Monday, 7 December 2015

கரூர் - தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் தானமாக வரப்பட்ட கால்நடைகளை சுய உதவிக்குழுவை சேர்ந்த 17 நபர்களுக்கு பராமரித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி வழங்கினார்


கரூர் அருகே உள்ள தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் சுய உதவிக்குழுவை சேர்ந்த நபர்களுக்கு கோதானம் எனப்படும் பசுக்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மூலம் காணிக்கையாக வரப்பட்ட 17 கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்து பயன்பெறும் விதமாக வறுமையிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த நபர்களை தேர்வுசெய்து வழங்கிடும் வகையில் 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வுசெய்து கால்நடைகள் வழங்கப்பட்டு பயனாளிகள் கால்நடைகளை நன்றாக பராமரித்து அதன்மூலம் உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்தார். இதே மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி இதே கோயிலுக்கு மூன்றாவது முறையாக கோ தானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் லலிதா இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment