Tuesday 8 December 2015

சுமார் 10 ஆயிரத்திற்கு நிதி கொடுத்தாலோ ? பொருட்கள் ஏதேனும் கொடுத்தாலோ விளம்பரத்தை நாடும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் எந்த வித விளம்பரமில்லாமல் சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அரசிடம் ஒப்படைத்த முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ மலையப்பசாமி




தமிழகத்தில் கடந்த பல தினங்களாக பெய்து வரும் தொடர்மழையினால் சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் தங்களது உடமைகளை இழந்தவர்களுக்காக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள், அரசியல் வாதிகள் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு இந்திய அரசும், இந்திய அளவில் உள்ள மற்ற மாநில அரசுகளும் பல கோடி ரூபாய்களை நிவாரண நிதிகளாக கொடுத்து வருகின்றனர். மேலும் ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டும் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களையும் தந்து வருகின்றனர். இந்நிலையில் ஏதாவது நிவாரணம் மற்றும் பொது மக்களுக்கு உதவி செய்பவர்கள் பயங்கர விளம்பர பிரியர்கள் மத்தியில் எந்த வித ஆடம்பரமில்லாமல் யாரிடமும் சொல்லாமல் முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி கரூர் கோட்டாட்சியரிடம் சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் கொடுத்தார்.

கபிலர் மலை முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ வும், காந்திகிராமம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு வாரியத்தலைவரும், கரூர் கொசுவலை உற்பத்தியாளர் சங்க தலைவருமான ஏ.ஆர்.மலையப்பசாமி எந்த வித ஆடம்பர மின்றி தங்களது பகுதியில் சேமித்த பெட்சீட், கொசுவலை, துண்டு, பிஸ்கட், தண்ணீர், நோட்டு, புத்தகங்கள் என சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் கோட்டாட்சியர் பொருட்களை பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏவர் கிரீன் பவுண்டேஷன் தலைவர் ஸ்காட் தங்கவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதே போல் கரூர் கொங்கு மெஸ் அண்ட் குருப்ஸ் சார்பில் கொங்கு மெஸ் உரிமையாளர் எம்.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ 2.10 லட்சத்திற்கான வரைவோலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இருவரும் எந்த வித ஆடம்பரமில்லாமலும், யாரிடமும் சொல்லாமல் அவரவர் அவர் வேலைகளை பார்ப்பது போல கொடுத்த சம்பவம் இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment