Monday 23 May 2016

கரூர் பரணி பார்க் பள்ளியில் உள்ள பரணி கார்டனில் உத்திரகாண்ட் மாநில எம்.பியும், குறளின் குரல் தருண் விஜய் நலம்வேண்டி சர்வசமய பிரார்த்தனை நிகழ்ச்சி




உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக நீதிக்கான தனது பயணத்தின் போது கொடூர  தாக்குதலுக்கு உள்ளாகி டேராடூன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் ஆர்வலரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் நலம் பெற வேண்டி கரூர் பரணி கார்டன்ஸில் திருக்குறள் முற்றோதல் மற்றும் சர்வசமய பிரார்த்தனை நடைபெற்றது.
திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ராமசுப்ரமணியன்இ எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சாந்திஇ பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திருக்குறள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தருண்விஜய்யின் வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத்தில் திருக்குறள்  நிகழ்வுதிருக்குறள் கருத்துக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக தேசிய அளவில் திருவள்ளுவர் இளைஞர் இயக்கம் கண்டுஅதன் மூலம் பல்வேறு நற்செயல்கள் செய்து வருவது; புது தில்லி குடியரசு தலைவர் மாளிகையில் 133 திருக்குறள் மாணவர்களை பாராட்டி கௌரவித்தமை; மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கிலான இலவச திருக்குறள் புத்தக விநியோகம்; திருவள்ளுவர்  பாரதியார் பிறந்த தினங்களை நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொண்டாட  வழி செய்தமைபாராளுமன்றத்திலும் வட இந்தியாவிலும் உலக அரங்கிலும் திருக்குறள் பெருமையை தொடர்ந்து பேசி வருவதுஎத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் வட இந்தியாவில் உள்ள ஹரித்துவார் நகரில் கங்கைக் கரையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவ பாடுபட்டு வருவது; உள்ளிட்ட திரு தருண்விஜய் அவர்களின் தமிழுக்கு ஆதரவான தேசிய அளவிலான பங்களிப்புகள்  பங்கேற்பாளர்களால் நெகிழ்வோடு நினைவு கூறப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மற்றும் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment