Tuesday 5 April 2016

மோடியின் நல்லாட்சியை தமிழகத்தில் கொண்டு வருவது தான் எங்களது நோக்கம் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.சிவசாமியின் தீவிர வாக்கு சேகரிப்பு – தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு ஆங்காங்கே மக்களிடம் அனுமதி வாங்கி சுவர் விளம்பரம் – கரூர் தேர்தல் களம்

















தமிழகத்தில் 04-03-16 அன்று மதியம் 3.35 மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதற்கு முன்னாளே தமிழக அளவில் முதலமைச்சர் வேட்பாளரை பா.ம.க அறிவித்தவுடன், முதல் அமைச்சர் வேட்பாளராக பா.ம.க இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி இராமதாசு வை அக்கட்சி அறிவித்தது. மேலும் தமிழக அளவில் கூட்டணியை மக்கள் நலக்கூட்டணியாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ ஒருங்கிணைப்பில் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 4 கட்சிகளையும் சேர்த்து மக்கள் நல கூட்டணியாக அறிவித்தார். பின்னர் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த்தையும் கூட்டணியில் இணைத்து முதல்வர் வேட்பாளராக கொண்டு மக்கள் நல கூட்டணி இணைந்து செயல்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க தி.மு.க கட்சியில், காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணி நிலை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியில் முதல் 56 வேட்பாளர்களை அதன் தலைவர் தமிழிசை சொளந்தரராஜன் தேசிய தலைவர் அமித்ஷா அனுமதி வாங்கி அறிவித்தார்.
அதன் பேரில் கரூருக்கு முதலில் கரூர் சட்டமன்ற வேட்பாளராக முன்னாள் பா.ஜ.க மாவட்ட தலைவரான கே.சிவசாமியை அறிவித்தார். தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சொளந்தராஜன அறிவித்த நாள் முதல் அவருக்கும், தேசிய தலைவர் அமித்ஷாவிற்கும் நன்றி தெரிவித்த அவர் மோடியின் வழியில் தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென்றார். மேலும் அந்த நாள் முதல் கன்னி வேட்பாளரான எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்றும், மக்கள் சேவகனாக பணியாற்ற உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும் என்று கரூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சிவசாமி உருக்கமாக பொதுமக்கள் காலில் விழுந்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.
மேலும் பா.ஜ.க கட்சியானது முதலில் அறிவித்த 56 வேட்பாளர்களில் கரூர் மாவட்ட அளவில் முதல் முதலில் பா.ஜ.க கட்சியானது கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பா.ஜ.க வின் முன்னாள் மாவட்ட தலைவர் கே.சிவசாமியை நியமித்தது. அதற்கு பிறகு அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த மார்ச் மாதம் 26 ம் தேதி பேட்டி கொடுக்கும் போது,., இன்று மதியம் ராகு காலத்திற்கு முன்பு வேட்பாளர் கே.சிவசாமி செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க கட்சி மற்றும் முந்தைய தி.மு.க கட்சி ஆகிய இரு கட்சிகளும், மக்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை. இந்திய பிரதமர் மோடி அவர்களின் 21 மாத ஆட்சி காலத்தில் நல்ல வகையில் இந்தியாவிற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதே வழியில் தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை நாங்கள் செய்வோம், 2016 ம் சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளின் ஊழலையும், மோடி அரசின் சாதனைகளையும் மக்களிடையே தெரிவித்து பா.ஜ.க வேட்பாளராகிய நான் வாக்குகள் கேட்பேன். மேலும் இந்த அ.தி.மு.க அரசு கரூர் ரிங் ரோடு, கரூர் பூங்கா, கரூருக்கு புதிய பேருந்து நிலையம், காவிரி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களை தீட்டியதே தவிர அது வெறும் அறிவிப்பாக தான் உள்ளது திட்டங்கள் முழுமையாக தீர்க்கப்பட வில்லை. தற்போது அ.தி.மு.க கட்சியானது கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வலுவிழுந்துள்ளது. தி.மு.க கட்சியானது செயல் இழந்துள்ளது. இது ஒன்று போதும் எங்களின் வாக்குகள் முழுதாக பெற, நாடு நல்ல நிலையில் இருக்க, நல்லாட்சி மலர தாமரை மலர வேண்டும், இந்தியாவில் மலர்ந்த தாமரை தமிழகத்தில் விரைவில் மலரும், உங்களில் ஒருவனாக வாக்குகள் கேட்பேன், கடந்த அ.தி.மு.க அமைச்சர் போல ஏ.சி. வாகனத்திலே இருந்து பல வேலைகளை நடத்தி முடிக்க மாட்டேன், கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 6 கோடியில் அறிவிக்கப்பட்ட கரூர் டூ பசுபதிபாளையம் உயர்மட்டப்பாலம் தற்போது சுமார் ரூ 20 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று வரை அந்த பாலம் கட்டி முடிக்க பட வில்லை. தற்போது நான் கடந்த இரு முறை கரூர் மாவட்ட பா.ஜ.க மாவட்ட தலைவராக இருந்து வந்த நான், எந்த வித தேர்தலிலும் நிற்க வில்லை. அதாவது உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நிற்க வில்லை. முதன்முறையாக கன்னி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன் என்று கூறிய அவர். முதல் முதலில் சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் போது கன்னிச்சாமி என்கின்றனர். அதே போல சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை முதன் முதலில் பேசினால் கன்னி பேச்சு என்பார்கள். அது போல தான். இதுவும் எனக்கு முதல் தேர்தல், முதல் வேட்பாளராக கன்னி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன். எனக்கு வாக்களியுங்கள், மக்கள் சேவைக்காக பணியாற்ற எனக்கு ஒரு முறை வாய்ப்பளியுங்கள் நான் உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்றார்.
இதையடுத்து  கரூர் தொகுதியில், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிப்பில், பா..,வேட்பாளர் சிவசாமி ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆங்காங்கே கரூர் சட்டசபை தொகுதியில், .தி.மு.., - தி.மு.., - மக்கள் நல கூட்டணி - பா.., என, நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது என்ற நிலையை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதோடு,  பா..,வை தவிர,  மற்ற வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. பா..,வேட்பாளர்  சிவசாமி, கடந்த சில நாட்களாக பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். கடந்த, 2006ல், கரூர் சட்டசபை தொகுதியில் தி.மு.., சார்பில் வாசுகி, .தி.மு.., சார்பில் செந்தில்பாலாஜி, களமிறக்கப்பட்டனர். செந்தில்பாலாஜி, கரூர் சட்டசபை தொகுதியில் ஜாதி வேறுபாடின்றி, வித்தியாசமான முறையில் வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரித்தார். அதற்கு பலனும் கிடைத்ததால், எம்.எல்..,வாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், கரூர் சட்டசபை தொகுதியில் முதல் முதலாக களமிறங்கி உள்ள, பா.., வேட்பாளர் சிவசாமி, வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் காலில் விழுந்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் ஆங்காங்கே நக்கலடித்து வாக்குகள் பிரச்சாரம் நோட்டீஸ்கள் :
டாஸ்மாக் மனிதன் :
தமிழகத்தின் மிகச்சிறந்த குடிகாரர் யார் என்பதை தேர்ந்தெடுக்க விரைவில் போட்டி நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு "டாஸ்மாக் மனிதன்" என்ற பட்டம் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்கள் தமிழகத்தின் எந்த மூலையிலும் இலவசமாக மது அருந்தி கொள்ளலாம்... : தமிழக அரசு அறிவிப்பு.... இதுவும் நடக்கலாம்
என்றும்,
தமிழகத்தை சீரழித்து கொண்டிருக்கும் திமுக ... அதிமுகவை தமிழகத்திலிருந்து அடியோடு வேரறுப்போம்...
நல்லோர்கள் ஆட்சி அமைய வாக்களிப்போம் தாமரைக்கு..
என்றும்,
அதிமுக ,, திமுக இரண்டும் செய்து வந்த காவேரி மணல் கொள்ளையை தடுக்க போராடிய முதல் நபர் நமது பாஜக கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.K.சிவசாமி அவர்கள்...

என்றும்,
மணல் கொள்ளையை தடுக்க ஆதரிப்பீர்... பாஜக...வாக்களிப்பீர் தாமரைக்கு...
என்றும்,
வாக்காளர்களே சிந்தியுங்கள் ...
ஊழலற்ற ஆட்சியா? ஊழல் மிகுந்த ஆட்சியா ?
வாக்களிப்போம் தாமரைக்கு .... வாய்ப்பளிப்போம் திரு .K சிவசாமி அவர்களுக்கு ...
கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு.
என்றும் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆங்காங்கே பேஸ்புக், டுவிட்டர்களில் கலக்கி வரும் கரூர் பா.ஜ.க வேட்பாளர் கே.சிவசாமி பா.ஜ.க விற்கு வெற்றி உறுதி என்றே தெரிவித்தார் என்றால் அது மிகையாகாது,
ஆங்காங்கே முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்ததோடு, ரஜினி ரசிகர்களையும் ஒன்று திரட்டி ஆதரவை திரட்டினார். மேலும் பாரதீய ஜனதா கட்சியின் கரூர் சட்டமன்ற வேற்பாளர் திரு சிவசாமி அவரது கட்சியின் பரிவார அமைப்பான இந்து முன்னனி மாநில மாவட்ட நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்டு கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஆங்காங்கே அவ்வப்போது நடத்தி வருகிறார்.
கரூர் தொகுதியில், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிப்பில், பா..,வேட்பாளர் சிவசாமி ஈடுபட்டு வருகிறார். ஆட்டோ ஒட்டுநர், டாக்ஸி ஒட்டுநர், வயதான பெண்மணி, வாத்தியார்கள், பெரும் பழமை வாய்ந்த நண்பர்கள், பெரியவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கரூர் பா.ஜ.க சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கே.சிவசாமிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல், ரசிகர் மன்றத்தினர் ஆதரவும் பெருகி வருகிறது. மேலும் யில் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணியினர் ஆங்காங்கே
எத்தனை பேருக்கு தெரியும்...
பல ஆண்டு காலமாக கரூர் -முனியப்பன் கோவில் அரசு பள்ளியின் அருகே கொட்டப்பட்டு வந்த குப்பைகளை அகற்றியதோடு மட்டுமல்லாமல் , மீண்டும் அங்கே குப்பை கிடங்கு உருவாகாமல் தடுத்தது யார் திரு கே.சிவசாமி ஜி என்று ....
சுயநலன் பாராமல் உழைக்கும் உண்மையான மக்கள் தொண்டன்....
வாக்களிப்பீர் ... வாய்ப்பளிப்பீர்... என்று ஆங்காங்கே பொதுமக்களின் அனுமதி பெற்று ஆங்காங்கே வீட்டு சுவர்களில் விளம்பரங்கள் செய்து வரும் பா.ஜ.க கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தலிலும் சரி, வாக்குகள் சேகரிப்பதிலும் சரி ஒரு தனிக்கவனம் தான் செலுத்தி வருகிறது

No comments:

Post a Comment