Saturday 25 June 2016

அண்ணாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதா ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு – அம்மாவின் உத்திரவையே மீறும் மாவட்ட நிர்வாகம் – கரூர் அருகே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியும், இன்று வரை நிறைவேற்றாத தமிழக அரசு – இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க அரசை கண்டித்து விரைவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுமென எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.







கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்குட்பட்டது. பழைய ஜெயங்கொண்டம் பகுதி. இந்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தகுதி வாய்ந்தது. இந்நிலையில், இங்கே நிர்வாக சீர்கேட்டால் பழைய ஜெயங்கொண்டத்தின் வாரசந்தை, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு சமுதாய கூடம் ஆகியவைகள் சமூக விரோதிகள் மற்றும் மது குடிப்பகமாக மாறியுள்ள அவல நிலை நீடித்துள்ளது. அண்ணா பெயரால் இயங்கும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியிலேயே பழைய ஜெயங்கொண்டத்தின் அண்ணா சமுதாய கூடம் மூடப்பட்டிருக்கும் நிலை, அங்கே மதுக் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. மேலும் அப்பகுதியில் மது குடிப்பவர்கள் இரவு நேரத்தில் அருகில் உள்ள குப்பைகளையும், முட்செடிகளையும் கொளுத்தி விடுவதால் தினமும், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறதாகவும், இத்தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக்குகள் கேட்ட போது வந்தவர் தான். பின்னர் இப்பகுதிக்கு வருவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பகுதியின் அருகே அமைந்துள்ள மகாதானபுரம் (தெற்கு), கிராம நிர்வாக அலுவலகமும், அவரது குடியிருப்பும், கடந்த பிப்ரவரி மாதம் 27 ம் தேதி  இதே வருடம் இதே முதலமைச்சர் ஜெயலலிதாவினால் திறந்து வைக்கப்பட்டும், இன்று வரை மூடப்பட்டுள்ளதால் ஒருவேளை முதல்வராக இந்த கிராம நிர்வாக அலுவலர் ஏற்றுக் கொள்ள வில்லையா ? என்ற ஐயமும், இப்பகுதி மக்களிடையே நிலவி வருகின்றது. மேலும் இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கூட்டப்படும் வாரச்சந்தைகள் பயனில்லாமல் வீணாக போகின்ற நிலையில் மாணவ, மாணவிகள் கிரிக்கெட் விளையாடும் இடமாகவே தற்போது காட்சியளிக்கின்றது. மேலும் இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக விளையாட்டரங்கமும் இப்பகுதியில் அமைக்க வில்லை என்றும், இந்த வாரச்சந்தை கூடாரத்திலேயே அப்பகுதி வழியாக செல்லும் குடிகாரர்கள் அங்கேயே குடித்து விட்டு பாட்டிலை உடைத்து சமூக விரோதிகளின் கூடாரமாகவே இப்பகுதி திகழ்வதாகவும், இந்த வாரசந்தையை மூடாமல், மதுபான கடைக்கு செல்பவர்கள் மதுவை வாங்கி கொண்டு இங்கே தான் வந்து மது பருகுவதால், வீண் சண்டையோடு, அடிக்கடி தகராறு என்று தினந்தோறும் அரங்கேறுவதால், கிராம நிர்வாக அலுவலகம், அண்ணா சமுதாய கூடம் ஆகியவற்றை உடனே திறக்குமாறும், வாரச்சந்தையை உபயோகமில்லாத நாளில் பூட்டுமாறும், இதற்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்கும் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட மதுபான கடையை உடனே பூட்டுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே தமிழக முதல்வர் திறந்து வைத்தும் கிராம நிர்வாக அலுவலகம் திறக்காமல் இன்று வரை மொளனம் காக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படுமென பொதுமக்கள் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா இப்பகுதியில் வாக்குகள் சேகரிக்கும் போது மட்டுமே வந்ததாகவும், ஜெயித்த பிறகு வெற்றி பெற்றதால் இப்பகுதிக்கு வராததையும் சுட்டி காட்டிய இப்பகுதி மக்கள் இவரும், அ.தி.மு.க வை சார்ந்த எம்.எல்.ஏ என்பதையும்  சுட்டிக்காட்டியுள்ளனர்

No comments:

Post a Comment