Thursday 25 February 2016

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை துவக்கி வைத்தார்


செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மக்களவை துணை சப்நாயகர் டாக்டர் மு.தம்பித்துரை தொடக்கி வைத்தார்.
கரூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கரூர் எம்பியும், மக்களவை துணைத் தலைவருமான மு. தம்பிதுரை தொடங்கிவைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்தார்.
மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நலத்திட்ட உதவிகள், முக்கிய தலைவர்களுடன் முதல்வரின் சந்திப்பு நிகழ்வுகளின் புகைப்படங்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சி புதன், வியாழக்கிழமை இரண்டு நாட்கள் அனைத்து பொதுமக்களும் பார்த்து பயன்பெறும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திரளான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, கரூர் நகர்மன்ற துணைத் தலைவர் காளியப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment