அண்ணன் வீட்டை
விட்டு கிளம்பிட்டாரு ! அண்ணன் குத்துவிளக்கேற்றுகிறாரு ! அண்ணன் சாமி கோயிலில் சாமிகும்பிடுகிறார்
! இப்படி இருந்த அ.தி.மு.க தற்போது புகழ்ச்சியை விரும்பாமலும், ஏழை எளிய தொண்டன் என்கிற
வார்த்தை மட்டுமே காதில் கேட்கிறது – மாவட்ட செயலாளர் மாற்றத்திற்கு பிறகு அ.தி.மு.க
அபரீத வளர்ச்சி
நாடோடிகள் படத்தில்
வருவது போல, அண்ணன் டீ கடை திறந்து வைக்கிறார். அண்ணன் மற்றவர்களுக்கு வாழ்வளித்த போது
என விளம்பரம், விளம்பரம், பிளக்ஸ், உள்ளூர் தொலைக்காட்சிகளில் மட்டுமே பெருமை கண்ட
கரூர் அ.தி.மு.க நிர்வாகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர்
ஜெயலலிதா, திடீரென அந்த விளம்பரத்தினாலும், விளம்பர பிரியனுமான செந்தில் பாலாஜியால்
மிகுந்த பாதிப்படைந்த விஜயபாஸ்கர் என்பவரை தேர்ந்தேடுத்து அ.தி.மு.க மாவட்ட செயலாளராக
அறிவித்தார். அதாவது எந்த ஒரு செயல் செய்யினும், அதில் புகழ்ச்சி ஏற்படாவிட்டாலும்
கடையேனும் தொண்டனுக்கும் பயன்பெறும் வகையில் அமையாமல் வெறும் விளம்பரம் மட்டுமே தேடிக்கொள்ளும்
செந்தில் பாலாஜி மத்தியில் அவரை வளர்த்த விட்ட பல மூத்த நிர்வாகிகளை மதிக்காமலும்,
அவர்களின் நிகழ்ச்சியை மறைத்து அவர்களை ஓரங்கட்டிய செந்தில் பாலாஜியை திடீரென மாவட்ட
செயலாளர் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து அக்கட்சியின்
பொதுச்செயலாளர் ஜெயலலிதா திடீரென மாற்றினார். இந்த நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள
அடிப்படை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்
செந்தில் பாலாஜியால் பழி வாங்கப்பட்ட விஜயபாஸ்கரை திடீரென மாவட்ட செயலாளராக அக்கட்சியின்
பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில் கட்சி
பதவி அறிவித்ததில் இருந்து எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சி சுமார்
7 மணி என்றால் 6.45 க்கே அங்கு சென்று பொதுமக்களிடையே அடிப்படை தொண்டர் போல் தான் எங்கும்
சென்று வருகிறார். தற்போதைய மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், மேலும் எந்த நிகழ்ச்சிக்கும்
பிளக்ஸ் பேனர் வைப்பதில்லை. அப்படி வைத்திருந்தாலும் கட்சி சின்னமும், கட்சி கலர் மட்டும்
இல்லாமல் கட்சியின் சாதனையும் மட்டும் தான் உள்ளது. இவரின் பெயரை கரூர் மாவட்டத்தில்
ஏதாவது பேப்பரிலும், டி.வியிலும் வந்தால் மட்டுமே. அப்படி பப்ளிசிட்டி பிடிக்காமல்
செயலில் மட்டுமே முழு வீச்சில் ஈடுப்பட்டிருக்கும். விஜயபாஸ்கர் கோயிலில் அன்னதானம்
என்று எடுத்துக் கொண்டால் அன்னதானத்தை துவங்கி வைப்பதோடு, அந்த அன்னதானத்திலும் பங்குபெறுவது
தான் இவருடைய நோக்கம், மக்களோடு, மக்களாக இவர் ஒரு மாவட்ட செயலாளர் என்பதை கூறிக் கொள்வதை
விட அம்மாவின் அடிப்படை எளிய தொண்டன் என்றே கூறி கொள்வார். மேலும் எந்த ஏதாவது நிகழ்ச்சியில்
கலந்து கொண்டால் பொதுமக்களோடு, பொதுமக்களாக கலந்து கொண்டு எந்த ஒரு அடிப்படை தொண்டன்
மற்றும் நிர்வாகி மட்டுமில்லாமல், அத்தனை பேரையும் சமமாக கருதி, தொண்டருக்கு எந்த வித
சிரமமும் இல்லாமல் தனி நபர் துதி பாடுவது இல்லாமல் முழுக்க முழுக்க ஒன்லி அம்மா தான்
என்ற வார்த்தை மட்டுமே இன்றும் கூறி வருகிறார். மேலும் இவரது வாழ்க்கையை பார்க்க பார்க்க
நடிப்பு என்பது கூறாமல் முழு மனதோடு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்
என்றே கூறலாம். ஆனால் கரூர் மாவட்ட மக்களுக்கு திடீரென ஒரு கேள்வி எழுந்துள்ளது. தமிழக
போக்குவரத்து துறை அமைச்சர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், அப்படி, இப்படி என ஏக வசனம்
கூறிய மாஜியின் பிளக்ஸ், பேனர்கள் விளம்பரம் மத்தியில் இப்படி ஒரு சாதாரண மனிதனை எப்படி
பார்ப்பார்கள் என்பது தான்.
ஆனால் எந்த ஒரு
கட்சி மீட்டிங் மற்றும் நி்கழ்ச்சியாக இருந்தாலும் சரி, கழக நிகழ்ச்சியாக இருந்தாலும்
சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளை
முழுமையாக அரவணைத்து கொண்டு, ஒட்டு மொத்தமாக கூட்டம் கூட்டமாக அ.தி.மு.க வினர் ஒற்றுமையாக
இருக்க வேண்டுமென்பதற்காக குறித்து நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் இவரது
நோக்கமாக உள்ளது என்கின்றனர் கட்சியினர். ஒன்லி விளம்பரம் இல்லாமல் எளிய தொண்டனாகவே
கட்சியில் களம் கண்டு வந்து வருகிறார். கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர். கரூர் மாவட்டத்தில்
உள்ள ஒட்டு மொத்த அ.தி.மு.க வினரிடையே மட்டுமில்லாமல் மாற்று கட்சியினரையும் இவருடைய
செயல் கவர்ந்துள்ளது என்கின்றனர். மேலும் முன்னாள் மாஜி அமைச்சர் சின்னசாமியோ, இப்படி
அ.தி.மு.க வில் நிகழ்ந்திருந்தாலோ, இவர் அன்றே மாவட்ட செயலாளராக இருந்தாலோ நான் ஏன்
தி.மு.க வில் இணைகிறேன் என்று சொல்லாத குறையாக ஆங்காங்கே சொல்லி வருகிறாராம்.
இது ஒரு புறம்
இருக்க தமிழகத்திலேயே தற்போது பெய்து மழை வெள்ளத்திற்கு கரூரிலிருந்து அ.தி.மு.க சார்பில்
அவ்வளவு நிவாரண பொருட்களை கொடுத்த பெருமை அ.தி.மு.க விற்கு என்று நாம் சொன்னால். அது
அம்மாவிற்கு மட்டும் தாங்க இந்த பெருமை என்று அமைதியாக பதில் சொல்லி விட்டு செல்லும்
மாவட்ட செயலாளரை இது வரை கட்சியில் பார்த்திருக்க முடியாது என்கிறனர் முன்னாள் மாவட்ட
செயலாளர்கள். எது எப்படியோ அ.தி.மு.க கட்சி அபரீத வளர்ச்சி பெற்றது என்றால் கரூர் மாவட்டத்தில்
நூற்றிற்கு நூற்று 10 என்கிற மாதிரி கரூரில் பெரும் புத்துணர்ச்சியை பெற்றுள்ளது என்றால்
அது மிகையாகாது.
மேலும் வார்டு
கவுன்சிலராக போஸ்டிங் போட்டுவிட்டாலே போதும் இந்த காலத்தில் அவர்களுடைய அளப்பரையில்
நாடு தாங்காது. என்கிற வகையில் காரை விட்டு காலில் இரங்காது என்று பார்த்து பார்த்து
புளித்த மக்களிடையே இவர் ஒரு வித்யாசமானவர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக
அனைத்து சொற்களையும் ஒட்டும் மொத்தமாக இவருக்கு பொருந்தும் என்றால் அதுவும் மிகையாகாது
மனிதனை மதிக்கத்தெரிந்த பண்பாளர்.தொடர்க நற்பணி.
ReplyDeleteGood work
ReplyDelete