தமிழகத்திற்கு
வரும் மே மாதம் 16 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பா.ம.க கட்சியானது
முதன் முதலில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி
இராமதாசுவை களம் இறக்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில்
ஒருங்கிணைப்பாளர் வை.கோ, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க கட்சியிகள்
ஒன்றினைந்து முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் ஐ வைத்து தேர்தல் களம் கண்டு வருகிறது.
தி.மு.க கட்சியானது காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றினைந்து களம் கண்டு வருகிறது. அந்த கூட்டணி
இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டணிகளை
பேசி வருகின்றன. அ.தி.மு.க வானது இன்று வரை தேர்தல் கூட்டணிகளை அறிவித்தோடு, தமிழக
வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளோடு ஆதரவு திரட்டி
மேலும் பல கட்சிகள் ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று பா.ஜ.க கட்சியானது
மாலை 54 வேட்பாளர்களை முதல் கட்டமாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை
அறிவித்தது. அந்த வேட்பாளர் பட்டியலில் கரூர் மாவட்ட அளவில் முதல் முதலில் பா.ஜ.க கட்சியானது
கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பா.ஜ.க வின் முன்னாள் மாவட்ட தலைவர் கே.சிவசாமியை
நியமித்தது. இன்று மதியம் ராகு காலத்திற்கு முன்பு வேட்பாளர் கே.சிவசாமி செய்தியாளர்களை,
சந்தித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க கட்சி மற்றும் முந்தைய
தி.மு.க கட்சி ஆகிய இரு கட்சிகளும், மக்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை. இந்திய பிரதமர்
மோடி அவர்களின் 21 மாத ஆட்சி காலத்தில் நல்ல வகையில் இந்தியாவிற்கு பல திட்டங்களை தீட்டி
வருகிறார். அதே வழியில் தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை நாங்கள் செய்வோம், 2016 ம்
சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளின் ஊழலையும், மோடி அரசின் சாதனைகளையும் மக்களிடையே
தெரிவித்து பா.ஜ.க வேட்பாளராகிய நான் வாக்குகள் கேட்பேன். மேலும் இந்த அ.தி.மு.க அரசு
கரூர் ரிங் ரோடு, கரூர் பூங்கா, கரூருக்கு புதிய பேருந்து நிலையம், காவிரி குடிநீர்
திட்டம் ஆகிய திட்டங்களை தீட்டியதே தவிர அது வெறும் அறிவிப்பாக தான் உள்ளது திட்டங்கள்
முழுமையாக தீர்க்கப்பட வில்லை. தற்போது அ.தி.மு.க கட்சியானது கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை
வலுவிழுந்துள்ளது. தி.மு.க கட்சியானது செயல் இழந்துள்ளது. இது ஒன்று போதும் எங்களின்
வாக்குகள் முழுதாக பெற, நாடு நல்ல நிலையில் இருக்க, நல்லாட்சி மலர தாமரை மலர வேண்டும்,
இந்தியாவில் மலர்ந்த தாமரை தமிழகத்தில் விரைவில் மலரும், உங்களில் ஒருவனாக வாக்குகள்
கேட்பேன், கடந்த அ.தி.மு.க அமைச்சர் போல ஏ.சி. வாகனத்திலே இருந்து பல வேலைகளை நடத்தி
முடிக்க மாட்டேன், கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 6 கோடியில்
அறிவிக்கப்பட்ட கரூர் டூ பசுபதிபாளையம் உயர்மட்டப்பாலம் தற்போது சுமார் ரூ 20 கோடியாக
உயர்ந்துள்ளது. இன்று வரை அந்த பாலம் கட்டி முடிக்க பட வில்லை. தற்போது நான் கடந்த
இரு முறை கரூர் மாவட்ட பா.ஜ.க மாவட்ட தலைவராக இருந்து வந்த நான், எந்த வித தேர்தலிலும்
நிற்க வில்லை. அதாவது உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நிற்க வில்லை. முதன்முறையாக
கன்னி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன் என்று கூறிய அவர். முதல் முதலில் சுவாமி ஐயப்பன்
கோயிலுக்கு செல்லும் போது கன்னிச்சாமி என்கின்றனர். அதே போல சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும்
உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை முதன் முதலில் பேசினால் கன்னி பேச்சு என்பார்கள்.
அது போல தான். இதுவும் எனக்கு முதல் தேர்தல், முதல் வேட்பாளராக கன்னி வேட்பாளராக களம்
இறங்கியுள்ளேன். எனக்கு வாக்களியுங்கள், மக்கள் சேவைக்காக பணியாற்ற எனக்கு ஒரு முறை
வாய்ப்பளியுங்கள் நான் உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்றார். பேட்டியின் போது கரூர்
மாவட்ட தலைவர் நீ.முருகானந்தம், மாவட்டதுணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாவட்ட அமைப்பு
செயலாளர் நகுலன், வழக்கறிஞர் அணி பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.பி.மோகன்
உள்ளிட்டோர் இருந்தனர்
No comments:
Post a Comment