Thursday, 25 February 2016

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை துவக்கி வைத்தார்


செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மக்களவை துணை சப்நாயகர் டாக்டர் மு.தம்பித்துரை தொடக்கி வைத்தார்.
கரூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கரூர் எம்பியும், மக்களவை துணைத் தலைவருமான மு. தம்பிதுரை தொடங்கிவைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்தார்.
மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நலத்திட்ட உதவிகள், முக்கிய தலைவர்களுடன் முதல்வரின் சந்திப்பு நிகழ்வுகளின் புகைப்படங்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சி புதன், வியாழக்கிழமை இரண்டு நாட்கள் அனைத்து பொதுமக்களும் பார்த்து பயன்பெறும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திரளான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, கரூர் நகர்மன்ற துணைத் தலைவர் காளியப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினம் தினம் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடும் அ.தி.மு,க வினர் தமிழக அளவில் முதலிடம் பிடித்தது - கோயில் வழிபாடுகள், நலத்திட்ட உதவிகளில் முதலிடம் பிடித்தது கரூர் மாவட்ட அ.தி.மு.க

தமிழக முதல்வரும், அ.தி.மு.க கழக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வைக்கப்ப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்.  கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் வைக்கப்பட்டிருந்த இந்த பிளக்ஸ் பேனர்களில் எந்த வித விளம்பரமில்லாமல் வெறும் பெயர் மட்டுமே போடபட்டுள்ளது. மேலும் அம்மாவின் படம், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படம், அறிஞர் அண்ணாவின் புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே விளம்பரத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாகவே அம்மாவின் பிறந்த தினம் கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் திருக்கோயில்கள் மட்டுமே ஒரு நாளில் 680 கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது 

Sunday, 21 February 2016

ஈழத்தமிழர் பிரச்சனையிலும், மீத்தேன் திட்டங்களிலும் திமுகவும், காங்கிரசும் கூட்டு குற்றவாளிகள் - கரூரில் வை.கோ பேட்டி



திமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுத்தா சட்டம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கூறுவது பொதுமக்களை ஏமாற்றுகிற வேலை, குற்றம் புரிந்தவர்களை தண்டிக்கின்ற அவங்கூறு அவையம் தான் அரசியல் - கரூரில் வை.கோ பேட்டியளித்தார்.
கரூரில் மக்கள் நல கூட்டணியின் சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கரூர் வருகை தந்த மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வை.கோ வை தாதம்பாளையம் ஏரி தொடர்பாக  அப்பகுதி விவசாயிகள் சந்தித்தனர். அப்போது அவர்கள் அமராவதி ஆற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை தாதம்பாளையம் ஏரியில் சேமித்து விவசாயம் செய்து வந்த நாங்கள் தற்போது அந்த நீர் வராததால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த சுமார் 20 வருடங்களாக இதற்காக போராடி வருவதாக கூறி வை.கோ விடம் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வை.கோ,
அமராவதி ஆற்றிலிருந்து தாதம்பளையம் ஏரிக்கு அணைப்புதூர் அணைகட்டில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் எடுத்து வந்தால் 26 கண்மாய்கள் நிரம்பும், சுமார் ஆயிரத்து 565 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்றார். இத்திட்டத்தை நிறைவேற்ற 38 கோடி ரூபாய் இந்தால் போதும், இவற்றை எந்த அரசாங்கமும் நிறைவேற்ற வில்லை, மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்றும் என்றார். மேலும் லோக் ஆயுத்தா சட்டம் என்பது ஊழல் செய்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் சட்டம். இது திமுகவிற்கு தெரியாதா இவர்கள் ஆட்சி காலத்தில் இவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தார்களா? இது ஸ்டாலினுக்கு தெரியாதா என்றார். இவர்கள் ஆட்சி காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது பொதுமக்களை
ஏமாற்றுகின்ற வேலை என்றார். மேலும், ஈழத்தமிழர் பிரச்சனையிலும், மீத்தேன் திட்டங்களிலும் திமுகவும், காங்கிரசும் கூட்டு குற்றவாளிகள்  என்றார். குற்றம்புரிந்தவர்களை தண்டிக்கின்ற அவங்கூறு அவையம் தான் அரசியல் என தெரிவித்தார். பேட்டியின் போது மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆசை.சிவா, மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்

பேட்டி - வை.கோ, மதிமுக பொதுச்செயலாளர்

Wednesday, 17 February 2016

கரூர் ஜி லிட்ரா வேலி பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது





கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஜி லிட்ரா வேலி பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழாவானது பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் தீப ஜோதி ஏற்றி தொடங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நல ஆர்வலர் லாவண்யா பாலாஜி  ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள், நீள ஓட்டம், நீளம் தாண்டுதல், யோகா மற்றும் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் A.ஆலென் கிறிஸ்டோ என்ற மாணவன் சுமார் 4 டன் கிலோ கொண்ட வேனை அந்த வேனில் 28 மாணவர்கள் அமர்ந்திருந்த நிலையில் அந்த வேனை கயிற்றால் இழுத்து சாதனை புரிந்து உள்ளான். 10 மீட்டர் தூரத்திற்கு மேல் கயிற்றால் வேனை  இழுத்த மாணவனுக்கு பள்ளி தாளாளர் மீனா சுப்பையா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றுகளும் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை ஜி லிட்ரா வேலி பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Saturday, 13 February 2016

கரூரில் குரங்கு முகத்துடன், கிளி மூக்குடன் கூடிய வெளி நாட்டு அதிசய பறவை பிடிபட்டது - தண்ணீர், பழம் கொடுத்து கிராம மக்கள் காப்பாற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.





கரூரை  அடுத்த  மண்மங்கலம்  சமத்துவபுரம்  பகுதியில்  தோட்டத்தில்  வித்தியாசமான சத்தம்  கேட்டுள்ளதுஅங்கு  சென்ற  இளைஞர்கள்  பார்த்த போது  குரங்கு முகம்  போன்றும்,  கிளி மூக்கு  போன்ற  மூக்குடன்  அதிசய பறவை  ஒன்று  இருந்துள்ளதுஅவற்றை அப்பகுதியில்  சுற்றி திரியும்  நாய்கள்  துரத்தியுள்ளதுஅவற்றிடமிருந்து  பறவையை மீட்ட  இளைஞர்கள்  அவற்றிற்கு  தண்ணீர்பழங்கள்  கொடுத்து  காப்பாற்றி வருகின்றனர்இதனையடுத்து  வனத் துறையினருக்கு  தகவல்  அளிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்மேலும்  தகவலறிந்து  அங்கு  வரும் பொதுமக்கள்  அதிசயமாக  பார்த்துச்  செல்கின்றனர்மேலும் இந்த அதிசய வெளிநாட்டு பறவையினை காண ஆங்காங்கே திரளான மக்கள் வந்து செல்வது அப்பகுதியில் வியப்பை ஊட்டியுள்ளது.

இன்று வரை அம்மாவிற்காக பாடுபடும் நாங்கள், அம்மா ஆட்சியில் இல்லாத போது கூட முதல்வர் மற்றும் பிரதமர் ஆக வேண்டி பிரார்த்தனை செய்தோம் – கரூரில் அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் காமராஜ் பேட்டி





வருகின்ற  2016  சட்டமன்ற  பொதுத்  தேர்தலில்  எந்த  அரசியல்  கட்சிகள் அருந்ததியர்  மக்களுக்கு அதிக சட்டமன்ற வேட்பாளர்களை கொடுக்கின்றதோ அந்த கட்சிக்கு அகில  இந்திய  மக்கள்  கட்சி  ஆதரவு  தெரிவிக்கும்  -  கரூரில் அக்கட்சியின் நிறுவனத்  தலைவர்  பேட்டி

 அகில  இந்திய  மக்கள்  கட்சி  ( அனைத்து அருந்ததியர் மக்கள் கூட்டமைப்புநிறுவனத் தலைவர்  காமராஜ், தலைமையில் கரூரில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்அப்போது  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர்திமுக  ஆட்சியில்  அருந்ததியர் மக்களுக்கு  3  சதவீதம்  இட  ஒதுக்கீடு  வழங்கப்பட்டதுதமிழகத்தின் தற்போதைய  முதல்வர் கடந்த  சட்டமன்ற  தேர்தலின்  போது ஆட்சிக்கு வந்தால்  சரியான  இட  ஒதுக்கீடு  வழங்குவதாக உறுதி  அளித்திருந்தார். ஆனால்  தற்போது  வரை  எதுவும்  செய்து  தரப்படவில்லை  என்றும் அருந்ததியினரின்  கோரிக்கையை  ஏற்று குதிரையுடன் கூடிய  ஒண்டிவீரரின்  சிலையும்,  மணி மண்டபத்தை அரசு  நிறுவி  வருகிறது, அதற்கு நன்றி தெரிவித்த கட்சியினர் மேலும் அந்த மணிமண்டபத்தை  சட்டமன்ற  தேர்தலுக்கு  முன்பாக  திறக்க  வேண்டும் என்றார் அருந்ததியர்  மக்கள் அதிகம்  வசிக்கின்ற  பகுதியில்  வேறு  தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தை  சார்ந்த  வேட்பாளராக  அறிவிப்பது  அருந்ததியினரை  அவமானப்படுத்துவது போன்றுள்ளது  என்றார்.   வருகின்ற 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிகள் அருந்ததியர்  மக்களுக்கு  அதிக  சட்டமன்ற  வேட்பாளர்களை கொடுக்கின்றதோ  அந்த  கட்சிக்கு  அகில  இந்திய  மக்கள்  கட்சி  ஆதரவு  தொpவிக்கும்  என்றார்மேலும் வருகின்ற  21.02.2016  அன்று  சென்னையில் அக்கட்சியின்   சார்பில்   மாநில  பொதுக்குழு மற்றும்   செயற்குழுக்  கூட்டம் நடைபெற  இருப்பதாகவும்அதில்  திமுகஅதிமுகபாஜக போன்ற  கட்சிகளின்  பிரதிநிதிகளை சிறப்பு அழைப்பாளராக அழைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய கட்சியின் நிறுவனத்தலைவர் பி.எம்.எம்.காமராஜ் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதே வருடம் 63 வது பிறந்த நாள் அன்று அப்போது ஆட்சியில் இல்லாத போதே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், அம்மா நீடுடி வாழ வேண்டுமென்று கரூர் மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சனை செய்த நான் எனது நிகழ்ச்சியை அம்மாவின் கழக இதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் வரவிடாமல் செய்தவர். தற்போதைய மாஜியும், அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி என்றார். மேலும் அப்போது ஆரம்பித்த அங்கப்பிரதட்சனம் கரூரிலிருந்து சென்னை வரை ஆங்காங்கே உள்ள சிறப்பு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை, தொழுகை, அன்னதான நிகழ்ச்சிகளையும் எங்கள் கட்சி ஏற்கனவே அதாவது அம்மா ஆட்சியில் இல்லாத போதே செய்தோம், தற்போதும் அம்மாவிற்காக பல நல்ல திட்டங்களை பொதுமக்களிடம் சொல்லி வருவதாக கூறிய நிறுவனத்தலைவர் பி.எம்.எம்.காமராஜ், முதன் முறையாக அம்மா பாரதப்பிரதமராக ஆக வேண்டி முதல் முறையாக சொன்னவரும் நான் தான் என்றார். அப்படி பட்ட அம்மா நலனில் அக்கறை கொண்ட எங்கள் கட்சி இன்றும் அ.தி.மு.க கூட்டணியில் தான் நீடிக்கிறது என்றும், எங்களது வளர்ச்சியை முறியடிக்கும் வகையில் கடந்த அ.தி.மு.க அதாவது மாஜி நிர்வாகிகள் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். எங்களது கோரிக்கைகளுக்கு அம்மா செவி சாய்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியின் போது கரூர் மாவட்ட தலைவர் மனோகரன், துணை தலைவர் ராஜலிங்கம் என்கிற ராஜா, கடவூர் ஒன்றிய செயலாளர் மாயவன், தாந்தோன்றி மலை ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, தாந்தோன்றி மலை ஒன்றிய இளைஞரணி தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Saturday, 6 February 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி – மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது




கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு போட்டிகள் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது. பின்னர் சனிக்கிழமை (06-02-16) இன்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் பொதுமக்களுக்கான கரூர் மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ்., கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன்., முன்னாள் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்நாதன், கரூர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், ஆயில் இரமேஷ்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். மொத்தம் 40 அணிகள் கலந்து கொண்ட இந்த கபடி போட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.