Tuesday 26 April 2016

கலக்குகிறார் கரூர் அ.தி.மு.க வேட்பாளர் - கொளுத்தும் வெயிலிலும் நடைபயணமாகவும், ஆங்காங்கே கூலி வேலை செய்யும் வேலையாட்களிடம் டீ குடித்த வாறும், வேலை செய்தவாறும் வாக்குகள் சேகரித்து வரும் கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்








வரும் மே மாதம் 16 ம் தேதி தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது இந்நிலையில் ஆங்காங்கே பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு விதமாக அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கரூர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை முதல் இரவு வரை நடைபயணமாகவும், அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பேச்சாளர்கள் வந்தால் மட்டும் வாகனத்தை பயன்படுத்துவார். இப்படி கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும், கரூர் பெரு நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் போல கொளுத்தும் வெயிலிலும், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சேகரித்து வருகின்றார். செவ்வாய்க்கிழமையான இன்று (26-04-16) கரூர் அருகே உள்ள வெங்கமேடு, கடைவீதி, பாரதியார் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்நிலையில் சற்று இடைவெளி டீ குடிக்க எடுத்துக் கொண்டாலும் அந்த டீ குடிக்கும் இடத்தில் டீ குடித்தவாறும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதோடு, கட்டிட தொழிலாளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதோடு, ஆங்காங்கே உள்ள கூலித்தொழிலாளர்களுக்கு உதவி செய்தவாறு தீவிரமாக பிரச்சாரத்தையும் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே ஒரு சில இடங்களில் வாக்குகள் சேகரித்த போது ஒரு இஸ்லாமிய பெண் அவர்கள், பெயர் சலிதா பேகம் தம்பி, நான் இந்த ஊரு கிடையாது உங்க அம்மா ஜெயலலிதா நிற்கும் ஆர்.கே. நகர் என்றவுடன் காலில் விழுந்து நீங்கள் அங்கு தானம்மா ! இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் போட வேண்டும் அம்மா என்று அந்த அம்மாவை வணங்கி ஆர்.கே.நகருக்கும் வாக்குகள் கேட்டார். இந்நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா, ஆயில் ரமேஷ், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment