கரூரை அடுத்த மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியில் தோட்டத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்ற இளைஞர்கள் பார்த்த போது குரங்கு முகம் போன்றும், கிளி மூக்கு போன்ற மூக்குடன் அதிசய பறவை ஒன்று இருந்துள்ளது. அவற்றை அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் துரத்தியுள்ளது. அவற்றிடமிருந்து பறவையை மீட்ட இளைஞர்கள் அவற்றிற்கு தண்ணீர், பழங்கள் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர். இதனையடுத்து வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் தகவலறிந்து அங்கு வரும் பொதுமக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். மேலும் இந்த அதிசய வெளிநாட்டு பறவையினை காண ஆங்காங்கே திரளான மக்கள் வந்து செல்வது அப்பகுதியில் வியப்பை ஊட்டியுள்ளது.
Saturday, 13 February 2016
கரூரில் குரங்கு முகத்துடன், கிளி மூக்குடன் கூடிய வெளி நாட்டு அதிசய பறவை பிடிபட்டது - தண்ணீர், பழம் கொடுத்து கிராம மக்கள் காப்பாற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
கரூரை அடுத்த மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியில் தோட்டத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்ற இளைஞர்கள் பார்த்த போது குரங்கு முகம் போன்றும், கிளி மூக்கு போன்ற மூக்குடன் அதிசய பறவை ஒன்று இருந்துள்ளது. அவற்றை அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் துரத்தியுள்ளது. அவற்றிடமிருந்து பறவையை மீட்ட இளைஞர்கள் அவற்றிற்கு தண்ணீர், பழங்கள் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர். இதனையடுத்து வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் தகவலறிந்து அங்கு வரும் பொதுமக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். மேலும் இந்த அதிசய வெளிநாட்டு பறவையினை காண ஆங்காங்கே திரளான மக்கள் வந்து செல்வது அப்பகுதியில் வியப்பை ஊட்டியுள்ளது.
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment