Sunday, 21 February 2016

ஈழத்தமிழர் பிரச்சனையிலும், மீத்தேன் திட்டங்களிலும் திமுகவும், காங்கிரசும் கூட்டு குற்றவாளிகள் - கரூரில் வை.கோ பேட்டி



திமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுத்தா சட்டம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கூறுவது பொதுமக்களை ஏமாற்றுகிற வேலை, குற்றம் புரிந்தவர்களை தண்டிக்கின்ற அவங்கூறு அவையம் தான் அரசியல் - கரூரில் வை.கோ பேட்டியளித்தார்.
கரூரில் மக்கள் நல கூட்டணியின் சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கரூர் வருகை தந்த மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வை.கோ வை தாதம்பாளையம் ஏரி தொடர்பாக  அப்பகுதி விவசாயிகள் சந்தித்தனர். அப்போது அவர்கள் அமராவதி ஆற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை தாதம்பாளையம் ஏரியில் சேமித்து விவசாயம் செய்து வந்த நாங்கள் தற்போது அந்த நீர் வராததால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த சுமார் 20 வருடங்களாக இதற்காக போராடி வருவதாக கூறி வை.கோ விடம் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வை.கோ,
அமராவதி ஆற்றிலிருந்து தாதம்பளையம் ஏரிக்கு அணைப்புதூர் அணைகட்டில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் எடுத்து வந்தால் 26 கண்மாய்கள் நிரம்பும், சுமார் ஆயிரத்து 565 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்றார். இத்திட்டத்தை நிறைவேற்ற 38 கோடி ரூபாய் இந்தால் போதும், இவற்றை எந்த அரசாங்கமும் நிறைவேற்ற வில்லை, மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்றும் என்றார். மேலும் லோக் ஆயுத்தா சட்டம் என்பது ஊழல் செய்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் சட்டம். இது திமுகவிற்கு தெரியாதா இவர்கள் ஆட்சி காலத்தில் இவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தார்களா? இது ஸ்டாலினுக்கு தெரியாதா என்றார். இவர்கள் ஆட்சி காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது பொதுமக்களை
ஏமாற்றுகின்ற வேலை என்றார். மேலும், ஈழத்தமிழர் பிரச்சனையிலும், மீத்தேன் திட்டங்களிலும் திமுகவும், காங்கிரசும் கூட்டு குற்றவாளிகள்  என்றார். குற்றம்புரிந்தவர்களை தண்டிக்கின்ற அவங்கூறு அவையம் தான் அரசியல் என தெரிவித்தார். பேட்டியின் போது மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆசை.சிவா, மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்

பேட்டி - வை.கோ, மதிமுக பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment