Sunday, 28 August 2016

ரூ 2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் பொன்னணியாறு அணை புனரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்திரவு




                கரூர்  மாவட்டம்,  கடவூர்  வட்டம்,  தரகம்பட்டியை அடுத்த  பொன்னணியாறு  அணையினை   புனரமைத்தல்  மற்றும்  மேம்படுத்தும்  பணி நடைபெற்று  வருவதை  மாவட்ட  ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
                மேலும் இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:                  தமிழ்நாடு அரசு பொன்னணியாறு அணையினை புனரமைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உலக வங்கி நிதி உதவி மூலம் ரூ.2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் மண் அணையின் உட்புறம் அலைகற்கள் மேம்படுத்துதல்., அணையின் வெளிப்புறம் நீர் வழிந்தோடி கழிவு நீர் வடிகால் மற்றும் படிக்கட்டுகள் பழுதுபார்க்கும் பணி.,  அணையின் வெளிப்புறம் மண்கரையில் புல் அமைக்கும் பணி.,  அணையின் மேல் இருபுறமும் பக்கச்சுவர் கட்டும் பணி.,  உபரி நீர்வாரியில் வலதுபுறம் தடுப்புச்சுவர் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறதுஇப்பணிகள் நடைபெறுவதால் அணை பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன்.,  அப்பகுதியில் உள்ள பாசன நிலங்கள் முழுமையாக பயன்பெறுவதோடு அப்பகுதி மக்களின் தரமும் மேம்படும்எனவே பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

                இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் அன்பு., குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  செந்தில்., கடவூர் வட்டாட்சியர்  முருகன்  மற்றும்  அரசு  அலுவலர்கள்  உட்பட  பலர்  கலந்து  கொண்டனர்

No comments:

Post a Comment