கரூர் அருகே அணைப்பாளையம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் நேற்றும் (04-12-15), இன்றும் (05-12-15) பால் கொள்முதல் செய்யாத காரணத்தினால் ஆவேசமடைந்த கால்நடை விவசாயிகள் திடீரென பாலை சாலையில் ஊற்றியும், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் பாலை கொள்முதல் செய்ய வில்லை என்றால் பல்வேறு சாலைமறியல் உள்ளிட்ட அறவழிப்போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி மண்டல ஆவின் பால் கூட்டுறவு பெருந்தலைவர் பழனியாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீயபுரம் போலீஸிடம் தகராறு செய்ததையடுத்து முதல்வர் ஜெயலலிதாவால் அப்பணியில் இருந்து தூக்கப்பட்டார். இந்த நிலையில் வேண்டுமென்றே, அ.தி.மு.க வினர் மற்றும் தி.மு.க வினர் தூண்டுதலோடு கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதலை டேங்கர் லாரிகள் மூலம் எடுக்காமல் அரசு நிர்வாகமும், அந்தந்த நிர்வாகமும் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. ஒரு நேரத்திற்கு இந்த ஒரு சொசைட்டியில் மட்டும் சுமார் 1,500 லிட்டர் எனவும், கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் லிட்டர் மட்டும் வீணாகப்போகிறது என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசு கேட்டால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சென்னை மக்களுக்கும் இலவசமாக தரையில் ஊற்றும் பாலை தருகிறோம் எனவும் விவசாயிகள் ஆவேச பேட்டியளித்துள்ளனர். மேலும் இந்த பேட்டிக்பிறகு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிட்டர் பாலை பொதுமக்கள் சாலையில் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது, ஒரு புறம் இருக்க தன் இரத்தத்தின் ஒரு பாதியை பாலாக மாற்றிய பசுவின் பாலை விற்று பிழைப்பு நடத்தும் கால்நடை விவசாயிகளின் வியர்வையும், சாலையில் ஆறாக ஒடியதை அப்பகுதி சாலையில் பயணம் செய்தவர்கள் கண்டு கொண்டிருக்கலாம். இந்த நூதன ஆர்பாட்டம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Saturday, 5 December 2015
மழை வெள்ளத்தையடுத்து பால் விலை சென்னையில் கிடு கிடு உயர்வு – ஆனால் கரூர் மாவட்டத்தில் பால் கொள்முதலை எடுக்க யாரும் இல்லாததால் பாலை கீழே கொட்டு விவசாயிகள் நூதன போராட்டம்
கரூர் அருகே அணைப்பாளையம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் நேற்றும் (04-12-15), இன்றும் (05-12-15) பால் கொள்முதல் செய்யாத காரணத்தினால் ஆவேசமடைந்த கால்நடை விவசாயிகள் திடீரென பாலை சாலையில் ஊற்றியும், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் பாலை கொள்முதல் செய்ய வில்லை என்றால் பல்வேறு சாலைமறியல் உள்ளிட்ட அறவழிப்போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி மண்டல ஆவின் பால் கூட்டுறவு பெருந்தலைவர் பழனியாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீயபுரம் போலீஸிடம் தகராறு செய்ததையடுத்து முதல்வர் ஜெயலலிதாவால் அப்பணியில் இருந்து தூக்கப்பட்டார். இந்த நிலையில் வேண்டுமென்றே, அ.தி.மு.க வினர் மற்றும் தி.மு.க வினர் தூண்டுதலோடு கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதலை டேங்கர் லாரிகள் மூலம் எடுக்காமல் அரசு நிர்வாகமும், அந்தந்த நிர்வாகமும் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. ஒரு நேரத்திற்கு இந்த ஒரு சொசைட்டியில் மட்டும் சுமார் 1,500 லிட்டர் எனவும், கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் லிட்டர் மட்டும் வீணாகப்போகிறது என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசு கேட்டால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சென்னை மக்களுக்கும் இலவசமாக தரையில் ஊற்றும் பாலை தருகிறோம் எனவும் விவசாயிகள் ஆவேச பேட்டியளித்துள்ளனர். மேலும் இந்த பேட்டிக்பிறகு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிட்டர் பாலை பொதுமக்கள் சாலையில் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது, ஒரு புறம் இருக்க தன் இரத்தத்தின் ஒரு பாதியை பாலாக மாற்றிய பசுவின் பாலை விற்று பிழைப்பு நடத்தும் கால்நடை விவசாயிகளின் வியர்வையும், சாலையில் ஆறாக ஒடியதை அப்பகுதி சாலையில் பயணம் செய்தவர்கள் கண்டு கொண்டிருக்கலாம். இந்த நூதன ஆர்பாட்டம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment