Saturday, 12 December 2020
Wednesday, 9 December 2020
Monday, 7 December 2020
Sunday, 6 December 2020
Saturday, 5 December 2020
Friday, 4 December 2020
கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது
கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் - தமிழில் குடமுழுக்கு
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்படி கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடந்தது இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கரூரில் 900 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது ஏழு நிலைகளில் கோபுரங்கள் மற்றும்
ஏழு கலசங்கள் ஒருங்கே அமையப் பெற்ற இந்த கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடந்தது.
கடந்த 29ஆம் தேதி முதல் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, நவகிரக பூஜை தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் இருந்து யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோவில் வலம் வந்து ஏழு நிலை கோபுரம், விநாயகர், சுவாமி, அம்மன் மற்றும் முன்புற விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
தமிழகத்தில் வழக்கமாக சமஸ்கிருத மொழியில் மட்டும் அர்ச்சனைகள், ஆராதனைகள் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் ஆனால் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று சமஸ்கிருத மொழி மற்றும் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது குடமுழுக்கு விழாவில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் இந்து அறநிலையத் துறையினர், விழா கமிட்டியினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.