Saturday, 4 November 2017

பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி 5000 பேர் பங்கேற்பு

பரணிபார்க், 31 அக் 2017,  சர்தார் வள்ளபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டுத் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பரணிபார்க் கல்விக்குழுமத்தில் பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் சார்பில் கடந்த 31 ம் தேதி தேசிய ஒருமைபாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் முதன்மை ஆணையரும், பரணிபார்க்கல்விக் குழுமத்தின் தாளாளருமான  S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் சாரணிய ஆணையரும், பரணிபார்க்கல்விக் குழுமத்தின் செயலாளருமான திருமதி.பத்மாவதிமோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் சாரண ஆணையரும், பரணிபார்க்கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "இந்தியாவின் இரும்பு மனிதராக போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாடுவது பெருமிதத்திற்கு¡¢யது. நமது நாட்டின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் பேணிப்பாதுகாப்பது இந்திய குடிமகனாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்" என்று கூறினார்.  விழாவில் பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் துணை ஆணையர் திருமதி.சுதாதேவி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிக்க ஆசி¡¢யர்களும், மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் செயலர் திருமதி.R.பிரியா செய்திருந்தார்.


புகைப்படம்: பரணிபார்க் சாரண, சாரணிய மாவட்டத்தின் 5000 சாரண, சாரணியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.

No comments:

Post a Comment