Tuesday 26 April 2016

கரூர் அருகே அருகே புன்னம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்





கரூர் அருகே உள்ள புராதானம் மிக்க புன்னம் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னம் பகுதியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி ஒரு கால பூஜையும் முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.
கடந்த 10ந்தேதி கம்பம் நடுதலுடன் திருவிழா துவங்கியது. இதனையடுத்து தினசரி ஒவ்வொரு நாளும் பல்லக்கு வாகனம், காமதேனு வாகனம், பூ பல்லாக்கு வாகனம் ஆகிய வாகனங்களில் தினசரி சுவாமி வீதி உலா நடைபெற்று வந்ததுடன் இதனை வீடு வீடாக சென்று படி விளையாட்டு பூஜை நடைபெற்று வந்தது. படி பூஜை விழாவையொட்டி அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து செல்வர். இதேபோல் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரமாக மஞ்சள் காப்பு, மீனாட்சி, காமாட்சி அம்மன், மகாலட்சுமி, துர்கையம்மன், சந்தன காப்பு, காளியம்மன் ஆகிய அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வந்தனர்.
கடந்த 24ம்தேதி பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை அக்னிசட்டி, அழகு குத்துதலுடன் ஆற்றங்கரையில் இருந்து புனித நீர் தீர்த்தம் ஆண்கள் பெண்கள் குந்தைகள் உள்பட ஏராளமான பலர் கொண்டு வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா;களால் பொங்கல் வைக்கப்பட்டு கிடாவெட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்காக அலங்காரம் செய்யப்பட்ட பெரிய மாரியம்மனை தேரில் வைத்து காலை 11.00மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டது.
கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை 12.20மணிக்கு வந்தடைந்தது. இதில் புன்னம், பசுபதிபாளையம், சடையம்பாளையம், குளத்தூர், அய்யனூர், பழமாபுரம், ஆலாம்பாளையம், வள்ளிபுரம் உள்பட கிராமத்தை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று 27ந் தேதி கம்பம் கோயில் கிணற்றில் விடப்பட்டு மஞ்சள் நிராட்டுடன் விழா நிறைவுவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நடேசன், முப்பாட்டுக்காரர் பிச்சைமுத்து கிராம மக்கள் இளைஞா; அணியினா; பக்தர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment