Tuesday 26 April 2016

அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல் - வாலிபரை குடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு






கரூர் மாவட்டம், மாயனூரை அடுத்த கட்டளை பகுதியைச் சேர்ந்த கரிகாலன் மகன் லெனின் பிரசாத், 25.  மணவாசியில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் பகுதியில் கடந்த 2014 ம் வருடம் மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மே மாதம் 20 ம் தேதி மாலை, திருவிழாவுக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற லெனின் பிரசாத், அன்றிரவு வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில்,  21 ம் தேதி காலை மணவாசி சமத்துவபுரம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த மாயனூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று லெனின் பிரசாத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அருண் பிரகாஷ் திருமணம் ஆகவில்லை. இதனிடையே அதே டோல்கேட்டில் பணியாற்றும் முனியப்பனின் மனைவி கலைச்செல்வி என்பவருக்கும் இவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த முனியப்பன், மனைவியை கண்டிக்காமல், தன்னுடைய நண்பர்களான அதே பகுதியை சார்ந்த ரஞ்சித்குமார், விஜயகுமார் அகியோருடன் இணைந்து அருண் பிரகாஷ் ஐ மது குடிக்க கூப்பிட்டு திட்டம் தீட்டி மது போதையின் உச்சத்தில் அருண் பிரகாஷ் ஐ கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (26-04-16) கரூர் மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், லெனின் பிரசாத்தை திட்டம் தீட்டி கொலை செய்த குற்றத்திற்காக முனியப்பனுக்கும், அவருக்கு உதவிய நண்பர்களான விஜயகுமார், ரஞ்சித் குமார் ஆகிய மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ ஆயிரம் அபராதமும், அதை கட்டத்தவறினால் மேலும்  ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கரூர் மாவட்டத்தில் இது போல கள்ளக்காதலுக்காக அடிக்கடி கொலை நடப்பது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment