Sunday 13 March 2016

பா.ம.க கட்சியின் செயல்பாடுகளை காப்பி அடிப்பதே வழக்கமாக கொண்ட தி.மு.க கட்சி தற்போது தேர்தல் அறிக்கையையும் காப்பி அடிக்கிறது – காப்பி அடிப்பதே தனது தொழிலாக கொண்டுள்ளதாக கரூரில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கடும் குற்றச்சாட்டு







தமிழகத்தில் அதிமுக ஒரு தீமை கட்சி திமுக ஒரு தீமை கட்சி இந்த இரண்டு தீமை கட்சிகளையும் ஒழித்து நன்மை தரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் கரூரில் பா.ம.க முதல் அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

தமிழக பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கரூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பூக்கராம்மா, டீக்கடைக்காரர், ஹோட்டல் தொழிலாளி மற்றும் முதலாளி, நரிக்குறவர்களிடம் மற்றும் பல தரப்பட்ட பொதுமக்களிடம் வாக்குகள் கேட்ட அன்புமணி இராமதாசு ஆங்காங்கே அன்புமணியாகிய நான் எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றார். கரூர் கோவை ரோடு, கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த அவர்., பொதுமக்களிடம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தீர்கள், ஆனால் அக்கட்சிகள் பொதுமக்களாகிய உங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும். ஒரு முறை அன்புமணியாகிய எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் கொடுக்க மாட்டோம், தாலி அறுக்கும் டாஸ்மாக்கை மூடுவோம், நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்றார். மேலும் இலவச மிக்ஸி கிரைண்டர்களை நாங்கள் கொடுக்க மாட்டோம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைகள் கொடுப்போம்,  என்று கூறி துண்டு பிரசூரங்களை விநியோகித்தார். அப்போது கரூர் பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறுகையில்., அப்போது தே.மு.தி.க கட்சியின் நிலைப்பாட்டை பற்றி கூறிய அன்புமணி இராமதாசு., கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே கருத்தை தான் கூறினார். மக்களுடன் நல்ல கூட்டணி என்று கூறினார். தி.மு.க வுடன் பேசினார். மலேசியாவில் சென்று பேசினார். பிறகு காங்கிரஸுடன் டெல்லியில் பேசினார். பிறகு பா.ஜ.க கட்சியில் போய் சேர்ந்து விட்டார். எதிர் கட்சி தலைவராக இருக்கும் போது மக்களுக்கு போராட்டம் நடத்தாத இவர் முதல்வராகி என்ன செய்ய போகிறார். தேர்தல் அறிக்கையை தி.மு.க வினர் காப்பிஅடித்து வருகின்றனர். பூரண மதுவிலக்கு, லோக் ஆயுக்தா சட்டம், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிக்கைகளாக பா.ம.க ஆகிய நாங்கள் அறிவிப்பதை தி.மு.க வினரும் அறிவிக்கின்றனர். எங்களை காப்பி அடிப்பதே தி.மு.க வின் வழக்காமாயிற்று, தமிழகத்தில் அ.தி.மு.க என்ற தீமையும், தி.மு.க என்ற தீமையும் ஒழிக்கப்பட்டு நன்மை செய்யும் ஒரே கட்சி பா.ம.க என்ற ஒரு கட்சி தான் என்றார். மேலும் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு நீதி விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் அரசு நிதி உதவி கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளானதை நான் அறிவேன் என்று கூறிய அவர் முதல்வர் ஆனவுடன் முதலில் அனைவருக்கும் நல்ல கல்வி, வேலை என்று பல்வேறு திட்டங்களை தீட்டுவேன் என்றார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசங்களை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறிய அவர் ஒரு குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் ஒரு வருடத்திற்கு மிச்சம் கொடுப்போம் என்றார். மேலும் பா.ம.க கட்சி மட்டுமே ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும் என்றார். பேட்டியின்  போது பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், வான்னியர் சங்க மாநில துணை தலைவர் மருத்துவர் மணி, மாவட்ட செயலாளர் கண்ணன், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேஷன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த சிறப்பான ஏற்பாட்டை செய்து தந்த பா.ம.க நிர்வாகிகளுக்கு முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் திருச்சி கருத்தரங்கிற்கு புறப்பட்டு சென்றார். சாதாரண பாமர மக்களிடம் தான் ஒரு சாதாரண வேட்பாளர் என்றும் கொளுத்தும் வெயிலையும் பாராமல் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகள் கேட்ட முதன் முதல் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசுவின் இந்த வித்யாச வாக்குகள் சேகரிப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது

No comments:

Post a Comment