Saturday, 30 April 2016
Friday, 29 April 2016
Thursday, 28 April 2016
Wednesday, 27 April 2016
இன்னைக்கு இந்தியாவில் நாதியற்ற மக்கள் யாரென்றால் அது விவசாய மக்கள் மட்டும் தான் அதனால் தான் கேப்டனின் ஆட்சி வந்தவுடன் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யபடும் மதிமுக பொது செயலாளர் வைகோ பேச்சு.
கரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நல கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் வை.கோ கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வேட்பாளர் கலையரசனை ஆதரித்து கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது., இன்று இந்தியாவில் நாதியற்ற மக்கள் யாரென்றால் அது விவசாய மக்கள் மட்டும் தான் அதனால் தான் கேப்டனின் ஆட்சி வந்தவுடன் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், தேசிய வங்கிக் கடன்கள், கூட்டுறவு வங்கி கடன்கள், தனியார் வங்கிகடன்கள், கந்துவட்டிக்கடன்கள், நிதிநிறுவன கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படும், மேலும் அவர்களுக்கு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அதாவது எங்கள் கூட்டணியின் 6 கட்சிகளில் உள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றியசெயலாளர்கள், ஊராட்சிப்பிரதிநிதிகள் என்று வேட்பாளர்களாக நிற்பவர்களிடம் பூத்திற்கு பணம் கொடுக்க வேண்டுமென்று கேட்கக் கூடாது. பாவம் அவர்கள் எங்கே செல்வார்கள். தோற்றால் தோற்றுப்போனாலும் பரவாயில்லை. என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் நாம் ஆட்சிக்கு வருவதே ஊழலை ஒழிக்க தான், அதே நேரத்தில் நாமே வேட்பாளர்களிடம் பூத்திற்கு பணம் கேட்டால் ரூ 2 கோடி செலவு செய்து ஆட்சிக்கு நாம் வந்தவுடன் நமது பெயர் சொல்லி ரூ 10 கோடிக்கு மேல் சம்பாதிப்பார்கள், இதனால் நாம் வருவது ஊழலை ஒழிக்க தான் என்று கண்டிப்பாக கூறினார். மேலும் இக்கூட்டத்தில் ம.தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கபினி சிதம்பரம் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tuesday, 26 April 2016
கலக்குகிறார் கரூர் அ.தி.மு.க வேட்பாளர் - கொளுத்தும் வெயிலிலும் நடைபயணமாகவும், ஆங்காங்கே கூலி வேலை செய்யும் வேலையாட்களிடம் டீ குடித்த வாறும், வேலை செய்தவாறும் வாக்குகள் சேகரித்து வரும் கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
வரும் மே மாதம்
16 ம் தேதி தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது இந்நிலையில் ஆங்காங்கே பல்வேறு
அரசியல் கட்சியினர் பல்வேறு விதமாக அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கரூர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான
எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை முதல் இரவு வரை நடைபயணமாகவும், அரசியல் முக்கிய பிரமுகர்கள்
மற்றும் பேச்சாளர்கள் வந்தால் மட்டும் வாகனத்தை பயன்படுத்துவார். இப்படி கரூர் ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும், கரூர் பெரு நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளிலும்
சூறாவளி சுற்றுப்பயணம் போல கொளுத்தும் வெயிலிலும், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் கரூர்
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சேகரித்து வருகின்றார். செவ்வாய்க்கிழமையான
இன்று (26-04-16) கரூர் அருகே உள்ள வெங்கமேடு, கடைவீதி, பாரதியார் தெரு உள்ளிட்ட பல
பகுதிகளில் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள்
சேகரித்து வருகின்றார். இந்நிலையில் சற்று இடைவெளி டீ குடிக்க எடுத்துக் கொண்டாலும்
அந்த டீ குடிக்கும் இடத்தில் டீ குடித்தவாறும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதோடு, கட்டிட
தொழிலாளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதோடு, ஆங்காங்கே உள்ள கூலித்தொழிலாளர்களுக்கு
உதவி செய்தவாறு தீவிரமாக பிரச்சாரத்தையும் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள்
சேகரித்து வருகின்றார். இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே ஒரு சில இடங்களில்
வாக்குகள் சேகரித்த போது ஒரு இஸ்லாமிய பெண் அவர்கள், பெயர் சலிதா பேகம் தம்பி, நான்
இந்த ஊரு கிடையாது உங்க அம்மா ஜெயலலிதா நிற்கும் ஆர்.கே. நகர் என்றவுடன் காலில் விழுந்து
நீங்கள் அங்கு தானம்மா ! இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் போட வேண்டும் அம்மா என்று
அந்த அம்மாவை வணங்கி ஆர்.கே.நகருக்கும் வாக்குகள் கேட்டார். இந்நிகழ்ச்சியில் கரூர்
நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கோல்டு
ஸ்பாட் ராஜா, ஆயில் ரமேஷ், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் அருகே அருகே புன்னம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
கரூர் அருகே உள்ள
புராதானம் மிக்க புன்னம் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம்,
க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னம் பகுதியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது.
இங்கு தினசரி ஒரு கால பூஜையும் முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.
கடந்த 10ந்தேதி
கம்பம் நடுதலுடன் திருவிழா துவங்கியது. இதனையடுத்து தினசரி ஒவ்வொரு நாளும் பல்லக்கு
வாகனம், காமதேனு வாகனம், பூ பல்லாக்கு வாகனம் ஆகிய வாகனங்களில் தினசரி சுவாமி வீதி
உலா நடைபெற்று வந்ததுடன் இதனை வீடு வீடாக சென்று படி விளையாட்டு பூஜை நடைபெற்று வந்தது.
படி பூஜை விழாவையொட்டி அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து செல்வர். இதேபோல் ஒவ்வொரு
நாள் ஒவ்வொரு அலங்காரமாக மஞ்சள் காப்பு, மீனாட்சி, காமாட்சி அம்மன், மகாலட்சுமி, துர்கையம்மன்,
சந்தன காப்பு, காளியம்மன் ஆகிய அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமியை தரிசனம்
செய்து வந்தனர்.
கடந்த 24ம்தேதி
பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு
அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் காலை அக்னிசட்டி, அழகு குத்துதலுடன் ஆற்றங்கரையில் இருந்து புனித
நீர் தீர்த்தம் ஆண்கள் பெண்கள் குந்தைகள் உள்பட ஏராளமான பலர் கொண்டு வந்து சிறப்பு
பூஜை நடைபெற்றது.
நேற்று பெரிய மாரியம்மனுக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா;களால் பொங்கல் வைக்கப்பட்டு கிடாவெட்டு மாவிளக்கு
பூஜை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியான தேரோட்டத்திற்காக அலங்காரம் செய்யப்பட்ட பெரிய மாரியம்மனை தேரில் வைத்து
காலை 11.00மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டது.
கோயிலில் இருந்து
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை 12.20மணிக்கு வந்தடைந்தது. இதில்
புன்னம், பசுபதிபாளையம், சடையம்பாளையம், குளத்தூர், அய்யனூர், பழமாபுரம், ஆலாம்பாளையம்,
வள்ளிபுரம் உள்பட கிராமத்தை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று 27ந் தேதி கம்பம் கோயில்
கிணற்றில் விடப்பட்டு மஞ்சள் நிராட்டுடன் விழா நிறைவுவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்
தர்மகர்த்தா நடேசன், முப்பாட்டுக்காரர் பிச்சைமுத்து கிராம மக்கள் இளைஞா; அணியினா;
பக்தர்கள் செய்திருந்தனர்.
அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல் - வாலிபரை குடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
கரூர் மாவட்டம், மாயனூரை அடுத்த கட்டளை பகுதியைச் சேர்ந்த கரிகாலன் மகன் லெனின் பிரசாத், 25. மணவாசியில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் பகுதியில் கடந்த 2014 ம் வருடம் மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மே மாதம் 20 ம் தேதி மாலை, திருவிழாவுக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற லெனின் பிரசாத், அன்றிரவு வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில், 21 ம் தேதி காலை மணவாசி சமத்துவபுரம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த மாயனூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று லெனின் பிரசாத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அருண் பிரகாஷ் திருமணம் ஆகவில்லை. இதனிடையே அதே டோல்கேட்டில் பணியாற்றும் முனியப்பனின் மனைவி கலைச்செல்வி என்பவருக்கும் இவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த முனியப்பன், மனைவியை கண்டிக்காமல், தன்னுடைய நண்பர்களான அதே பகுதியை சார்ந்த ரஞ்சித்குமார், விஜயகுமார் அகியோருடன் இணைந்து அருண் பிரகாஷ் ஐ மது குடிக்க கூப்பிட்டு திட்டம் தீட்டி மது போதையின் உச்சத்தில் அருண் பிரகாஷ் ஐ கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (26-04-16) கரூர் மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், லெனின் பிரசாத்தை திட்டம் தீட்டி கொலை செய்த குற்றத்திற்காக முனியப்பனுக்கும், அவருக்கு உதவிய நண்பர்களான விஜயகுமார், ரஞ்சித் குமார் ஆகிய மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ ஆயிரம் அபராதமும், அதை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கரூர் மாவட்டத்தில் இது போல கள்ளக்காதலுக்காக அடிக்கடி கொலை நடப்பது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Monday, 25 April 2016
கொலையும், கொள்ளையும் செய்வதற்கு கூச்சப்படாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்யும் கொள்ளைக்குடும்பம் தான் கருணாநிதி குடும்பம் – கரூரில் நாஞ்சில் சம்பத் பேச்சு
கரூர் அ.தி.மு.க
வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் வெங்கமேடு, தாந்தோன்றிமலை, கரூர் பேருந்து
நிலையம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில்
சம்பத், திறந்த வேனில் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் வாக்குகள் சேகரித்தார். அப்போது
அவர் பொதுமக்களிடம் பேசியதாவது., தமிழகத்தில் கடந்த 1967 ல் செத்துப்போன காங்கிரஸ்
கட்சிக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி 41 தொகுதிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் தாரை வார்த்து
கொடுத்தது தமிழர்களுக்கு செய்து துரோகம் கருணாநிதி தான், மேலும் 234 தொகுதிகளிலும்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தைரியம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு
என்றார். மேலும் கரூரில் நிற்கும் காங்கிரஸ்
வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வேன் என்றார். மேலும் கொலையும், கொள்ளையும் செய்வதற்கு
கூச்சப்படாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்யும் கொள்ளைக்குடும்பம் தான் கருணாநிதி குடும்பம்
தான் என்று தி.மு.க கட்சி தலைவரை சரமாரியாக கரூரில் நாஞ்சில் சம்பத் பேசியே தாக்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)