Monday 31 August 2015

விமானப் பயணத்தை தொடர்ந்து முதன்முதலாக நீர்முழ்கிக் கப்பலில் பயணம் செய்யும் நரேந்திர மோடி



பாரத பிரதமராக மோடி பதவி ஏற்றுக் கொண்டவுடன் வெளிநாடுகளுக்கு சென்று இந்திய தொழில் வளர்ச்சி குறித்து உரையாடி வந்ததோடு, பல்வேறு நாடுகளின் ஆதரவையும்  பெற்றார். ஆனால் முதன் முதலாக பாரத பிரதமர் மோடி தற்போது நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது
பிரதமர் நரேந்திர மோடி, முதன் முதலில் இந்திய நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்ய உள்ளார்.
விசாகப்பட்டினத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அன்று சர்வதேச கடற்படை கண்காட்சி நடைபெற உள்ளது.  இந்தக் கண்காட்சியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் நாட்டை தவிர்த்து, ஏனைய சுமார் 90 நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் அழைப்பை ஏற்று, சீனா உள்ளிட்ட 46 நாடுகள் கலந்து கொள்வதை விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி ஐ.என்.எஸ். சக்கரா நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, அந்தக் கப்பலில் பயணம் செய்தார். அதன் பிறகு, நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.

தமிழினத்தலைவர் மாவீரன் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை... சொல்வது சரத் பொன்சேகா

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், தமிழினத்தலைவர் மாவீரன் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இலங்கையின் முன்னாள் அமைச்சரான கருணா அளித்த பேட்டியில், பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. மண்டையோட்டின் ஒரு பகுதி பிளவுபட்டிருந்தது. அவர் தன்னைத் தானே சுட்டிருந்தால் தலையின் அடுத்த பக்கத்தின் வழியாக தோட்டாதான் வெளியேறியிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவரது தலையில் மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல்தான் தாக்கியிருக்கலாம். மேலும் பிரபாகரன் உடல்தான் அது என்பதை அடையாளப்படுத்த மரபணு சோதனையும் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி., யுத்தத்தில் ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார் எனக் கூறுவது சரியானதாக இருக்காது. பிரபாகரனைச் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே நந்தி கடலில் மரணமடைந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். தொடரும் மர்மம்!!

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி அறவழிப் போராட்டம்! தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ­ பிரான்சு


மாவீரர்களின் இலட்சியமும் தமிழீழ மக்களின் தியாகமும் இன்று விலைபேசி விற்கப்படும் நிலையில் தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையைத் தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தின் தர்மத்தை நன்கு உணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன.
ஆனால், எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தருவதற்கான கதவுகளைத் திறந்தன. தமிழீழ மக்களின்
விடுதலைக்கான முதல் கதவு திறக்கப்பட்ட நேரத்தில் எமது விடுதலைக்கு நாம் கொடுத்த உயிர் தியாகங்களை சில சுயநல வாதிகள் தமது நலனுக்காக பேரம் பேசுவதை நாம் அனுமதிக்க முடியாது.
ஆகவே புலம்பெயர் தமிழீழ உறவுகளாகிய நாம் எமது வரலாற்று பணியை உணர்ந்து எம் தமிழீழ மக்களையும் தேசத்தையும் காப்பாற்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறான போராட்டங்களினூடகவே எமக்கு சிங்கள பேரினவாத அரசுகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்கவும் அதன் மூலம் எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவும் முடியும்.
ஆகவே, மனித உரிமைகள் ஆலோசனை அவையின் 30 ஆவது கூட்டத்தொடர் செப்ரம்பர் மாதம் 14 ம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் விசாரணைக் குழுவின் (OISL) அறிக்கையும் வெளிவரவுள்ள இவ்வேளையில் 31.08.2015 பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளின் தூதரகங்கள், ஐரோப்பிய
பாராளுமன்றம், மாநகர சபைகள், மேல் சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரிடத்திலும் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மூலமே நீதி கிடைக்குமென வலியுறுத்தி மனித நேய ஈருரளிப் பயணம் தொடங்கியுள்ளது.
இந்த மனித நேய ஈருருளிப் பயணம் செப்ரம்பர் 14ம் நாள் (14.09.2015) பிரான்ஸ் நாட்டு கிழக்குப்பாகத்திலுள்ள Sarreguemines என்னும் இடத்தை காலை 8.00 மணிக்கு வந்தடையவுள்ளது. நான்கு நாட்கள் பிரான்ஸ் அரசிடம் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், தமிழீழ மக்கள் தமது விருப்பை வெளிப்படுத்த இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு
மாகாணங்களில் வாக்கெடுப்பினை நடாத்தவும் அவ்வாக்கெடுப்பில் புலம்யெர் தமிழீழ மக்கள் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் அவை ஆவன செய்தல், தமிழீழ நிலப்பரப்பில் இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட்டு தமிழீழ மக்களின் பேச்சு நடமாட்ட சுதந்திரங்களை உறுதிப்படுத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்நிறுத்தியே மனித நேய ஈருருளிப்பயணம் இடம்பெறுகிறது. தமிழீழ மக்களுக்கு
நீதிகிடைக்க இந்த அறவழிப் போராட்டத்தில் பங்கெடுக்க இருக்கும் மனித நேயச் செயற்பாட்டாளர்களை எம்முடன் தொடர்புகொள்ளுமாறு அத்துடன் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் 16.09.2015 புதன்கிழமை அன்று பிற்பகல் 15.30 மணி தொடக்கம் 17.00 மணிவரை அமெரிக்கத் துணைத்தூதரகத்திற்கு முன்பிருந்து ஐரோப்பிய ஆலோசனை சபை வரை நடைபெறும் கவனயீர்ப்பு பேரணி மற்றும் தமிழீழ மக்களுக்கு
நீதிவேண்டியும் தமிழீழத்தை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்கக் கோரியும் வேண்டி செப்ரம்பர் 21ம் நாள் (21.09.2015) திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு வேண்டிநிற்கின்றோம்.
அத்துடன் நிகழ்விற்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் பிரான்சிலிருந்து கடுகதி தொடருந்து ஒழுங்கும் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவதோடு பிரயாணத்திற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தொடர்புகளுக்கு: 06 62 84 66 06
தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ­ பிரான்சு.
நன்றி - பதிவு.கொம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்ததால் பரபரப்பு



இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வரும் நிலையில் தற்போது கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மீனவர் சங்க தலைவர் எஸ்.எமிரேட் கூறும்போது, "கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 மீனவர்களும் அவர்களது 3 படகுகளும் காங்கேசன்துரை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது செம்மரக்கட்டை விவகாரம் - திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்: 2 பேர் கைது


ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 7–ந்தேதி இரவு திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள சீக்கடிதலகோணா, சச்சிநோடிபண்டா ஆகிய பகுதியில், தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் 20 பேரை, ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த பிரச்சினையை அடுத்த தமிழகத்தில் ம.தி.மு.க, பா.ம.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி நீதி கேட்டு இன்னும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதியில் செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சீக்கடிதலகோணா வனப்பகுதியில் 13 கூலித்தொழிலாளிகள் செம்மரங்களை வெட்டி தலையில் சுமந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும், கும்பல் தப்பி ஓடி விட்டது. கும்பல் விட்டுச் சென்ற 13 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், சக்கிநோடிபண்டா வனப்பகுதியில் 12 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தக் கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்தனர். 10 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணி (வயது 45), வேலூரை சேர்ந்த மஞ்சு (46) என்று தெரிய வந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட 2 இடங்களில் இருந்து மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் நகராட்சி வரலாற்றிலேயே சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் - நீங்க வெளியில போகலன்ன ! நான் வெளியில போறேன் – நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறிய நகர்மன்ற தலைவர் - தங்கமும், பொன்னும் நிருபர்களுக்கு அள்ளி, அள்ளி கொடுத்திருக்கிறோம் – கரூர் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு






தமிழகத்தின் மையப் பகுதி மட்டுமில்லாமல், அ.தி.மு.க ஆட்சி ஏற்ற பின் கரூர் நகராட்சி பெரு நகராட்சி ஆனது, இருப்பினும் கரூர், தாந்தோன்றி, இனாம் கரூர் ஆகிய மூன்று நகராட்சிகளையும், சணப்பிரட்டி பஞ்சாயத்தையும் சேர்த்து ஓட்டு மொத்த நகராட்சி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (31-08-15) மாலை கரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை வெளியே போக சொன்னார். ஆனால் நிருபர்கள் யாரும் வெளியே செல்லாததால் அப்போ நான் போறேன் என்கிற நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் கூறுவது போல அவர் வெளி நடப்பு செய்தார். பின்பு யாரும் வெளியேறியது மாதிரி தெரியவில்லை. இந்நிலையில் சுமார் 10 நிமிடம் கழித்து, 10 நிமிடம் கழித்து வெளியே சென்று உள்ளே வந்து பார்த்தார். 3 முறை இப்படியே செய்தும் யாரும் வெளியேறாததால் நிருபர்களுக்கு நன்றி, நகர்மன்ற தலைவராகிய எனக்கு மாரியாதை கொடுத்ததற்காக மிக மிக நன்றி என கூறி கூட்டத்திற்குள் வந்தார். மன்றப் பொருளை நகராட்சி வருவாய் அலுவலர் கண்ணன் ஒவ்வொரு தீர்மானமாக வாசித்தார். அப்போது கூட்டத்தில் அ.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அப்போது கடந்த பல ஆண்டுகளாக கரூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி இருந்து வந்துள்ளதாகவும், அதை ஒரு வருடமாக வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சி கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் இது வரை நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை சுட்டிக்காட்டினார்கள். பல வருடங்களாக நகராட்சிக்குட்பட்ட கடைகளில் ஏலத்திற்கு விடப்பட்ட வாடகை பாக்கி பணம் சுமார் ரூ 3 கோடியை வசூலிக்க அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தல் மற்றும் கரூர் நகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கவுன்சிலர் ஜெகன்நாதன் தலைமையில் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதால் கரூர் நகராட்சி கூட்டத்தில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்பு ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக்கூறிய கவுன்சிலர்கள் தீர்மானத்தை வாசித்த நகராட்சி வருவாய் அலுவலரை கண்டபடி சாட அவர் இப்படி பேசினீங்கன நான் வேலையை விட்டு போகிறேன் என்று அழுத படியே கூறினார். மேலும் கரூர் நகராட்சி வரலாற்றிலேயே சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. கரூர் அ.தி.மு.க நகராட்சி தலைவரின் கட்டுப்பாட்டிலேயே கூட்டம் இல்லை, அந்த அளவிற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் அலறல், சத்தம் ஓவ்வொரு பிரச்சினையும் என்கிறார் ம.தி.மு.க கவுன்சிலர் சத்தியமூர்த்தி, மேலும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறாமல் எதோ, நகராட்சி கூட்டம் நடந்தது போல மக்களுக்கு காண்பிப்பது போல தான் இந்த கூட்டம் நடந்தது. இன்று நடைபெற்ற கரூர் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டம் போலவே இல்லை என்றார். முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு ஒரு கடை கொடுக்க கரூர் நகராட்சி நிர்வாகம் முடிவெடுக்க அந்த கடையை எப்படி கொடுக்கலாம் என கொடுக்காமல் செய்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் கமலா, பன்னீர் (எ) முத்துச்சாமி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்தார். கடந்த பல வருடங்களாக என் வார்டு பிரச்சினையை எடுத்துக் கூற முற்பட்டேன், இன்றும் முற்பட்ட போது வெறொரு பிரச்சினையை கொண்டு வந்து சுமார் 4 மணி நேரமாக கரூர் நகராட்சி கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்றால் அது மிகையாகாது என்றார். மேலும் இக்கூட்டத்தை தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமான கவுன்சிலர்கள் கரூர் நகராட்சி பேருந்து நிலையப்பிரச்சினை, உழவர் சந்தை பிரச்சினை என பாக்கி வசூல் என இந்த பிரச்சினையை இன்றும் கிளப்பியதால் கரூர் நகராட்சியின் கூட்டத்தில் சில மணி சலசலப்பு ஏற்பட்டது. பின்பு அ.தி.மு.க அரசில் இந்த போல சம்பவம் இருக்க கூடாது என்றும் மன்ற பார்வையில் வைத்து வலியுறுத்துமாறும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அப்படி, இப்படி என 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அமளியால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



தேனி அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டுபிடிப்பு

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் அரிய புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 

 
முழுமையடையாமல் உள்ள இந்தச் சிலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என இதைக் கண்டுபிடித்துள்ள தொல்லியல் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.
 
தமது ஆய்வு மையம் பாண்டிய நாடு முழுவதும் செய்துவரும் ஆய்வின் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகிலுள்ள ரோசல்பட்டி பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போதே இந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர். சாந்தலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
அந்தப் பகுதியில் பௌத்தச் சின்னம் ஒன்று கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார் அவர். இந்தச் சிலை எந்த அளவுக்கு பாண்டிய நாட்டுப் பகுதியில் பௌத்தம் தழைத்திருந்தது என்பதை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
 
அந்தப் பகுதியில் கிடைத்த இதர தொல்லியல் தடயங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த புத்தர் சிலை கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தாங்கள் கணக்கிட்டுள்ளதக டாக்டர். சாந்தலிங்கம் தெரிவித்தார்.
 
கருங்கல்லால் செய்யப்பட்டுள்ள அந்தச் சிலையில், வலது பக்க கன்னத்தில் செதுக்கும்போது சிறிது சிதிறியதால், பின்னமான சிலையை முடிக்காமலும், வழிபாட்டுக்கு பயன்படுத்தாமலும் இருந்துள்ளார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
 
தற்போது அந்தச் சிலை யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், நத்தத்திமேடு எனும் புறம்போக்கு இடத்தில் இருக்கிறது எனத் தெரிவித்தார் டாக்டர்.சாந்தலிங்கம், மேலும் இந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு அப்பகுதியில் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது

கருணா ஓடியது எதற்காக? -தர்மரட்ணம் சிவராம்



மீள் பதிவு - கருணா இவ்வளவு துரித கதியில் இழிவுடனும் அவமானத்துடனும் பேரிகழ்வுடனும் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் தான் என்ன? அந்த 40 நீண்ட நாட்களாகப் பரபரப்பாக அரங்கேற்றப்பட்டுவந்த தனது வீரபிரதாபங்கள் அனைத்தையும் முற்றாகக் கைவிட்டு, எந்த வேகத்திலேயே தப்பி ஓடினார் இந்த கொள்கை துறந்த - இயக்கத்தை விட்டோடிய தளபதி அந்த நாட்களில் இவரால் வெளிக்காட்டப்பட்ட வியக்கத்தக்க காட்சிச்சாலை விளக்கமேலாண்மை திறனை ஊக்குவித்து வந்த கொழும்பு-சர்வதேச ஊடகவியலாளர்துறைகளைச் சேர்ந்த சிலர், இப்பொழுது ஐயத்துக்கிடமில்லாமல் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.பதிவு இணையச் செய்தி

எதற்காக அவர் வந்த கதியிலேயே அனைத்தையும் கைவிட்டு ஓடினார் என்ற வினாவே பலதரப்பட்ட சிங்களதேசிய இனவாதிகளிலும் தன்னடக்கமுள்ள எழுத்தாளர்களினதும் மூளைகளை எல்லாம் நச்சரித்துக்கொண்டிருக்கும் வினாவாகும். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பலம் வாய்ந்த பாரிய இராணுவ அமைப்பிற்கெதிராகப் போர்க்கொடி தூக்கி இவருக்கு நம்பிக்கை அளித்தது எது என்ற விளைவையே நாம் முதலில் வினவவேண்டும். தன்னுடைய உடைமையில் உள்ள ஆயுதங்கள், வன்னியிலுள்ள பாரிய பீரங்கித் தொகுதிகளுக்கும் எறிகணைகளுக்கும் எந்தவிதத்திலும் ஈடாகா என்பது கண்டிப்பாகக் கருணாவிற்குத் தெரியும். அவரது படைத்தளபாடங்களின் தேவை நிரப்பீடு வரையறைக்குட்பட்டது.

வன்னியிலுள்ள உயர் இராணுவ கட்டளைபீடம் வரையறையில்லாத்தேவை நிரப்பீடுகளைக் கொண்டது. அதேவேளை மேலும் கூடுதலான ஆயுத தளபாடங்களைக் கொண்டுவரும் தகமையும் மார்க்கமும் வன்னியிடம் உள்ளது. புலிகளது நுணுக்கமும் நவீனத்துவமும் வாய்ந்த கட்டளை பீடமும் முறையும் வடக்கிலேயே அமைந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாகப் புலிகள் இந்த துறைகளில் கண்ட அளப்பரிய முன்னேற்றத்தைக் கருணா அறிந்திருக்கமுடியாது. ஆனால் இதுபற்றி தனது தோழர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வதற்காக வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கலாம். வன்னியில் புலிகளால் நவீன ஆயுததளபாட முறைகள் பெறப்பட்டுள்ளன என்பதையும் கருணா தெரிந்துவைத்திருப்பார்.

எனினும், தனது சொந்த மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைத் தனது பிடிக்குள் வைத்திருக்கமுடியும் என்று அவர் மிகவும் கூடுதலாகவே நம்பியிருந்தார். கிழக்கு மாகாணப் பூகோள அமைப்பும், கொழும்பிற்கும் புலிகளுக்குமிடையே இருந்துவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளும், தனக்கு இராணுவரீதியாக அனுகூலமாக உள்ளன என்று அவர் நம்பினார். பதிவு இணையச் செய்தி

கிழக்கில் அவரது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் வன்னியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்து வெலிஓயாவிலிருந்து சேருவில் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருந்த பெரிய ஆப்பு வடிவ நிலப்பரப்புக்கள் வன்னியைத் தனிமைப் படுத்தியுள்ளபடியால் தரைவழிமார்க்கமாக விடுதலைப்புலிகள் தங்களது பாரிய ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் போர் வீரர்களையும் நகர்த்தித் தனது கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தானும் தாக்குதலை மேற்கொள்ள முடியாது என அவர் பூரணமாக நம்பினார்.

போர்நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளின்கீழ் விடுதலை புலிகள் சமாதான அலுவலகத்துடனும் இராணுவத்துடனும் இணக்கம்காணாமல் தமது முழுப்படையணிகளை நகர்த்த முடியாதெனவும் கருணா திடமாக நம்பியிருந்தார். அத்தோடு பாரிய பீரங்கி தொகுதிகளும் எறிகணைகளும் இல்லாத நிலையில் புலிகள் வெருகல் ஆற்றின் வடக்கு கரைகளில் ஓரிரு படைகளை அனுப்பி தாக்குதல்கள் நடத்தினாலும் நீண்டகால சிறு சிறு மோதல்களே வாகரைப் பகுதிகளில் மட்டும் நிகழ்த்தலாமென முடிவாக நம்பியிருந்தார்.

கருணாவுக்கு அச்சமயம் தெரிந்தமட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பெரிய சுடுகலன்களையும் தொன் கணக்கிலான எறிகணைகளையும் கரையோரமாகக் கொண்டுசெல்லும் வல்லமை கடற்புலிகளுக்குப் போதாது என்றும் நினைத்தார். சிறீலங்காக் கடற்படையை விழிப்படையச் செய்யாமல் இராணுவ தளபாடங்களையும் போர் வீரர்களையும் கிழக்குக் கரையோரத்திற்கு 2 அல்லது 3 முறைகளுக்குமேல் கொண்டுசெல்லும் நிலையில் கடற்புலிகள் இல்லையென்று கருணா தனது முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊகித்திருந்தார்.பதிவு இணையச் செய்தி

கருணாவுக்குப் பொருந்தக்கூடிய இன்னுமொரு குறைபாடு புலிகளிடம் இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மூலையில் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவும் அத்தாக்குதலை நிலைகுலையாமல் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து நடாத்தவும் வெருகல் ஆற்றின் வடக்குக் கரைகளில் அவர்களுக்கு பூமராதடிச்சேனைக்கும் மாவடிச்சேனைக்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பே பூகோளரீதியாக புலிகளுக்கு இருந்தது. இந்த நிலப்பரப்பிற்குக் கடல்மார்க்கமாகவும், தரைக்கப்பால் உள்ள கொந்தளிப்பான நீர்களுக்கு ஊடாகவுமே தளபாடங்களை அனுப்பவேண்டும். கப்பல்களிலிருந்து இராணுவச் சரக்குகளை இம்மார்க்கமாக இறக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

கருணாவின் கணிப்பின்படி புலிகள் வெருகலாற்றைக் கடந்து வாகரைப் பகுதிக்குள் வெற்றிகரமாக ஊடுருவினாலும் யு-11 வாழைச்சேனை - பொலநறுவை நெடும்பாதையைச் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ளாது கடக்க இயலாது. யு-11 பாதைதான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விநியோகப் பாதையானபடியால் அது இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பிற்கு உட்பட்டது. புலிகளால் தரவை வடமுனைப் பகுதியைக் (தொப்பிகல காடுகள்) கடல்மார்க்கமாகச் சென்றடைய முடியாது. அந்தப் பகுதியின் கிழக்குப் பக்கம் கடல் ஏரியால் சூழப்பட்டுள்ளது. இதற்கப்பால் உள்ள கரையோரப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.பதிவு இணையச் செய்தி

எனவே, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலமான பகுதிக்குள் கடல்மார்க் கமாகவோ, வாகரையூடாகவோ போதிய படையணிகளுடனும் படைக்கலன்களுடனும் புலிகளால் வரமுடியாது என்று கருணா நம்புவதற்கு நல்ல காரணம் இருந்ததென்றே கூறவேண்டும். கருணா தனது பாதுகாப்பு நிலையைப் பல அடுக்குகளாக வகுத்து அமைத்திருந்தார். பின்வாங்கும் நிலைகளும், மீண்டும் ஒன்றுகூடும் இடங்களும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தன.பதிவு இணையச் செய்தி

புலிகளின் தலைமைக்குப் பாதுகாப்புப் போர்முறை தெரியாதென வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம், அவர்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சிகொள்ளும் வகையில், பரபரப்பற்ற அமைதியான முறையில் இந்தக் கட்சிமாறிய தளபதி தற்புகழ்ச்சியுடன் கூறிமகிழ்ந்தார். அங்கே நிழற்படக் கருவிகள் நிழற்படங்களை எடுத்தவண்ணம் இருக்க ஊடகவியலாளர்களுடன் உரையாடிக்கொண்டே தோடம்பழச்சாற்றை உறிஞ்சிக்குடித்துக்கொண்டும், காலை உணவை அருந்திக்கொண்டுமே வன்னியின் இராணுவ மேலாதிக்கம்பற்றி எவ்வித படபடப்பும், குழப்பமும், அச்சமும் இல்லாது இதனை வெளியிட்டார். 

பெரிய வெள்ளிக்கிழமைப் பதிப்பில் 'ஐ லண்ட்" பத்திரிகை இவருடனான நீண்டதொரு செவ்வியைப் பிரசுரித்தவேளையில் வாகரைப்பகுதியின் வடக்குப் பகுதிக்கு அப்பாலில் இருந்து கருணாவின் பாதுகாப்பு அடுக்குகள் மீது 120 ஆஆ எறிகணைகள் குண்டுமாரி பொழியபப்பட்டது. இக்குண்டுமாரிப் பொழிவு எவரையும் கொல்வதற்காகப் பொழியப்படவில்லை. மாறாக, கருணாவின் ஆட்களை அதிர்ச்சியூட்டி மலைக்கவைத்து வேறு திசைமுகப்படுத்தவே பொழியப்பட்டது.பதிவு இணையச் செய்தி

இந்தப் பொழிவின்போது வாகரை தற்பாதுகாப்பிற்குப் பொறுப்பாய் இருந்த கருணாவின் மூத்த சகோதரன் றெயின் கட்டளை மையம் புலிகளின் விசேட படையணிகளால் கைப்பற்றப்பட்டது. கதிரவெளியின் தனது தற்காலிக இருப்பிடத்தில் இருந்த றெஜி, வினோதன், விசாலகன் 2, அன்பரசி படைப்பிரிவுகள் எல்லாம் அமைதியாகிவிட்டதை அறிந்தார். உடனே அவர் குண்டதிர்ச்சியால் வெருட்சிகொண்டு ஓட்டம்பிடித்தார். குண்டுமாரி நிற்பதற்கு முன்னர் புலிகளின் விசேட படைப்பிரிவுகள் இந்தக் கட்டளை மையங்களை அதிசயிக்கும் விதத்தில் அவற்றை செயலற்றவையாக்கிவிட்டுத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அன்பரசி பெண்கள் படையணியைச் சேர்ந்த பெண் தளபதி சாவித்திரியும் வினோதன் படையணியைச் சேர்ந்த பாரதிராயும் படுகாயமுற்றனர்.பதிவு இணையச் செய்தி

இன்னுமொரு விசேட படையணி சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு தொகைவில் ஜெயம் என்பவர் பயணம் செய்த வாகனத்தைப் பதுங்கியிருந்து தாக்கியழித்தது. கருணாவினால் கதிரவெளியில் உருவாக்கப்பட்ட முதிர்வுறாத, பயிற்சியற்ற கடற்புலிப் பிரிவின் தலைவரே இந்த ஜெயம். ஜெயசிக்குறு படையெடுப்பு நகர்வை மேற்கொண்டபோது புலிகளின் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலாற்படை அமைப்பே ஜெயந்தன் படைப்பிரிவாகும். ஜெயந்தன் படைப்பிரிவால் கருணாவின் படைகள் முடக்கப்பட்டன. சனிக்கிழமை காலை கருணாவிற்கெதிரான புலிகளின் மட்டக்களப்பு அரசியல்பிரிவுத் தலைவர்கள் வன்னிக்குச் சென்றனர். பதிவு இணையச் செய்தி

ஒலிபெருக்கி மூலம் கருணாவின் படையணியைச் சேர்ந்தவர்களைக் கடற்கரைக்கு அண்மையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கூடுமாறு அறிவிக்கப்பட்டது. நண்பகல் மட்டும் 300 இற்கும் அதிகமானவர்கள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.பதிவு இணையச் செய்தி

இந்நடவடிக்கைகள் அனைத்தையும் நடத்தியவர் தம்பிராஜா ரமேஸ். இவர் கருணாவின் முன்நாள் உப தளபதியாவார். இவ்வாரம் இவர் கேணல் என்ற உயர்நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஜெயந்தன் அணியின் முன்னேற்றத்தைத் தடுக்குமுகமாக ஜிம்கெலி தாத்தாவினதும் றொபேட்டினதும் தலைமைகளில் துணைப் படைப்பிரிவுகளைக் கருணா அனுப்பிவைத்தார்.
வாகரையிலுள்ள கருணாவின் படைகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் முகமாகப் புலிகளின் விசேட படையணிகள் சனிக்கிழமை இரவு பிரதான இடங்களில் தாக்குதல்களை நடாத்தின.

பகல்வேளையில் புலிகளின் தேசியப் புலனாய்வு நிலையத்தில் செயற்படும் உளவியல் செயற்பாட்டுப் பிரிவு உட்பகை சார்ந்த போரின் பயனற்ற தன்மையைப் பற்றி உரையாடல்களைத் தொடங்கின. எனவே சனிக்கிழமை பின்னிரவு றெஜியாலும் றொபட்டாலும் ஒழுங்கு செய்யப்பட்ட 2 எதிர்தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. ஞாயிறு காலை கருணாவின் படைகள் வாகரையை விட்டு சிதறியோடித் தொப்பிகலவுக்குப் பின்வாங்கின. கருணாவின் படையணிகளைத் தேடிக் கொண்டுவரும் புலிகள் யு-11 பாதையைப் பாரியளவில் கடப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு சிறீலங்கா படையின் கூடுதல் படைப்பிரிவுகளை யு-11 பாதையில் நிலைகொள்ள வைக்கப்பட்டன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் இராணுவ பிரிவின் தளபதியும் கருணாவின் எதிர்க்கிளர்ச்சியின்போது வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் சென்றவருமான ஐனார்த்தனின் தலைமையில் புலிப்படை பிரிவு ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பின் தெற்கில் 76 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் அரசியற் பிரிவின் தலைவர் குயிலின்பனும் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரும் ஐனார்த்தனுடன் வந்திருந்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடிச்சாறில் அமைந்துள்ள தளத்துடனும் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள், மனமாற்றங்களுக்குப் பின்னர் அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் புலிகளுடன் மீண்டும் இணைய ஒத்துக்கொண்டனர். ஒரு துவக்குசூடாவது சுடப்படவில்லை. அது ஒர் உளவியல் செயற்பாட்டின் வெற்றியாகும்.பதிவு இணையச் செய்தி

கருணாவினுடைய முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான ரமணவால் தலைமை வகித்துச் செல்லப்பட்ட புலிகளின் குழு ஒன்று வாகரையில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்குள் பிரவேசித்துக் கடற்கரை அப்பாலுள்ள நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டை நிலைகொள்ள செய்தது. அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக இருப்பதாக இன்னமும் நம்பினார்.

கருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் விசேட படையணிகளின் தாக்குதல்கள் 2 நடைபெற்றன. இது கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த 2 தெரிவுசெய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை அவரால் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. அவர்கள் துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள் அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும் நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.

தரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள் மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல் செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச்செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும் மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகியகால ஆயுளைக்கொண்ட எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.

ஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று துணிந்து கூறலாம். "நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின் பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட எதிர்ப்புக்கொடி தூக்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள், எங்கள் செயற்பாட்டைச் செய்துமுடிப்போம்". என்று கேணல் ரமேஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.பதிவு இணையச் செய்தி

விடுதலைப்புலித் தலைவரைத் தான் எதிர்த்து நிற்கப்போவதாக கருணா பிரகடனப்படுத்தியபின் ஊடகங்கள் வெளிக்கொண்டு இவரை போற்றிப் புகழும்போதுகூட கருணா இன்று ஒரு சிறந்த தளபதியாக்கிய அவரது குருமாரையும், அவரை இந்நிலைக்கு உருவாக்கிய அறிவுரையாளர் மனோ மாஸ்ரர் அவர்களையும் அவர்கள் மறந்துவிட்டனர்போலும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும்கூட இதனைக் கவனத்தில்கொள்ளவில்லை. கருணாவை உருவாக்கியவர்கள் அனைவரும், மனோ மாஸ்ரர் உட்பட, அவரை நிராகரித்துவிட்டார்கள். பதிவு இணையச் செய்தி

கருணா தோற்கடிக்கப்பட்ட முறை புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு தூரம் துணிவும் வீரமும்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.
கடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை. 

பிணக்குக்கு நியாயபபூர்மவான தீர்வை எட்டுவதற்குப் பதிலாக சிங்கள அரசு, சீர்செய்ய முடியாதுபோல் தோற்றமளிக்கின்ற விருப்பு மனச்சார்புடைய கொள்கைகளையே பேணி வளர்த்துவந்துள்ளது. அதனால்தான் அது தமிழர் பக்கம் இருக்கின்ற பிழையான குதிரையை அவ்வப்போது ஊக்குவித்து வருகின்றது. எவரும் தன்னை ஒரு ஒட்டுண்ணியாகப் பாவிக்க முடியாதபடி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்பொழுதுமே ஆயத்த நிலையிலேயே 
இருந்துகொண்டிருக்கிறார்.

ஆங்கிலம் மூலம் : தர்மரட்ணம் சிவராம் 
(தமிழ் மொழிபெயர்ப்பு : கந்தையா நவரேந்தினர்)
[27.07.2004]
நன்றி - பதிவு.கொம்

முன்னாள் மத்திய மந்திரி கரூர் கோபால் மரணம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இரங்கல்

முன்னாள் மத்திய இணை மந்திரி கரூர் கே.கோபால் (82). இவர் திருவான்மியூர் சீனிவாசபுரத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
மாணவ பருவத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றியவர். 1971 முதல் 1980 வரை கரூர் மக்களவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காளியண்ணன் கோபால் மத்திய நிதித்துறை, பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக மிகச்சிறப்பாக பணியாற்றிவர்.
இந்திரா காந்தியின் தலைமையில் மிகத் தீவிரமாக பணியாற்றிய முற்போக்கு சிந்தனை கொண்ட கோபால் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சார்ந்த இவர் கரூர் தொகுதிகளில் இருமுறை எம்.பி ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது


முற்றுகையிட முயன்றது தப்பா ? அமைச்சர் வீடு முற்றுகையிட ஆலோசனை நடத்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு 2ம் நாளாக வீட்டுக்காவல்


அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட ஆலோசனை நடத்திய தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் உள்பட 5 பேர் இன்று 2 வது நாளாக வீட்டு காவல் வைக்கப்பட்டுள்ளனர்.சட்டசபையில் வேளாண் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது, ‘’ தமிழகத்தில் வறட்சி இல்லை’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த 28ம் தேதி திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கத்தினர் வாயில் கறுப்பு துணி கட்டி அமைச்சருக்கு எதிர்ப்பு காட்டினர்.இந்த நிலையில் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட போவதற்கான அவசர ஆலோசனைக் கூட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மண்ணச்சநல்லூர் வனத்தாயி அம்மன் கோயிலில் நேற்று மாலை நடந்தது. ,இதில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி கென்னடி தலைமையிலான போலீசார்  வந்தனர். கூட்டத்தை கலைக்குமாறு அய்யாக்கண்ணுவிடம் கூறியுள்ளனர். இதனால்  அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அய்யாக்கண்ணு, மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் கருப்பயைா பிள்ளை, மண்ணச்சநல்லுார் ஒன்றிய ெசயலாளர் சதாசிவம், ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன் ஆகிய 5 பேரை திருச்சி கரூர் பைபாஸ் ரோடு அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு 5 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ரங்கம் உதவி கமிஷனர் கபிலன் தலைமையிலான போலீசார் வீட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2வது நாளாக 5 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் மத்தியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி கடந்த மார்ச் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட சென்னை செல்வதற்கு தயாராக இருந்த விவசாயிகள் ஏப்ரல் 1ம் தேதி இரவு வரை சிறை வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் அருகே தனியார் குளிர்பான நிறுவனம் அமைய எதிர்ப்பு ! விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !



கரூர் அருகே குளிர்பான
நிறுவனம் அமைய எதிர்ப்பு ! விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
! குளிர்பான நிறுவனம் அமையும் பட்சத்தில் சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம், கடையடைப்பு
உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த முடிவு
கரூர் மாவட்டம்,
குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியை அடுத்த புழுதேரி கிராமத்தில் தனியார் குளிர்பான
நிறுவனம் அமைய உள்ளதாகவும், இதற்காக இடம் தேர்வு மற்றும் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக
கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் மனு கொடுத்தனர்.
மேலும் ஏற்கனவே ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்து தங்களது குடிநீர் பற்றாக்குறையை
இது வரை போக்க வில்லை. தற்போது இங்கு அமைய உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தால் பெரும்
நெருக்கடியை இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சந்திக்க உள்ளனர் என குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த நிறுவனம் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்து ராட்சித இயந்திரங்களை
வைத்து நீர் உறிஞ்ச திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம்
மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி உடனே நடவடிக்கை எடுப்பதாக
கூறினர். மேலும் மனு கொடுத்து வெளியே வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆலை அமைக்க விடமாட்டோம்
என நம்புகிறோம், அப்படி ஆலை அமையபெற்றால் அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம்,
சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.

பேட்டி : பிரகாஷ்
கண்ணா – அப்பகுதி பொதுமக்கள் - புழுதேரி

புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது தொண்டர்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்



சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ வுமான சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகரில் 14 ஏக்கர் பரப்பளவில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்து வருகிறார்.

இந்த மணிமண்டபத்திற்காக நிதி வழங்கும் விழா திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்தி விழாவில் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சரத்குமார் கூறுகையில், "சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

டாஸ்மாக் கடையைப் பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும்.

எனவே உங்கள் கிராமத்தில் இதற்கு ஊர்க்கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு செய்யுங்கள். மேலும் பூரண மதுவிலக்கு என்பதை படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் என்றார். இவ்வாறு
சரத்குமார் கூறினார்.

ஒகேனக்கல் விபத்து எதிரொலி - பலியான 6 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

30.8.2015 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் ஆற்றில் தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பரிசலில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி, கெளரி, ரஞ்சித், கோகிலா, இரண்டரை வயது குழந்தை தர்ஷன், பத்து மாதக் குழந்தை சுதிப்தா ஆகியோர் நீரில் மூழ்கினர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
நீரில் மூழ்கியவர்களில் கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், கெளரி, குழந்தை தர்ஷன் ஆகியோரின் உடல்கள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீரில் மூழ்கிய கோகிலா மற்றும் குழந்தை சுதிப்தா ஆகியோரின் சடலங்களை விரைவாக மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறும், உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல்துறைக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Sunday 30 August 2015

அடையாளம் தெரிந்தது - ஒகேனக்கல் பரிசல் விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 3 பேர் நீச்சல் அடித்து தப்பி ஓட்டம்- பரிசல் ஓட்டுநர் கைது

சென்னையை கோயம்பேடு ராஜேஷ் என்பவரது திருமண நாளை கொண்டாட ஒகேனக்கல் பகுதிக்கு அவர் மற்றும் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 9 பேர் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில்  அளவுக்கு அதிகமான நபர்களை ஒரே பரிசலில் ஏற்றி சென்றதாலும், தடை செய்யப்பட்ட பகுதிக்கு, பாதுகாப்பு கவசம் அணியாமல் சென்ற நிலையில் அங்கே பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இச்சம்பத்தில் சுற்றுலா சென்ற 9 பேர் பேரில் 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் நீச்சல் அடித்து தப்பி சென்றுள்ளதாக தெரிகிறது. ஒகேனக்கல் மாறுகொட்டாய் அருகே நடைபெற்ற இந்த பரிசல் விபத்து சுற்றுலாத்துறையின் மெத்தன போக்கே காரணம் என தெரிவித்து அப்பகுதி மக்கள் பிரச்சினை ஏற்படுத்த பரிசல் ஓட்டுநர் முருகேஷன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த பரிசல் விபத்தில் சுதீஸ்கா என்ற குழந்தையும், கோகிலா, கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித் உள்ளிட்ட 6 பேர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.  மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



ராஜஸ்தான் - உத்திரகாண்ட் பேருந்து விபத்துகள் 13 பேர் பலி 53 பேர் படுகாயம் - சோகம்


ராஜஸ்தானில் ஓடும் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் இச்சம்பவத்தில் 26 பேர் படுகாயம் உடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளன

பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 5 பேர் பலி - 26 பேர் படுகாயம்
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் இருந்து ஒரு மினி பேருந்து புறப்பட்டது. சிவபுரி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ரிஷிகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி மோதி விபத்து: 8 பேர் பலி 27 பேர் காயம்

ராஜஸ்தானில் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலியானார்கள்.  27 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானின் சர்தார்சாஹர் பகுதியில் இருந்து பிகாநேர் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  ஸ்ரீதுங்கர்கார்ஹ் பகுதியில் தொளியாசர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.  27 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் 16 பேர் ஸ்ரீதுங்கர்கார்ஹ் பகுதியில் உள்ள மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த 11 பேர் பி.பி.எம். அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  உயர்க் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். இந்த இரு வேறு விபத்துகள் குறித்து இரு மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு கோர சம்பவங்கள் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





பச்சைத் தமிழனுக்கு பச்சைத் துரோகத்தை செய்த இந்திய அரசை தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்காது- வைகோ

இந்திய அரசு என்ன இலங்கையின் கூலிப்படையா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கேட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக அளித்த வராஹா கப்பலை திரும்பப் பெற வேண்டும் என்றும் வைகோ கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: இந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஹா' கப்பலை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சைத் துரோகம் ஆகும். 
ஈழத் தமிழர்களைக் காத்து சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான தியாகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கவும், ஈழத் தமிழர்களை சிங்களவனுக்குக் கொத்தடிமைகள் ஆக்கவும் திட்டமிட்ட இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களையும், ரடார்களையும் வழங்கியதோடு இந்தியா இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு செய்ததை, அன்று முதல் நான் குற்றம் சாட்டி வந்துள்ளேன். விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை இலங்கைக் கடற்படை கடலில் மூழ்கடிக்க இந்தியக் கப்பல் படை உதவியது என்பதையும் சொல்லி வந்தேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை ‘வராஹா' கப்பலை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி என நிரூபணம் ஆகிவிட்டது. 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஹா' கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் தமிழ் இனக் கொலைகாரன் ராஜபக்சே வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா' என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளை சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாகக் பயன்படுத்தப்பட்டதற்கு இந்த ‘சாகரா' சரியான சாட்சியம் ஆகும். விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுக்க உதவியது என்று ராஜபக்சே பகிரங்கமாகச் சொன்னதைத் தமிழர்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும், ஈழத் தமிழ் இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்துவதற்கும் முழுக்க முழுக்க காரணம் ஆகும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது. இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ்க் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்கு இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக நிரூபிக்கும் என எச்சரிக்கிறேன் என வை.கோ தெரிவித்துள்ளார்

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து - பலி 5பேர் என தகவல்

ஒகேனக்கல்: ஒகேனக்கலில் காவேரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பரிசலில் 5 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 2 பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆற்று வெள்ளத்தில் சிக்கயவர்களை மீட்க தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். வௌ்ளத்தில் சிக்கியவர்கள் பற்றி தகவல் எதுவும் இல்லை.
தர்மபுரி மாவட்டம், ஓகேனக்கல் பகுதி மறுகொட்டாய் அருகே பரிசல் கவிழ்ந்து 5 பேர் பலி என தகவல் வந்துள்ளன. இந்நிலையில் ஒரு குழந்தை, மற்றும் 1 பெண்ணின் சடலம் கைப்பற்ற பட்டுள்ளன, மேலும் 3 பேரது நிலைமை என்ன என தெரியவில்லை, இந்நிலையில் மாமரத்துகடவு பகுதியில் மேலும் 2 சிறுவர்கள் பரிசலில் பயணித்தவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளன. இறந்தவர்கள் யார் என்பதையும் பலி எண்ணிக்கை குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஜெயலலிதா வீட்டு முன்பு மது ஊற்ற வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது





முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு மது ஊற்றிப் போராட்டம் நடத்த புறப்பட்ட சட்டப் பஞ்சாயத்து இயக்கக்கத்தினரை போலீஸார் முன்கூட்டியே தடுத்து நிறுத்திக் கைது செய்தததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் மது விலக்கு கோரி பல்வேறு போராட்டங்கள் சூடு பிடித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனீஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு தற்போது ஓய்ந்து போயுள்ள நிலையில் மதுவுக்கு எதிராக ஆங்காங்கே செல் போன் நிறுவனங்கள் டவர்களில் ஏறி பலதரப்பட்ட மக்கள் போராடி வருகின்றனர். இதனால் தமிழகம் மதுவுக்கு எதிரான போராட்டக் களமாக மாறியிருக்கிறது.
தற்போது இந்தப் போராட்டங்கள் சற்று குறைந்துள்ளன. இந்த நிலையில் மது விலக்கை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா முன்வராததைக் கண்டித்து அவரது வீட்டின் முன்பு மதுவை ஊற்றிப் போராட்டம் நடத்தப் போவதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடத்தக் கிளம்பிய போராட்டக் குழுவினரை போலீஸார் முன்கூட்டியே தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர். அவர்கள் தெரிவிக்கையில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 7 நாட்களாக, மதுவிலக்கை தமிழக முதல்வர்அறிவிக்க கோரிக்கை வைத்து , தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தோம், இன்று பிற்பகல் 1 மணி அளவில், மிடாஸ் சாராய ஆலையின் பங்குதாரரான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்  முன்பு பிராந்தி ஊற்றி போராட்டம் நடத்த புறப்பட்டபொழுது கைது செய்யப்பட்டோம் என தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் அறியும் உரிமை மூலமும் பெறப்பட்ட தகவல்களையும் இணைத்து, மது குறித்து அவர்கள் எடுத்த சர்வே குறித்தும் செய்தியாளர்களுக்கு புள்ளி விவரமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது