Wednesday, 29 March 2017
Thursday, 23 March 2017
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் திருக்குறள் ! கரூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் பாராட்டு
உலகப்பொதுமறையாம்
திருக்குறளை, தேசிய நூலாக்க வேண்டுமென்றும், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் சேர்க்க
வேண்டுமென்றும் திருக்குறள் அமைப்புகளின் ஆர்வலர்களின்
நீண்ட நாள் கோரிக்கையை நீதி, நன்நெறி கற்பிக்கும் வகையில், திருக்குறளை மனப்பாடப் பகுதியாக
மட்டுமில்லாது, பாடத்திட்டத்தில் பெரிதும் இடம்பெறும் வகையில் சேர்க்க வேண்டுமென்றும்
பலமுறை கோரிக்கை வைத்தனர். மேலும் மதுரை உயர்நீதிமன்றம் திருக்குறளில் அறம், பொருள்
தலைப்பில் உள்ள 108 அதிகாரத்தில் 1080 திருக்குறள்களையும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு
முதல் பனிரெண்டாம் வகுப்பிற்கு கற்கும் படி செய்ய ஆணையிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு
அரசு வரும் 2017 -18 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இதை அமல்படுத்த உத்திரவிட்டுள்ளது. இதை
கரூர் திருக்குறள் பேரவை மனதார வரவேற்றுள்ளது. இது குறித்து கரூர் திருக்குறள் பேரவையின்
நிறுவனரும், தலைவருமான மேலை.பழநியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.,
இந்த அரசின் அறிவிப்பிற்கு மனதார பாராட்டுகின்றதாகவும், இந்த ஆணையை வரவேற்று தமிழ்நாடு
அரசு கல்வித்துறைக்கு குரல் கொடுத்த அமைப்புகளுக்கும், ஆணை வழங்கிய அரசிற்கும் நீதியரசர்
ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார். மேலும் இதை கொண்டாடும்
வகையில் வரும் 25 ம் தேதி சனிக்கிழமை காலை
10.30 மணி முதல் எண் 72 சீனிவாசபுரம், கரூர் என்ற கரூர் திருக்குறள் பேரவையின் அலுவலகத்திற்கு
வரும் முதல் 200 மாணவ, மாணவிகளுக்கு இலவச திருக்குறள் மாணவர் தமிழ் உரைகளை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tuesday, 21 March 2017
மாநில ஜீடோ போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் வெற்றி
பள்ளிக்
கல்வித்துறையின் மூலம் 2016-2017ம் கல்வியாண்டிற்கான மாநில
அளவிலான ஜீடோ போட்டி U14, U-17, U-19 ஆகிய மாணவ,
மாணவியர் பிரிவில் கடந்த 21 ம் தேதி மற்றும் 23 ம் தேதி ஆகிய தேதிகளில் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மண்டலத்தின்
சார்பாக கலந்து கொண்ட பரணிபார்க்
பள்ளி மாணவி R.செளமியா U-14- 54 கிலோ
எடை பிரிவில் தங்கப்பதக்கமும், இதே பிரிவில் மாணவர்
S.ஜம்புகேஸ்வரன் 40 கிலோ எடை பிரிவில்
வெள்ளிப்பதக்கமும் பெற்றார். U-17 -56 கிலோ எடை பிரிவில்
மாணவி R.கெளசிகா வெண்கலப்பதக்கம் பெற்றார்.
மாநில அளவிலான ஜீடோ போட்டியில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில்
பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், பள்ளியின் செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர்
C.ராமசுப்பிரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், பள்ளியின் நிர்வாக
அலுவலர் M.சுரேஷ், இருபால் ஆசிரியர்கள்
மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் தேசிய போட்டியில்
வெற்றிபெற வாழ்த்தினர்.
புகைப்படம்:
மாநில அளவிலான ஜீடோ போட்டியில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்,
பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர்
C.ராமசுப்பிரமணியன்
Monday, 20 March 2017
Sunday, 19 March 2017
Friday, 17 March 2017
Thursday, 16 March 2017
Wednesday, 15 March 2017
Tuesday, 14 March 2017
Sunday, 12 March 2017
Friday, 10 March 2017
Thursday, 9 March 2017
Wednesday, 8 March 2017
Tuesday, 7 March 2017
Monday, 6 March 2017
Sunday, 5 March 2017
Thursday, 2 March 2017
Wednesday, 1 March 2017
Subscribe to:
Posts (Atom)