருமான பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.

பரணிபார்க் மாவட்டத்தின் சாரண ஆணையரும், பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வருமான முனைவர் C.ராமசுப்பிரமணியன்  பேசுகையில் "முயல் குட்டி" சின்னம் சூட்டும் விழாவிற்கான விளக்கத்தையும், சாரண, சாரணீய இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார். மேலும் சிறுவயதிலிருந்தே மாணவ, மாணவிகளை சாரண, சாரணீயத்தில் இணைப்பதன் மூலம் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பெரியோர்களை மதிக்கும் நற்பண்பு, பிறர்க்கு உதவும் பண்பு, தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளுதல் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவை மேலோங்கும் என்பதில் ஐயமில்லை என்று கூறினார்.

பரணிபார்க் சாரண மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக நடைபெற்ற சின்னம் சூட்டும் விழாவில்  316 மழலையர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.  316  "முயல் குட்டி" பிரிவு மழலையர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான  ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக்குழுமத்தின் நிர்வாக அலுவலர் M.சுரேஷ் மற்றும் பரணிபார்க் மாவட்டத்தின் சாரணீய செயலர்  R.பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை பொலிவுறு நகரங்களாகின்றன: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பு


பொலிவுறு நகரங்கள் குறித்து வெங்கய்ய நாயுடு இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத் தலைநகர் சென்னை மற்றும் கோவை நகரங்கள் பொலிவுறு நகரங்களாக உருவாகப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பொலிவுறு நகரங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, பொலிவுறு நகரங்களாகும் முதல் 20 நகரங்களில் 5 மாநிலங்களின் தலைநகரங்களும் உண்டு. 20 நகரங்களில் 3.5 கோடி பேர் உள்ளனர். இந்த பொலிவுறு நகரங்களில் 1.52 குடிமக்களின் பங்களிப்பு உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை பொலிவுறு நகரங்களாகின்றன என்று அவர் தெரிவித்தார்.

எஸ்.வி.எஸ். கல்லூரி நிர்வாகத்தை காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அமைச்சர்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு


இந்திய வரலாற்றில் பெரும் மர்மத்தை ஏற்படுத்திய "எஸ்.வி.எஸ். கல்லூரி நிர்வாகத்தை காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக அமைச்சர் பி.மோகன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லையென்றும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறியும் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரை 6 முறை சந்தித்து எந்த பயனும் கிடைக்காத நிலையில் தீக்குளிப்பு போராட்டம் என இறுதியாக விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்கிற முயற்சியிலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கையை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்பிறகு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு கல்லூரியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள், உயர்ந்த கட்டணம் ஆகியவை குறித்து அறிக்கை வழங்கியது.
ஆனால், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத துணைவேந்தர் தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்குகிற அங்கீகாரத்தை மட்டும் அந்த கல்லூரிக்கு வழங்கியதன் பின்னணியில் அதிமுக ஆட்சியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அந்த பகுதியைச் சேர்ந்த ஊரக தொழில்துறை அமைச்சர் பி. மோகன் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
மேலும், இத்தற்கொலை நிகழ்ந்த பிறகு இதுவரை அமைச்சர் மோகன் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவிகளை சந்திக்காமல் இருப்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. அதுமட்டுமல்லாமல், அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியம் அமைச்சர் மோகனுக்கு நெருங்கிய உறவினர் என்கிற காரணத்தால்தான் ஆட்சியாளர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும், வாசுகி சுப்பிரமணியம் அதே கல்லூரியில் படிக்க முற்பட்டவர், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தேர்ச்சி பெறாத நிலையில் கல்லூரியின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை திருமணம் செய்து கொண்டு கல்லூரியின் தாளாளராக உயர்வு பெற்ற அதிசயம் அங்கே நிகழ்ந்துள்ளது. அதேபோல பல மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கும், போலி ஆவணங்கள் வழங்குவதற்கும் பெரும் பணம் பெற்றுக் கொண்டதாகவும் அவர்மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.
அந்த கல்லூரி நிர்வாகத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்கொள்ள ஆதிதிராவிடர் புரட்சிக் கழகத்தின் தலைவராக உள்ள வெங்கடேசன் என்பவரை பயன்படுத்தி மாணவர்கள் அச்சுறுத்தி, மிரட்டி அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய உபாயங்களை கையாண்ட நிலையில் இதை எதிர்கொள்ள வேறு வழியில்லாத நிலையில்தான் இறுதியாக கடும் மனஉளைச்சல் காரணமாக 3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 24 ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டாவது மாடியிலிருந்து சண்முகபிரீதா என்கிற 19 வயது மாணவி கீழே விழுந்து பலியான கொடுமை நிகழ்ந்துள்ளது. அதையொட்டி நேற்று அதிராமபட்டிணத்தில் பேராசிரியர்களின் ஓய்வறையில் மாணவி சுலோச்சனா தற்கொலை செய்து கொண்ட சோக செய்தி வெளிவந்துள்ளது. ஆக தொடர்ந்து தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை என்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு, தற்கொலை நாடாக மாறிவிட்டதைத் தான் இத்தகைய சம்பவங்கள் உறுதி செய்கின்றன.
எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கீகாரம் பெற்று கல்லூரி நடத்தியதன் விளைவாக இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. உரிய விசாரணைகள் மேற்கொள்வதற்கு முன்பாக எஸ்.வி.எஸ். கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அதில் படிக்கும் 130 மாணவ - மாணவியர்களை வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, எஸ்.வி.எஸ். கல்லூரியில் நிகழ்ந்துள்ள மூன்று மாணவிகளின் தற்கொலை குறித்து பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்தகைய விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பதன் மூலமாகத்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் கொண்டுவர முடியும்.
அத்தகைய விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக இக்கொடுமைக்கு முழுப் பொறுப்பேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உடனடியாக பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்.
இப்படுகொலைக்கு காரணமாக கல்லூரி நிர்வாகத்தை காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக அமைச்சர் பி. மோகன், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மனைவியின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலுடன் சேர்த்து கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படை ஆட்கள் என 4 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து கரூர் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு



கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸ் சரகம், நடுவதியம் பகுதியில் வசித்தவர் கருணாமூர்த்தி இவர், அப்பகுதியில் கூலித்தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த 2013 ம் ஆண்டு அவருக்கு (வயது 33), இவரது மனைவி தமிழ் செல்வி, இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிய நிலையில் அதே பகுதியை சார்ந்த பஷீர் முகமது என்பவருக்கும், தமிழ் செல்விக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்த கணவன் கருணாமூர்த்தியை, தமிழ் செல்வியும், அவரது கள்ளக்காதலுனமாக பஷீர் முகம்மது மற்றும் பஷீர் முகம்மதுவின் நண்பர்களான கிருஷ்ணராயபுரம் பகுதியை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டு சதி செய்து திட்டமிட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து. குற்றம் சட்டப்பட்டவர்கள் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் விரைவு மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், சதி திட்டம் தீட்டியது, திட்டமிட்டு கொலை செய்தது என மேற்கண்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு, ரூ 2 ஆயிரம் அபராதத்தொகையையும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர். கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலுடன், மனைவியே கூலியாட்கள் வைத்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் மட்டுமில்லாமல் நீதிமன்ற வரலாற்றிலேயே மிகுந்த   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேட்டி


அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா இன்று ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து என்னை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் நான் இன்றைய அரசியல் நிகழ்வுகளைத்தான் பேசினேன். அதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. என்னை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதால் நான் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனது எம்.எல்.ஏ. பதவியை இன்றே ராஜினாமா செய்து விட்டேன்.

இன்று நடக்கும் பத்திரிகை யாளர் சந்திப்பு முதல்- அமைச்சர் அம்மாவுக்கு எதிரானது அல்ல. இந்த ஆட்சியில் மதுவினால் பெரும் கேடு ஏற்படுகிறது. மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறும் கருத்தை ஏற்க இயலாது. மதுவைத் திறந்த கருணாநிதியே அதை மூடுவதாக அறிவித்துள்ளார். எல்லா தலைவர்களும் மது விலக்கு வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறார்கள்.

என் வாழ்வின் முதல் சிறை வாசம் கூட மது விலக் குக்காகத்தான் இருந்தது. முதல்-அமைச்சர் அம்மா வின் அரசியல் அணுகு முறை எனக்கு பழக்கப்பட வில்லை.
எனவேதான் என்னை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார்கள். அது நியாயமானதுதான்.

அ.தி.மு.க.அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து என்னை முதல்வர் அம்மா நீக்கியுள்ளார். இந்த தகவலைக் கூட நமது தொலைக்காட்சி நண்பர்கள்தான் தொலைப்பேசியில் இரவு எனக்குத் தெரிவித்தனர்.அவர் என்னை கட்சியல் இருந்து நீக்கியதாக அறிவித்ததை மனப்பூர்வமாக ஏற்கிறேன். என்போது அவர் என்னை கட்சியில் இருந்து நீக்கினாரோ, அப்போது எனது காரில் இருந்து கட்சிக் கொடியை எடுத்துவிட்டேன்.

நான் எனது மனசாட்சிப்படி நடந்து கொள்வதால், எப்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டேனோ, உடனே எனது கைப்பட ராஜினாமா கடிதத்தையும் எழுதி விட்டேன். அதைக் கொடுக்க முடியவில்லை.மேலும் நான் எம்.எல்.ஏ. பதவிக்கு வர அம்மாதான் காரணம். தேர்தலுக்கு முன்பே என்னை எம்.எல்.ஏபதவிக்கு வர அம்மாதான் காரணம் தேர்தலுக்கு முன்பே என்னை எம்.எல்.ஏ.வாக வேண்டியவர் நீங்கள் என்று சொல்லி தேர்தலில் நிறுத்தியவர்கள்.

அவரும், அ.தி.மு.க. தொண்டர்களும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால் எம்.எல்.ஏ. ஆனது வெறும் கவுரவத்துக்காக அல்ல. நாம் எதிர்க்கட்சியாக இருந்து எதை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கிறோமோ, அதை ஆளும் கட்சியாக மாறி சாதிக்க வேண்டும் என்றுதான். ஆனால் அது முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்

அண்ணன் சொல்ற சேதி கொஞ்சம் கேளுங்க ! எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை: மு.க.அழகிரி தகவல்


எனது பிறந்த நாளை நான் எங்கும் கொண்டாட விரும்பவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜன. 30-ம் தேதி தனது பிறந்த நாளை, மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவார். ஆனால், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் குறித்து எவ்வித ஏற்பாடும், தகவலும் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மு.க. அழகிரி வெளியிட்ட அறிக்கை:
என் மீது அன்பும், பாசமும், கொண்ட நண்பர்களுக்கும், ஆதரவா ளர்களுக்கும், தம்பிமார் களுக்கும் வேண்டுகோள். தமிழகம் முழுவதும் இருந்து, இந்த ஆண்டு எனது பிறந்தநாள் மதுரையிலா, சென்னையிலா என்று விசாரித்த வண்ணம் உள்ளீர்கள்.
மேலும், ஊடகங்களும் எனது பிறந்தநாள் குறித்து பல்வேறு செய்திகளை வெளியிடுகின்றன. இந்த ஆண்டு, சமீபத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜன. 30-ம் தேதி எனது பிறந்தநாளை எங்கும் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் என் நண்பர்களும், ஆதரவாளர்களும், தமிழகம் முழுவதும் தொடர்ந்து எனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். உங்களின் வாழ்த்துகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறோம்: சமத்துவ மக்கள் கட்சியை உடைக்க சதி - சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் பேட்டி


சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தலைமை நிலைய செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு உள்ளிட்ட 7 கட்சி நிர்வாகிகள் திடீரென விலகி பா.ஜனதாவில் இணைந்தனர்.
இந்த நிலையில் அந்த கட்சியின் துணைத்தலைவரும், நாங்குனேரி எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் டெல்லி சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலருடன் பா.ஜனதாவில் இணைந்து உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கட்சிக்கு புறம்பாக செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் போது கட்சியை உடைக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது தெரிகிறது. எனவே புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கும், சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்கும் இன்றைய அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர்களை தவிர அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், புது உத்வேகம் அளிக்கும் வகையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளோம்.
சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் அனைத்து தொண்டர்களுமே முதல்–அமைச்சராகவோ, மந்திரிகளாகவோ ஆகும் வகையில் வளர்க்கப்படும் கட்சியாகும்.
4½ ஆண்டுகளாக கட்சியில் இருந்து விட்டு பிரிந்து சென்றவர்கள் கட்சிக்காக என்ன செய்தோம் என்பதை மனசாட்சியுடன் நினைத்து பார்க்க வேண்டும்.
கேள்வி: தி.மு.க. அணியில் சேர்வதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஒவ்வொரு கட்சியும் எந்த திசையில் பயணிக்க போகிறது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் கேட்கிறீர்கள்.
சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. அணியிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. தேர்தல் தொடர்பாக எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. எனவே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.
கே: அ.தி.மு.க.வுக்கு எதிராக விமர்சனம் செய்ய சொல்லி நீங்கள் வற்புறுத்தியதாக எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளாரே?
ப: இது அப்பட்டமான பொய். நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் செய்து வந்த பணிகளை நான் எப்போதும் தடுத்தது இல்லை. இதற்கு மேலும் பதில் அளிப்பதற்கு அவர் ஒன்றும் பெரிய மனிதர் அல்ல. கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் செல்வராஜ் ஐ.ஏ.எஸ்., பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், அரசியல் ஆலோசகர்கள் பன்னீர் செல்வம், வென்னிமலை, இளைஞர் அணி செயலாளர் மேத்யூ, வர்த்தகர் அணி செயலாளர் கே.ஜே.நாதன், மகளிர் அணி துணை செயலாளர் பாகிரதி, துணைப் பொதுச் செயலாளர் என்.எம்.சண்முக சுந்தரம், சென்னை மாவட்ட செயலாளர்கள் சேவியர், கிச்சா ரமேஷ், என்.ஆர்.பி. ஆதித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்துக்கு வந்த சரத்குமாரை மகளிர் அணி நிர்வாகிகள் மலர் தூவி வரவேற்றனர். 70 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.வினர் 5–ந்தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 5.2.2016 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
14.2.2016 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 2,500ம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Tuesday 26 January 2016

தேர்தல் “நிதி”, குடும்ப ”நிதி” என நிதி மூலம் சொத்து சேர்த்த மைனாரிட்டி கருணாநிதி ! அவரின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரில் கூடவே நிதி உள்ளது – அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேச்சால் கருணா ”நிதி” என்ற பெயருக்கும் சிக்கல்


தேர்தல் “நிதி”, குடும்ப ”நிதி” என நிதி மூலம் சொத்து சேர்த்த மைனாரிட்டி கருணாநிதி ! அவரின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரில் கூடவே நிதி உள்ளது – அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேச்சால் கருணா ”நிதி” என்ற பெயருக்கும் சர்ச்சை
மைனாரிட்டி தி.மு.க என மூச்சுக்கு முன்னூறு முறை சாடும் கரூர்  மாவட்ட அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர்
செம்மொழி மாநாட்டை நடத்தி கொள்ளை, கொள்ளையாக கொள்ளையடித்தது தான் மைனாரிட்டி தி.மு.க வின் சாதனை ! ஆனால் எங்கள் அம்மாவோ தமிழ் மொழியை உண்மையாகவே மிளிர செய்தவர் !
தமிழகத்தின் மைய பகுதியான கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக தற்போது பொறுப்பேற்று இருக்கும் விஜயபாஸ்கர் தற்போது அரசியல் களப்பணிகளில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். ஆங்காங்கே பொதுக்கூட்டம், தெருமுனை கூட்டம் என்றால் போதும், தி.மு.க வினர் காதை மூடிக்கொள்ள வேண்டும், அந்த அளவிற்கு தலைமைக்கழக பேச்சாளரை விட மைனாரிட்டி, மைனாரிட்டி என தி.மு.க கட்சியை அவர் படுத்தும் பாடு அப்பாடா ? என்ற அளவிற்கு தான் சொல்ல வேண்டும் இப்படி இருக்க, கரூர் லைட் ஹவுஸ் கார்ணர் குமரன் ரோட்டில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தில் பேசிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் தமிழ் மொழியை வியாபாரமாக்கி மைனாரிட்டி தலைவரின் குடும்ப அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் எங்களது தமிழக முதல்வர் அம்மாவோ ! அனைத்து அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என ஒளியால் மிளிர செய்து, மைனாரிட்டியால் இருண்டு கிடந்த தமிழை செழிக்க வைத்தவர். தமிழ் மொழி மூலம் குடும்பத்திற்காக சொத்து சேர்த்த மைனாரிட்டி தலைவர் கருணா நிதி எங்கே ? சொத்திற்காக குடும்பத்தையே கழகமாக எண்ணி நினைத்து இன்றும் அவர்கள் மூலம் சொத்து சேர்த்து வைத்துள்ளவர் மைனாரிட்டி தலைவர் ? ஆனால் எங்கள் அம்மாவோ கழக கண்மணிகளையே சொத்தாக எண்ணி பார்த்து கழகத்தையே குடும்பமாக நினைத்து வாழ்பவர். இப்படி இருக்க சொத்து சேர்க்கும் மைனாரிட்டி ஆட்சியால் சேர்த்த சொத்துக்கள் ஏராளம், பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என எல்லாவற்றிலும் குடும்ப சொத்துக்களை அவர்களது கட்சியினரே வெளியிட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நிதி, குடும்ப நிதி என நிதிகளை சொத்தாக சேர்க்கும் மைனாரிட்டி தலைவர் பெயரில் கூட நிதியை சேர்த்து உள்ளார் என புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆமாம், அது என்ன ? மைனாரிட்டி தலைவர் கருணா ”நிதி”, மேலும் அவர்களது குடும்பத்தார் கலா ”நிதி”, தயா ”நிதி”, பின்னர் மைனாரிட்டி தலைவரின் பேரன் உதய “நிதி” என பெயரிலும் நிதியை சேர்த்தவர் தான் கடந்த மைனாரிட்டி ஆட்சியின் சாதனை, தற்போதும் குடும்ப அளவில் அவர்களது சாதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலவசங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களிடையே புகுத்தியவர் தான் மைனாரிட்டி தலைவர், ஆனால் அதையே அம்மா அவர்கள் அந்த இலவசங்களை தவிர்க்கும் பொருட்டு விலையில்லா பொருட்களாக மாற்றினார். கடந்த ஆட்சியில் மின் அதாவது கரண்ட் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. அப்போது இருந்த அரசு எங்கே தற்போது மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்கிய எங்கள் அம்மா மூலம் உள்ள அரசு எங்கே சிந்தித்து பாருங்கள் பொது மக்களே !
மேலும் மாண்புமிகு அம்மா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னரின் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அதில்., அம்மா அவர்கள் எனது முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.. அரசால் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டிருந்தன. தற்போது அவை 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஆண்களுக்கான சுகாதார வளாகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய தி.மு.. ஆட்சியில் நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வருகின்றன.
முந்தைய மைனாரிட்டி திமுக அரசு மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டனர். மக்கள் நலன் என்ற போர்வையில் குடும்ப நலனையே அவர்கள் வளர்த்தனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம். ஆனால் எனது தலைமையிலான அண்ணா தி.மு.. அரசைப் பொறுத்தவரை எங்களது திட்டங்கள் அனைத்தும், தமிழக மக்கள் நலனுக்காகத் தான். தமிழர் வாழ்வும், தமிழர் வளமும் என்றென்றும் மங்காது புதுப் பொலிவுடன் திகழும் வண்ணம் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினோம் என தெரிவித்தார். மேலும்
கடந்த 2011–ம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டுமென உறுதியுடன் இருந்தார்கள். சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலை உயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளி பெற வேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழக மக்களின் வாழ்வு ஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத் தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே தான்தொடரட்டும் இந்த அரசுஎன்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். அதைப் போலவே மக்களால் எனது தலைமையிலான அரசு, மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு.
சாதனைகள் ஏராளம் சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக்கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக்கொண்டு சொல்ல முடியுமா? ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன அரசாங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்லவேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்கவேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூடவேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம். அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப் பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்லவேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளனமக்களுக்காக உழைப்போம் என சூளுரைத்தார். அம்மா அவர்கள் மேலும் தெரிவித்த போது.,  நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுய நலமும் இல்லை. பொது நலம் தான், மக்கள் நலம்தான். அண்ணா தி.மு.. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அண்ணா தி.மு.. மக்களுக்காகவே இயங்கும். என்ற அம்மா அவர்கள் தங்களுடைய பேச்சில் ., என்னுடைய இந்தப் பதிலுரை உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்திருக்கும் என நான் நம்புகிறேன். எனது இந்தப் பதிலுரையை ஏற்றுக் கொண்டு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொடுத்த திருத்தங்களை உறுப்பினர்கள்  திரும்பப்  பெற  வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு,  தீர்மானத்தை  ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு சபாநாயகர் வாயிலாக இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு அமைகிறேன் என்று கூறிய காவிய தலைவியை நாடு மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிவார்கள், அப்படி பட்ட எங்கள்  அம்மா ! எங்கே, வெறும் அறிக்கை விட்டு மட்டுமே ஊடகங்களுக்கு பூச்சாண்டி காட்டும் மைனாரிட்டி தலைவர் எங்கே ? என்றார். மேலும் கருத்து கணிப்பு என்று எடுத்து கொள்கின்றனர். அந்த கருத்துக்கணிப்பில் அவர்களது குடும்பத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க குடும்ப அங்கத்தினர்களிடையே கருத்து கணிப்பை எடுக்காமல் பொதுமக்களிடமும் கருத்து கணிப்பு நடத்தினால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் எங்கள் புரட்சித்தலைவி அம்மா வின் சாதனை அடங்கிய எங்களது நாடு போற்றும் நான்காண்டு சாதனை போதும் என்றார். பொன்னாடை போற்ற வேண்டுமென்றால் ரூ 10 ஆயிரம் என்ற மைனாரிட்டி எங்கே, மக்களையே பொன்னான வாழ்க்கையில் அமர வைத்த எங்கள் அம்மா எங்கே என்றார்

இதில் ஒரே இடத்தில் மட்டும் தான் கருணாநிதியின் பெயரை அதுவும் பெயரில் நிதி உள்ளதை சுட்டி காட்டி, தி.மு.க தலைவரின் பெயரை கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். பொதுக்கூட்டத்திற்கு முன்பு தொடங்கி பொதுக்கூட்டம் இறுதி வரை மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா ! அம்மா ! என்று தான் எந்த கூட்டமாக இருந்தாலும் முடிக்கிறார். அந்த அளவுக்கு தி.மு.க கட்சியையும், அதை சார்ந்த தலைவர் கருணாநிதியையும், மைனாரிட்டி கட்சி, மைனாரிட்டி தலைவர் என்று கூறி வருவதால் இவருடைய பேச்சை அ.தி.மு.க வினர் மத்தியில் மட்டுமில்லாமல் தி.மு.க வால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சாகுல் அமீது, கு.வடிவேலு, கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர் சசிகலா ரவி, ஆயில் இரமேஷ், சேரன் பழனிச்சாமி, சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.