தமிழகத்தின் மைய
மாவட்டம் மட்டுமில்லாது, வணிகம், பண்டைய வரலாறு, தொல்லியல், ஆன்மீகம், விவசாயம், ஏற்றுமதி
உள்ளிட்ட பல துறைகளில் கரூர் மாவட்டம் புகழ்பெற்று அக்காலம் முதல் இக்காலம் வரை புகழ்பெற்று
வருகின்றது. இந்நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் ஆள்கடத்தல், வீட்டில் ஆள் இல்லா
நேரத்தில் கொள்ளையடிப்பது இப்படி நாள் தோறும் நடந்து கொண்டிருந்த நிலையில் சென்னை காவல்துறை
கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த ராஜசேகரன், தற்போது புதிதாக மாற்றப்பட்டு, கரூர் மாவட்ட காவல்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில்
கரூர் அருகே வீரராக்கியம் தொழிலதிபர் சாமியப்பனை கடத்த முயற்சித்தனர். உடனே அதற்கு
பதில் அவரது செக்யூரிட்டி மூன்று பேரை கடத்தி ரூ 50 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியுள்ளனர்.
ஆனால் கடத்தப்பட்ட 5 மணி நேரத்திலேயே தனிப்படைகள் அமைத்து செக்யூரிட்டிகளை பத்திரமாக
மீட்டதோடு, இதுவரை 15 பேரை கைது செய்து எதற்காக கடத்தல், இந்த கடத்தலின் பின்பு யார்,
யார் உள்ளனர் என்று துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே
சி.சி.டி.வி கேமிராக்களை பொறுத்தவேண்டுமென்று கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் ஞானசேகரன்
சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றங்களை தடுப்பதும், குற்றங்களை கண்காணிப்பது குறித்தும்
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து
விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அதில் டெக்னிக்கலாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு
போலீஸார் ஒரு அசைன்மெண்டே உருவாக்கி கொடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்
நடைபெற்ற இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் தலைமை வகித்ததோடு, உயிர்
காப்பது நமது கடமை அந்த உயிரை காப்பது எப்படி திருடனை எப்படி பிடிப்பது, வீட்டில் சி.சி.டி.வி
கேமிராக்களை வைத்து நோட்டமிட வேண்டுமென்றும், தேவையில்லாத போன் கால்களை தவிர்க்க வேண்டுமென்றும்,
நெட் பேங்கிக் மூலம் மக்களை ஏமாற்றுகின்றார்கள் ஆகவே தங்களுடைய பின் (PIN) நம்பர்களை
யாரிடமும் ஷேர் செய்யக் கூடாது என்றும் கூறினார். மேலும் திருடனை பிடிக்க பொதுமக்கள்
ஆதரவு தந்து ரகசியமாக தகவல் தந்தால் அவர்களுடைய ரகசியம் காக்கப்படும் என்றார். இந்நிலையில்
இன்று காலை கரூர் நகர காவல்நிலையத்தில் விக்டர் டீம் என்ற திட்டத்தை கரூர் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த ஆப்ரேஷன் 24 மணி நேரமும்,
கரூர் நகர காவல் நிலையம், பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள்
10 நபர்கள் மற்றும் 10 ம் நபர்களாக இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவர்.
இந்நிலையில் தொடர்ந்து 24 மணி நேரமும் இவர்களது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுவதோடு.,
குற்ற சம்பவங்களை தடுக்க இந்த டீம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அந்த அளவிற்கு காவல்துறையினருக்கு
பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்
பெரியய்யா, தனிப்பிரிவு ஆய்வாளர் பிரான்ஸிஸ், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் ஞானசேகரன்
மற்றும் காவலர்கள் பலர் இருந்தனர். எது எப்படியோ ! முழு அளவில் குற்றங்களை குறைக்க
போலீஸாரின் விக்டர் டீம் வெற்றி பெறுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர். மேலும் விக்டர்
என்றால் வெற்றி ! தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த காவல்துறையின் இலட்சியமும்
வெற்றி என்பதே இதன் பொருளாகும் என்று மறைமுகமாக சிந்திக்க வைக்கின்றது
No comments:
Post a Comment