Monday 25 April 2016

வரும் மே மாதம் 16 ம் தேதி நடைபெறும் கரூர் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக அரசியல் கட்சியில் பாரதீய ஜனதா கட்சி வேட்புமனு தாக்கல்






தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சியினர் சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் கரூர் சட்டமன்ற தேர்தலுக்கு முதல்முறையாக அரசியல் கட்சி சார்பில் பா.ஜ.க சார்பில் அதன் வேட்பாளர் கே.சிவசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகமும், கரூர் சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் பா.ஜ.க வேட்பாளர் கே.சிவசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு முன்னதாக சுயேட்சையாக கரூர் வெண்ணைமலை பகுதியை சார்ந்த சக்கரவர்த்தி என்பவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற இயக்கம் சார்பிலும், தோரணக்கல்பட்டி வெங்கடாசலம் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திங்கள்கிழமையான இன்று மூன்றாவதாக வேட்பு மனு தாக்கல் செய்த பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளரும், முன்னாள் மாவட்ட தலைவருமான கே.சிவசாமி, கோவை ரோட்டில் உள்ள பணிமனையில் இருந்து பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பாலசுப்பிரமணியனிடம், தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, செய்தி தொடர்பாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பா.ஜ.க வேட்பாளர் கே.சிவசாமியின் வேட்புமனுவிற்கு மாற்றாக நிர்மலா என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளரின் விபரம் பற்றி வருமாறு : பி.ஏ, வரலாறு பட்டம் படித்த இவர் , கரூர் அருகே உள்ள சின்ன கோதூர் பகுதியில் கோதூர் ரோட்டில் நீலம் கார்டன் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு அசையும் சொத்து ரூ 15 லட்சத்து 51 ஆயிரத்து 459 ஆகவும், வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ 38 லட்சத்து 16 ஆயிரத்து 334 ஆகவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகும்

No comments:

Post a Comment