கரூர் திருக்குறள்
பேரவைக்கு பாவேந்தர் பாரதிதாசனின் பேத்தி, செந்தமிழ் பாடினி, மரபு மாமணி, பாவலர் மணிமேகலை
குப்புசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கரூர் திருக்குறள் பேரவை சார்பில் கடந்த
ஜனவரி மாதம் பொங்கல் மலர், திருக்குறள் நாள் விழா மலர் ஆகியவை உரிய நாளில் தமக்கு வந்து
சேர்ந்ததாகவும், மலரை சிறப்பாக அமைத்துள்ளீர்கள் என்றும், இருபத்தொன்பது ஆண்டு காலமாக
திருக்குறள் சேவை செய்து சிறப்பான பொதுப்பணி ஆற்றியுள்ள கரூர் திருக்குறள் பேரவை செயலாளர்
மேலை.பழநியப்பனுக்கு வாழ்த்துக்களையும், மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்
என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது.,
தங்களைன் போன்று தமிழ் பணியிலும், திருக்குறள் பரப்புதழ் பணியில் உள்ளவர்களின் அளப்பரிய
தமிழ்ப் பற்றால், மொழியும், குறளும் உடன் எழுத்தாளர்கள் வளர்கிறார்கள். பாதுகாக்கப்
படுகிறார்கள். பழமை அழியாமலிருக்கிறது கவிதைகள்,
கட்டுரைகள், மலர்கள் மூலம், வெளியிடப்படுகையில் பழமையான வரலாற்றின் தடங்கள் புதுப்பிக்கப்படுகின்றன
என்றும் அவர் மேற்கொள் காட்டியுள்ளார்.
இது தவிர., ஒட்டடை
அடித்து, சுண்ணாம்பும் வண்ணங்களும் இட்டு, வண்ணமயமாக அழகின் புத்துணர்வுடன் வீடுகள்
பொங்கல் நேரத்தில் எவ்விதம் மிளிர்கிறதோ, அவ்வண்ணமே, பண்பாட்டுடன் இணைந்துள்ள வழமையான
செய்திகளை எழுதும் போது, இடைச்செருகல்கள் தவிர்க்கப்படுகின்றன. மக்களிடம் சென்று சேரவேண்டிய
செய்திகளுடன், நோக்கங்கள் மிக மதிப்பு நிலை பெற்று விடுவதும் நிறைவேறுகிறது. பாடல்களுக்கு
இடையே கட்டுரைகளும் அமைந்த விதம் படிக்க நயம், ஊடே வேறு பல செய்திகள் கதைகள் பயணிக்கின்றன.
இவை படிப்பதற்குச் சலிப்புத் தட்டாமல் பார்வைக்குள் நுழைந்து இதயத்திற்கு மகிழ்வளிக்கின்றன
என்று கடிதம் மூலம் அவர் தெரிவித்துள்ளார். இக்கடிதம் கரூர் திருக்குறள் பேரவைக்கு
வந்தவுடன் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் பாவேந்தர் ஐயா அவர்களின்
பேத்திக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உத்திரகாண்ட்
மாநில எம்.பி குறளின் குரள் தருண் விஜய் மூலம் புகழ் பெற்ற இந்த கரூர் திருக்குறள்
பேரவை மேலும் இந்த பாராட்டு மூலம் மேலும் புகழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment