Thursday 23 March 2017

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் திருக்குறள் ! கரூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் பாராட்டு


உலகப்பொதுமறையாம் திருக்குறளை, தேசிய நூலாக்க வேண்டுமென்றும், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்றும் திருக்குறள்  அமைப்புகளின் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நீதி, நன்நெறி கற்பிக்கும் வகையில், திருக்குறளை மனப்பாடப் பகுதியாக மட்டுமில்லாது, பாடத்திட்டத்தில் பெரிதும் இடம்பெறும் வகையில் சேர்க்க வேண்டுமென்றும் பலமுறை கோரிக்கை வைத்தனர். மேலும் மதுரை உயர்நீதிமன்றம் திருக்குறளில் அறம், பொருள் தலைப்பில் உள்ள 108 அதிகாரத்தில் 1080 திருக்குறள்களையும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பிற்கு கற்கும் படி செய்ய ஆணையிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வரும் 2017 -18 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இதை அமல்படுத்த உத்திரவிட்டுள்ளது. இதை கரூர் திருக்குறள் பேரவை மனதார வரவேற்றுள்ளது. இது குறித்து கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனரும், தலைவருமான மேலை.பழநியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது., இந்த அரசின் அறிவிப்பிற்கு மனதார பாராட்டுகின்றதாகவும், இந்த ஆணையை வரவேற்று தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு குரல் கொடுத்த அமைப்புகளுக்கும், ஆணை வழங்கிய அரசிற்கும் நீதியரசர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார். மேலும் இதை கொண்டாடும் வகையில் வரும் 25 ம் தேதி  சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் எண் 72 சீனிவாசபுரம், கரூர் என்ற கரூர் திருக்குறள் பேரவையின் அலுவலகத்திற்கு வரும் முதல் 200 மாணவ, மாணவிகளுக்கு இலவச திருக்குறள் மாணவர் தமிழ் உரைகளை  வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment