கரூரில் அப்துல்கலாம்
இலட்சிய இந்தியக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.என்.ஆர்.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து
கொண்ட இக்கட்சியின் நிறுவனத்தலைவர் பொன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் தெரிவித்ததாவது., தமிழகம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. தமிழகம் அனைத்து
துறைகளிலும் பின் தங்கியுள்ளது. விவசாயத்துறையிலும், தொழிற்துறையிலும், சேவைத்துறையிலும்
வராக் கடன்களாக 2013 வருடம் 8800 கோடி 2014 ல் 9200 கோடி, 2015 ல் 14 ஆயிரத்து 200
கோடி என்று சொன்னால் தொழிற்துறையிலும், விவசாயத்துறையிலும், சேவைத்தொழில் என எல்லாத்துறைகளிலும்,
நஷ்டம் கண்டுள்ளது. வேலை இல்லை. தமிழகம் சைனாவிற்கு நிகரான ஒரு நாடாக இருந்தது. ஆனால்
இந்த வாய்ப்பை கொடுக்க தவறி இருப்பது தமிழக அரசு அவர்களுக்கு உரிய தண்ணீர், கட்டமைப்பு,
தேவையான விதைகளை ஒதுக்க தவறியுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் விவசாயிகளுக்கு
கொடுக்க வில்லை. மூன்று முதல்வர்கள், மூன்று முறை வேவ்வேறு முதல்வர்கள்., 24 முறை அமைச்சரவை
மாற்றம், இனிமேலும் இந்த தமிழகம் மூன்று முதல்வர்களையும், ஐந்து முதல்வர்களையும் தமிழகம்
தாங்காது, தமிழகம் சீரான வளர்ச்சி அடைய வேண்டுமா ? விவசாயிகளுக்கு விவசாயிகளின் பொருட்கள்
நன்கு சந்தைப்படுத்த வேண்டுமா ? நதிநீர் பாசன திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் ? தொழிலாளர்களுக்கான
தேவையான தொழில் தொடங்க வேண்டுமா ? அதற்கும் இனி தமிழகம் நதிகளை இணைக்க வேண்டும். இத்தனைக்கும்
தேவை 10 வருடத்திற்கு ஒரு வல்லமை பெற்ற முதல்வர் வர வேண்டும். உங்களது ஒட்டு, உங்களது
முடிவு நல்ல தலைமையை கொடுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்
என்றார். ஆகவே 32 மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களை நியமித்து உள்ளோம். எங்களது கனவை நிலை
நிறுத்த சென்று கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் பேட்டியின் போது இக்கட்சியின் பொதுச்செயலாளர்
திருச்செந்தூரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
பேட்டி : பொன்ராஜ்
– நிறுவனத்தலைவர் – அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி
No comments:
Post a Comment