Monday 25 April 2016

தேர்தல் வருவதால் பிரேமலதா பிரச்சாரத்துக்கு வந்தால் விரட்டி ஆடியுங்கள்: நிர்மலா பெரியசாமி ஆவேசம்




குண்டடிப்பட்டதற்கும், குடித்து குரல் கெட்டதற்கும் வித்யாசம் இல்லையா ? என்று நடிகை விந்தியா ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நேரத்தில் ‘‘ எம்.ஜி.ஆர்., குறித்து தவறாக பேசிய, பிரேமலதா பிரச்சாரத்துக்கு வந்தால் விரட்டி அடியுங்கள்’’ என, .தி.மு.., தலைமை கழக பேச்சாளரும், டி.வி., செய்தி வாசிப் பாளருமான வணக்கம் புகழ் நிர்மலா பெரியசாமி தெரி வித்தார்.
கரூர் சட்டசபை தொகுதி .தி.மு.., வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து, அரசு காலனி, வாங்கல், கடம்பங்குறிச்சி, செவிந்திப் பாளையம், மண்மங்கலம், வெங்கமேடு, கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், நிர்மலா பெரியசாமி பேசினார்.
அப்போது, அவர்  கூறுகையில், ‘‘ கடந்த, 1977 ம் ஆண்டு முதல், 1984 ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல்களில், எம்.ஜி.ஆரை ஆதரித்து ஓட்டு போட்டவர் கள் வேறு கட்சிக்கு ஓட்டு போடுவதை கனவிலும் கூட நினைக்க மாட்டார்கள்.
கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., அவரை பின்பற்றி, முதல்வர் ஜெயலலிதா, கிராமங்களை அடிப்படை வசதிளை பெருக்கியுள்ளார். எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை, .தி.மு.., வுக்கு மட்டும் உண்டு. வேறு யாருக்கும் அந்த அருகதை இல்லை.
எம்.ஜி.ஆர்., ரோஸ் கலரில் இருப்பார். ஆனால், தற்போது கருப்பு எம்.ஜி.ஆர்., என கூறிக்கொண்டு, விஜயகாந்த் தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சினிமாவில் ஏமாற்றியதை, நிஜ வாழ்க்கையிலும் மக்களை ஏமாற்ற முடியாது.
விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என, தமிழக மக்கள் கூறுகின்றனர். ஆனால், பிரேமலதா எம்.ஜி.ஆர்., பேசியது மட்டும் புரிந்ததா என கேள்வி கேட்கிறார். எம்.ஜி.ஆர்., குறித்து விமர்சனம் செய்வதை பிரேமலதா நிறுத்தி கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., குறித்து தவறாக பேசிய பிரேமலதா பிரச்சாரத்துக்கு வந்தால், விரட்டி அடியுங்கள். தொடர்ந்து ஆறாவது முறையாக முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா வர, .தி.மு.., வை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாக்கு சேகரிக்கும் போது அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கோல்டு ஸ்பாட் ராஜா, ஆயில் ரமேஷ், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment