புகைப்படம்:
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் தேசிய அளவில் சிறப்பான
மதிப்பெண் பெற்ற பரணி வித்யாலயா மாணவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜஸ்ரீ ஆகியோரை
பள்ளித் தாளாளர் சா.மோகனரங்கன்,முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன்,
முதல்வர்.சு.சுதாதேவி பரிசு வழங்கி பாராட்டுகின்றனர். அருகில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்
சி.பி.எஸ்.இ.
+2 தேர்வில் கரூர் பரணி வித்யாலய பள்ளி மாணவர்கள் அபார சாதனை புரிந்து,கரூர்
மாவட்டத்திற்கு தேசிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளனர்.
கரூர் தனி மாவட்டமாக தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு
பிறகு முதன் முதலாக இந்த ஆண்டு தான் சி.பி.எஸ்.இ. வழியில் மாணவர்கள் +2 பொதுத்
தேர்வு எழுதுகின்றனர்.
பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் +2 பொதுத்
தேர்வு எழுதிய 44 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று
சாதனை புரிந்துள்ளனர்.
மாணவர் கிருஷ்ணமூர்த்தி 95.1%மதிப்பெண்
பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவி ராஜஸ்ரீ 92.3%மதிப்பெண்
பெற்று இரண்டாமிடம் பிடித்தார். மாணவி ஸ்ரீநிதி 90%மதிப்பெண்
பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
மருத்துவ படிப்பு குறித்த எதிர்பார்ப்பு தேசிய அளவில் அதிகம் உள்ள
இத்தருணத்தில்,‘அறிவியல் – உயிரியல்’ பிரிவில்
மாணவர் மனோஜ் 97 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்
பிடித்துள்ளார். தேர்வு எழுதிய 13 மாணவர்களில், 11 பேர் உயிரியலில்
95 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்து
கரூர் மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
வணிகவியல் பிரிவில் தேர்வு எழுதிய 14மாணவர்களில், 12 பேர் வணிகவியல்பாடத்தில்
95 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேசிய அளவில் புதிய சாதனை
புரிந்துள்ளனர். மாணவர்கள் கிருஷ்ணமூர்த்தி,
பத்மநிரஞ்சன் 98 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர்.
பொருளியல் பாடத்தில் மாணவி ஸௌபர்நிகா தேசிய
அளவில் இரண்டாவது மதிப்பெண் ஆகிய 99 பெற்று
சாதனை புரிந்துள்ளார்.
ஆங்கிலம், வேதியியல் பாடங்களில் மாணவி ஸ்ரீநிதி, மாணவர் மனோஜ் 95
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.
கணக்கியல் பாடத்தில் மாணவர் பத்மநிரஞ்சன், மாணவி
பிரீத்தி, மாணவி வீர ஆஞ்சனதேவி ஆகியோர் 95 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தனர்.
கணிதம் & இயற்பியல் பாடங்களில்மாணவி ராஜஸ்ரீ முறையே 95, 94 மதிப்பெண்
பெற்று முதலிடம் பிடித்தார்.
கணினி அறிவியல் பாடத்தில் மாணவர் கிருஷ்ணமூர்த்தி
96 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்
பிடித்தார்.கணினி அறிவியல் பாடத்தில்9
பேர்,90
மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர்.
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் முதல் ஆண்டிலேயே தேசிய
அளவில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மற்றும் அவர்கள் மகத்தான வெற்றிக்கு
காரணமாக இருந்த பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன்,
முதல்வர்.சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா & ஆசிரியர்களை பள்ளித் தாளாளர்
சா.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், நிர்வாக அலுவலர்மு.சுரேஷ் மற்றும்
பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment