Thursday 16 June 2016

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு – துணை ஆளுநர் சேக்தாவூத் சிறப்புரை !





கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2016-17 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வழக்கறிஞர் பி.கார்த்திகேயன் தலைமையில்  கரூர் பி.எல்.ஏ ராம் ரெசிடென்சியில் நடைபெற்றது.
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் பொறியாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேக்தாவூத்தை லயன்ஸ் மாவட்ட தலைவர் மேலை.பழநியப்பன் அறிமுகப்படுத்தினார். மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேக்தாவூத் தன் உரையில்,. பன்னாட்டு அளவில் 45 ஆயிரம் சங்கங்கள் மூலம் நாம் செய்கிற அறம் மனித வாழ்வை மாண்பு கூட்டும் வகையில் அமைகிறது என்றார். தெய்வநம்பிக்கை தான், தெய்வ அச்சம், தான் தண்டனை மட்டுமல்ல, நற் கூலியைத் தரும் என்றார். சினம் தவிர்த்தல், மனதையும், வாழ்க்கையையும், சீர் செய்யும் என்றார். விலங்குகள் கூட உயிர் இரக்கம் கொண்டு செயல்படும் சூழலில் மனிதர்களிடையே உயிர் இரக்கம் பரவ வேண்டும் என்றார். குறுகிய காலத்திலேயே உயிர்நீத்த மகாகவி பாரதி, வறுமையை நினைக்காமல் குருவிகளோடு, பறவைகளோடு, கொஞ்சி மகிழ்ந்தான். மன அமைதி கொண்டான் என்றார். எனவே நிர்வாகிகள் ஏற்பது பதவி அல்ல, பொறுப்பு ஏற்பு என்றும், ஒரு ஆண்டு காலத்தில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சேவைச் சிறப்பால் புகழ் கூட்ட வேண்டும் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவராக வழக்கறிஞர் பி.கார்த்திகேயன், செயலாளராக குமாரராஜா, பொருளாளராக சிவக்குமார் குழுவினருக்கு பொறுப்பேற்கச்செய்து அதிகாரச் சின்னமான சுத்தியலை வழங்கினார். மண்டலத்தலைவர் டி.நாகராஜன், வட்டாரத்தலைவர் ஆர்.தினகரன், மண்டல செயலர் கே.மனோகரன், பிஎன்.ஆனந்தநாராயணன்., எஸ்.சந்திர சேது, சூர்யா வே.கதிரவன், மேலை.பழநியப்பன் வாழ்த்துரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர், புகழூர், குளித்தலை, சின்னதாராபுரம், வெள்ளியணை, நொய்யல், பள்ளப்பட்டி லயன்ஸ் சங்கங்கள், அரசுக்கலைக்கல்லூரி, ஜெய்ராம் கலைக்கல்லூரி, கொங்கு கலை கல்லூரி, சேலம் அரசுக்கலைக் கல்லூரி இளம் அரிமா சங்க லியோ நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் 

No comments:

Post a Comment