கரூர் மாவட்டம்,
அரவக்குறிச்சி தொகுதி சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ வும், தற்போதைய தி.மு.க வேட்பாளருமான
கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமியின் கரூர் அண்ணா நகரில் உள்ள வீடு, ஜவஹர் பஜாரில்
உள்ள லாட்ஜ் களில் நேற்று (10-05-16) காலை முதல் இன்று அதிகாலை வரை வருமான துறையினர்
மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 20 மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையின்
பின்பு எந்த ஒரு டாக்குமெண்டுகளும் இல்லாத நிலையில் கே.சி.பி யின் மகன் கே.சி.பி.சிவராமன்
சென்னை அலுவலகத்தில் இருந்து சுமார் 1.50 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான துறையினர்
தேர்தல் ஆணையம் மூலம் சொல்கிறது. இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமி செய்திகளார்களை
சந்தித்தார். அப்போது., நான் வாக்குகள் சேகரிக்க சென்றுவிட்டேன்,. அப்போது வருமானத்துறையினர்
திடீர் சோதனை நடத்தி வருவதாகவும், சென்னையில் உள்ள எனது அலுவலகத்திலும் சோதனை நடத்தியுள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை, 52 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். 3 ஆயிரம் தொழிலாளர்களை
வைத்து தொழிற்சாலைகளை நடத்தி வருடம் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் டர்ன் ஒவர் செய்து,
வருமான வரி செலுத்தி அனைத்து வரிகளையும், செலுத்தி, நேர்மையாக தொழில் செய்து வருகிறேன்.
நேர்மையான வழியில் தொழில் செய்து வருகிறேன், லஞ்சம் வாங்காமல், கமிஷன் வாங்காமல் நேர்மையான
முறையில் தொழில் செய்து வருகிறேன். அரசியலில் தூய்மையாக வாழ்கிறேன். ஆனால் இன்று வந்தவர்
குறிப்பாக யார் பேச்சையோ கேட்டு, குறிப்பாக செந்தில் பாலாஜி போன்ற மோசமான பேரொளி, செந்தில்
பாலாஜி ஊருக்குள் சென்றால் தினசரி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என்று வேலை வாங்கி
தருவதாக கூறி, மோசடி செய்து வருகிறார்கள். அப்படி பட்ட ஒரு ஆள், நிறைய பினாமிகள் செந்தில்
பாலாஜி நிறைய பேர் உள்ளனர். தான் செய்யும் ஊழலை செய்ய மறைப்பதற்காகவும், தனது அரசியல்
வாக்குகள் சேகரிப்பை சிதறல் அடைக்கும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவர் செய்தாரோ ! இல்லை அவர் மூலமாக யார் மொட்டை கடுதாசி போட்டார்களோ ! தெரியவில்லை.
ஒரு வேளை தொலைபேசியில் சொன்னார்களோ ! அவரும் எனக்கு எதிரி கிடையாது ! நானும் அவருக்கு
எதிரி கிடையாது ! ஆனால் தேவையில்லாமல் குடும்ப ஆட்களுக்கு தேவையில்லாமல் சங்கடம் ஏற்படுத்தும்
வகையில் கடுஞ்சொற்கள் பேசியுள்ளனர். மேலும் எனது அலுவலகத்தில் இருந்து 1 கோடி எடுத்துள்ளதாகவும்,
வெளியாகியுள்ளனர். மாதம் ஒன்றுக்கு சம்பளம் மட்டும் 3 கோடி வழங்குகிறேன். அன்றாடம்
தேவைக்கு ரூ 30 லட்சம், சுமார் 50 லட்சம் தேவைக்கு ஏற்ப செலவு செய்கிறேன். வருமான வரி
செலுத்துகிறேன். விற்பனை வரி மாதம் ஒன்றுக்கு ரூ 1 கோடி கட்டுகிறேன். கலால் துறை மாதத்திற்கு
ரூ 3 கோடி கட்டுகிறேன். இப்படி வரிகள் கட்டி வருகிறேன், கேண்டீனுக்கும் செலவு செய்கிறேன்,
தொழிற்சாலையில் உணவிற்கான சாப்பாடு வழங்குவதற்கு நிறைய செலவு ஆகிறது. பெரிய தொழிற்சாலை,
நிறைய ஆட்கள் வேலை செய்கிறார்கள். என்னுடைய பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான்
இந்த சோதனை, நானும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சரி, நான் என்னை பற்றி மக்களுக்கு
தெரியும் எந்த வித ஊழல் குற்றசாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் என்மீது இல்லை.
ஒரு தப்பான வழியில் எனக்கு வாக்குகள் சேகரிப்பதை டைவர்ட் செய்யும் விதமாக இந்த சோதனை
ஏற்பட்டுள்ளது. என் பணியை பற்றி மக்களுக்கு தெரியும், மேலும் இதில் ஒரு முக்கியமான
செய்தி என்னவென்றால், செந்தில் பாலாஜியை கரூர் தொகுதியில் மீண்டும் அந்த கட்சியின்
பொதுசெயலாளர் ஜெயலலிதா நிற்க வைக்காமல், அரவக்குறிச்சியில் நிற்க வைத்துள்ளார். ஏன்
என்றால் கரூர் தொகுதியில் அவர் செய்துள்ள வேலைகள் பற்றி அந்த அம்மாவிற்கு தெரியும்
கரூர் தொகுதியில் நின்றால் தோற்று விடுவோம் என்ற காரணத்தினால் தான் என் தொகுதியான அரவக்குறிச்சி
தொகுதியில் நிற்க வைத்துள்ளார். அரவக்குறிச்சியில் நான் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக
இருந்த வகையில் எனது தொகுதியில் 56 ஊராட்சிகளுக்கும், 5 பேரூராட்சிகளுக்கும், சிறப்பான
சேவை செய்து வந்துள்ளேன். மேலும் எனக்கு எங்கே சென்றாலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதை பொறுக்காத வகையில் இந்த சோதனை கூட நடந்திருக்கலாம் என்றார். நான் 50 ஆயிரம் வாக்குகள்
பெற்று வெற்றி பெறுவேன். எனக்கு அரவக்குறிச்சி மக்கள் என்னை இன்றும் நம்புகிறார்கள்
என்றார்.
Sincere efforts always win
ReplyDeletenice
ReplyDelete