Wednesday 27 April 2016

இன்னைக்கு இந்தியாவில் நாதியற்ற மக்கள் யாரென்றால் அது விவசாய மக்கள் மட்டும் தான் அதனால் தான் கேப்டனின் ஆட்சி வந்தவுடன் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யபடும் மதிமுக பொது செயலாளர் வைகோ பேச்சு.






கரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நல கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் வை.கோ கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வேட்பாளர் கலையரசனை ஆதரித்து கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது., இன்று இந்தியாவில் நாதியற்ற மக்கள் யாரென்றால் அது விவசாய மக்கள் மட்டும் தான் அதனால் தான் கேப்டனின் ஆட்சி வந்தவுடன் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், தேசிய வங்கிக் கடன்கள், கூட்டுறவு வங்கி கடன்கள், தனியார் வங்கிகடன்கள், கந்துவட்டிக்கடன்கள், நிதிநிறுவன கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படும்,  மேலும் அவர்களுக்கு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அதாவது எங்கள் கூட்டணியின் 6 கட்சிகளில் உள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றியசெயலாளர்கள், ஊராட்சிப்பிரதிநிதிகள் என்று வேட்பாளர்களாக நிற்பவர்களிடம் பூத்திற்கு பணம் கொடுக்க வேண்டுமென்று கேட்கக் கூடாது. பாவம் அவர்கள் எங்கே செல்வார்கள். தோற்றால் தோற்றுப்போனாலும் பரவாயில்லை. என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் நாம் ஆட்சிக்கு வருவதே ஊழலை ஒழிக்க தான், அதே நேரத்தில் நாமே வேட்பாளர்களிடம் பூத்திற்கு பணம் கேட்டால் ரூ 2 கோடி செலவு செய்து ஆட்சிக்கு நாம் வந்தவுடன் நமது பெயர் சொல்லி ரூ 10 கோடிக்கு மேல் சம்பாதிப்பார்கள், இதனால் நாம் வருவது ஊழலை ஒழிக்க தான் என்று கண்டிப்பாக கூறினார். மேலும் இக்கூட்டத்தில் ம.தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கபினி சிதம்பரம் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment