Sunday, 1 May 2016

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளராக இருந்து வந்த தனியரசு கட்சியில் இருந்த நீக்கம் – அ.தி.மு.க கூட்டணிக்கு அடுத்தடுத்த சோகம்







கரூர் செங்குந்தபுரம் பகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் அவசர கூட்டம் அதன் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர், சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தனியரசுவால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க விற்கு கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான உ.தனியரசு கட்சியின் விதிகளுக்கு மாறாக இது வரை செயல்பட்டு வந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதாக எந்த ஒரு கட்சி நிர்வாகியிடமும், தெரிவிக்காமல் அவரே சுயேட்சையாக நின்று ஆதரவு மற்றும் சீட்டு வாங்குவது கட்சியினருக்கும், கட்சி கொள்கைகளுக்கும் முரண்பாடாக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கார்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பொறுப்பிலிருந்து உ.தனியரசுவையும், கட்சியிலிருந்தும், அவர் நீக்கப்பட்டதாகவும், முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் அவர்கள் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நடந்து வரும் போது கட்சியின் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான உ.தனியரசுவோ, என் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ பதவி போதும் என்றும் மற்றவர்கள் எல்லாம் புரோட்டோவை புட்டு போட்டல் ஒடி விடுபவர்கள் தான் என்று கட்சியினரை அவதூறாக பேசிவருவதையும் சுட்டிக்காட்டிய அவர்கள் கடந்த 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் எம்.எல்.ஏ ஆக ஜெயிக்க வைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கு ரூ 25 லட்சம் வீதம் நாங்கள் வசூல் செய்து தந்ததாகவும், ரூ 3 கோடி அளவிலான அந்த பணத்தை தற்போது நாங்கள் போய் கேட்கவா ? முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்கள். மேலும் மாவீரன் தீரன் சின்னமலையின் வழியில் கோவை செழியனார் கண்ட எங்கள் கட்சியை திறம்பட நடத்த வேண்டுமென்றால் அதற்கு உ.தனியரசுவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் தெய்வசிகாமணி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 11 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை இது வரை ஜனநாயக முறைப்படி பதிவு செய்யப்பட வில்லை. ஆகவே, இது வரை பதிவு செய்யப்படாத இந்த கட்சி முறையாக பதிவு செய்து ஜனநாயக முறைப்படி எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவோம் என்று கூறிய ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன். இதுவரை நாங்கள் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் மகளிரணி செயலாளர் செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment