Sunday 13 November 2016

தங்கமணி தங்கமான அமைச்சர் – கால்நடைத்துறை அமைச்சர் எங்களை கால்நடையாகவே பார்க்கின்றார் – அரவக்குறிச்சி தொகுதி மக்கள் வேதனை – ஒரே தொகுதியில் பல்வேறு அமைச்சர்களால் பெரும் பரபரப்பு – சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் ! அமைச்சர் பதவி விரைவில் பறிப்பு ?







தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என தகவல் வெளியாகியானதையடுத்து தற்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு பாலகிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டதோடு, அ.தி.மு.க கட்சியில் சர்ச்சை ஏற்படும் விதமாக அவர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண் ஆட்சியில் பெண்களை கேவலமாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி-க்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது என்றும், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதற்கிடையில் அமைச்சரின் பதில் என்னவோ ? என்று கூறிய விவகாரமே இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
தமிழக அளவில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே அமைச்சர்களை பொறுப்பாளர்களாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அளவில் எதிர்பார்க்கப்படுவது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மட்டுமே, ஏனென்றால் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை தீட்டியதோடு, இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருந்ததால் அரசியல் சதியால் கட்சியை விட்டு ஒரங்கட்டப்பட்டவர். மேலும் அந்த கட்சியே அதை எண்ணியும் வருத்தப்பட்ட நிலையில் அந்த வேட்பாளர் நிற்க, அந்த வேட்பாளருக்காக தமிழக அமைச்சர்கள், எம்.பி க்கள், எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாது நட்சத்திர பேச்சாளர்களும், திரைப்பட நடிகர்களும் களத்தில் இறங்க, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, பாலகிருஷ்ணரெட்டி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் இங்கே தீவிரப்பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகின்றது. ஆனால் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் மட்டுமே தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களோடு திரைப்பட நடகர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் களமிறங்க ? ஒசூரை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவரும், அதே தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக கால்நடைத்துறை அமைச்சரோ, வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சிக்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அதே அரவக்குறிச்சி தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், அ.தி.மு.க வினரிடையே புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமானது, அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தை அபகரித்து போடப்பட்டிருந்ததோடு, ஒசூரிலிருந்து வரவைக்கப்பட்ட மக்கள் மட்டுமே அமர்வதற்காக சேர்கள் போடப்பட்டு, அதே அரவக்குறிச்சி தொகுதியில் வாக்களிக்கும் மக்களை தரையில் அமர வைத்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அ.தி.மு.க வினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. பெண் அடிமைத்தனத்தை வேறெடுத்த பெரியார் பிறந்த பூமியில் பெண்களை இழிவு படுத்தும் வகையில், தரையில் அமரவைத்த காட்சியை பார்த்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அவர்கள் அமர்வதற்கு எந்த வித ஏற்பாடும் செய்யாமல் அள்ளல்படும் பொதுமக்களை (வாக்காளர்களை) கண்டு ரசித்தார். இந்நிலையில் பொதுநல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களோடு, நடுநிலையாளர்கள் இந்த அவலநிலையை பார்த்து கால்நடைத்துறை அமைச்சர் ஒரு வேளை அரவக்குறிச்சி மக்களை கால்நடையாக நினைக்கின்றாரோ என்னவோ தெரியவில்லை என்று புலம்பிய படி பொதுமக்கள் விரக்தியாக பொதுக்கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையில் தங்கமணி தங்கமானவர், எங்கள் பக்கத்து மாவட்டக்காரர், நாமக்கல் மாவட்டத்திலிருந்து கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வருவார் என்றும், அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், உண்மையான அ.தி.மு.க வினர் ஒன்று திரண்டு கரூர் அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்கள் செல்லுமிடத்திற்கே தங்களது கவனத்தை செலுத்துகின்றனர். காரணம் கால்நடைத்துறை அமைச்சர் அங்கிருந்து (ஒசூரிலிருந்து) ஒரு டீமை இறக்கியுள்ளாராம், அவர்கள் எல்லோரும் தெலுங்கிலேயே பேசிக்கொண்டு வருகின்றனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது உறவினர்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டு, கூட்டத்தை நடத்துவதாகவும், மேலும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே கூட்டத்தை காட்டுகின்றார்கள்,. ஆனால் வாக்குகள் நாங்கள் தானே போட வேண்டும், ஒசூரிலிருந்து வந்த மக்களா ? போடப்போகின்றார்கள் என்றும் காரசாரமாக பேசி வருகின்றனர். இத்தொகுதி மக்கள், ஏற்கனவே கோஷ்டி பூசல் இல்லாத ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க தான் என்ற ஒரு நல்ல பெயர் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் உள்ளது. தற்போது இந்த கால்நடைத்துறை அமைச்சரின் செய்கையால் கோஷ்டி பூசல் அமைச்சர்களிடையே மட்டுமில்லாமல் அரவக்குறிச்சி தொகுதி மக்களிடையே கூட ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை அதிகபடியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறசெய்ய வேண்டுமென்றால் இவரது மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பதோடு, இவரது பொறுப்பிற்கு பதில் வேறு யாரையாவது நியமிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ பொறுத்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர். பொதுமக்கள்



No comments:

Post a Comment