கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க கட்சிக்கு
அடுத்த படியாக ம.தி.மு.க கட்சி தான் செயல்படுகிறது. மக்களுக்கான போராட்டத்திலும்
சரி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்
கரூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய பரணி.கே.மணியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ
நீக்கியதையடுத்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார். மேலும் இந்த
பணியிடம் வெற்றிடமாக இருக்க கூடாது என்றும் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்றும்
ம.தி.மு.க நிர்வாகிகள் கூறியதையடுத்து தாந்தோன்றி ஒன்றிய செயலாளராக பணியாற்றிய
கபினி.சிதம்பரத்தை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ, கரூர் மாவட்ட பொறுப்புக்குழு
தலைவர் கபினி.சிதம்பரத்தை நியமித்தார். இதையடுத்து கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை
ம.தி.மு.க வினர், ம.தி,மு.க கட்சி உருவான போது காட்டிய எழுச்சியை கட்சியில் காட்டி
வருகின்றனர். மேலும் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில் கரூர்
மாவட்டத்தைப் பொறுத்தவரை அப்பணியில் அ.தி.மு.க விற்கு அடுத்தபடியாக ம.தி.மு.க
கட்சி ஒன்று மட்டுமே இருக்கிறது. ஆளுகின்ற அ.தி.மு.க கட்சியினர் கேட்கும் இடத்தில்
நிவாரண பணிகளை தொழிலதிபர்கள் கொடுத்து வரும் நிலையில் ம.தி.மு.க வினர் தங்களது சொந்த பணத்தை போட்டு,
காலிகுடங்கள், பெட்சீட், பாய்கள், பிஸ்கட், கொசுவலை, புதிய துணி உள்ளிட்ட
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர். கரூர் மாவட்ட ம.தி.மு.க
அலுவலகமான தாயகத்தில் இருந்து முதல் கட்டமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோ
விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட ம.தி.மு.க அலுவலகமான தாயகத்தில் கரூர் மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் கபினி.சிதம்பரம் தலைமையில் வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பினர். அருகில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா., மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா.பொன்னுசாமி, இளைஞரணி நிர்வாகிகள், சிபிராஜ், முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாக ஆஇந்த வெள்ள நிவாரணப் பொருட்களின் மதிப்பு சுமார்
7.80 லட்சம் ஆகும். இந்த பொருட்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர உள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட கட்சி தி.மு.க வினரும், ஆளுகின்ற கட்சி அ.தி.மு.க
கட்சியினர் மத்தியில் எந்த வித பலனும் கிடைக்காமல் ம.தி.மு.க கட்சியினர் செய்து
வரும் இப்பணி அப்பகுதி பொதுநல ஆர்வலர்களிடம் மிகவும் வரவேற்பைப்பெற்றுள்ளது
No comments:
Post a Comment