காவிரி நதி ஜீவ
நதி, மொழி வாரி மாநிலம் அமைந்ததால் காவேரியின் உற்பத்தியிஸ்தானம் கர்நாடகம் என அமைந்து
விட்டது. கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மகிரி
மலைத்தொடரில் பாக மண்டலத்திலிருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் தலைக்காவேரியில் கடல் மட்டத்திலிருந்து
4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகிறது.
இந்த காவிரி நதியானது
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் 81.155 சடுர கிலோ மீட்டர்
பரப்பு காவேரி நீர்வரத்துபகுதி ஆகும். காவேரி கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 320 கி.மீட்டர்
ஓடுகிறது. இதற்கு உபநதிகளாக ஹேரங்கி, ஹேமாவதி, லக்ஷ்மண தீர்த்தா, கபிணி. சொர்ணவதி
ஆகும். இப்படி காவிரி நதியில் மட்டும் இத்தனை பாசனம் பெறும் நமக்கு இப்போது பெய்த பருவ
மழை ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி
ஏரி, குளம், நதிக்கு செல்லும் பாதையை புதுப்பித்து, ஆங்காங்கே நதிகளின் குறுக்கே அணையை
கட்டி நாம் அந்த மழை நீரை சேமித்து ஒரு சொட்டு கூட கடலில் கலக்காமல் சேகரித்தால் தமிழகம்
தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின்
தலைவர் மகாதானபுரம் இராஜாராம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தினமலர்.காம் இணையதளத்திற்கு
கொடுக்கும் சிறப்பு பேட்டியாவது., காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம் (தமிழ்நாடு)
1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. காவிரியின் பிரச்சினை கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும்
1924 ம் வருட அங்கிகாரம் ரத்து என்று சொன்னதற்கு பிறகு அந்த உரிமையை மீட்டுத்தருவதற்காக
இந்த சங்கம் அமைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்து அது 17, 20 வருடங்கள் நடந்து, அதன் பிறகு உச்சநீதிமன்றம், இந்த பிரச்சினைக்கு
மத்திய அரசு செய்கிறதா ? , இல்லையா ? என்று கேட்டதற்கு, மத்தியில் வி.பி.சிங், மாநிலத்தில்
கருணாநிதி இருந்த போது நடுவர் மன்றம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த நடுவர்
மன்றம் அமைத்து கொடுத்து அங்கீகாரம் வழங்கி கொடுத்த கருணாநிதிக்கு தஞ்சையில் நடைபெற்ற
மாநாட்டில் காவிரி கொண்டான் என்ற விருது எங்களது
சங்கத்தின் மூலம் விருது வழங்கப்பட்டது. அந்த சமயம் கெசட் ஆகி விட்டது. அந்த கெசட்டில்
போட வேண்டுமா ? என மத்திய அரசு தள்ளி போட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த பாடு
பட்டு அதை கெஜட்டில் போட வேண்டும் என்று பாடுபட்டார். அதற்காக தஞ்சையில் முதலமைச்சர்
ஜெயலலிதா அவருக்கு தஞ்சையில் மாநாடு நடத்தி பொன்னியின் செல்வி என்ற விருதையும் வழங்கினோம்.
ஆக இந்த சங்கம் காவிரியின் உரிமை, கர்நாடகாத்திலிருந்து நமக்கு பெற வேண்டிய தண்ணிரை
பெறுவதற்கு ஒரு வழக்கு போட்டு அதில் ஓரளவு சக்சஸ் ஆகி விட்டது. இப்போது நடுவர் மன்ற
இறுதி தீர்ப்பு என்ன ? சொல்லி இருக்கிறது என்றால், 419 டி.எம்.சி தமிழ்நாட்டின் பங்கு
என சொல்லி இருக்கிறது. அந்த அளவு வரும் போது, 192 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும்
என சொல்லி இருக்கிறது. மிச்சம் சுமார் 210 டி.எம்.சி தண்ணீர் எப்படி வருகிறது என்றால்
தமிழகத்தில் உள்ள அமராவதி, பவானி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் இருந்தும் கோவை, ஈரோடு,
திருப்பூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்யும் மழைகளினால் தான், இந்த
220 டி..எம்.சி தண்ணீர் தான் நமது பங்கு என சொல்லி உள்ளமோ தவிர நாம் அந்த தண்ணீரை தேக்க
எதாவது முயற்சி செய்கிறோமா ? என்றால் அது கிடையாது இந்நிலையில் கடந்த 1956 – 57 ம்
ஆண்டு மதிப்பிற்குரிய காமராஜர் அவர்கள் ஆங்காங்கே அணைகள் கட்டினார், அமராவதி அணையும்,
பவானி அணையும் கட்டினார். மேலும் அதே காலத்தில் அதிகமாக மழைபெய்யும் போது காவிரி ஆற்றின்
கரூர் மாவட்டத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் கட்டினார். தடுப்பணையும் கட்டினார்.
அதற்கு பிறகு யாரும் அணை கட்ட வர முன் வரவில்லை. நல்ல இன்ஜினியர்களை கொண்டு ஆங்காங்கே
தடுப்பணைகளை கட்டினால் நல்லது என ஆங்காங்கே புத்தகங்கள் கொடுத்து போராட்டம் நடத்தினோம்.
இந்நிலையில் மாயனூர் கதவணை கட்டி அதில் 1.05 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்தோம். அதே
போல அந்த கதவணையில் உள்ள கிரமாங்களில் சுமார் 5 கி.மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம்
உயர்ந்துள்ளதோடு விளைச்சலும் நன்கு உள்ளது. அது போல ஒரு மாதத்திற்கு முன்னர் 1 சொட்டு
தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகா அரசு கூறியதையடுத்து கரூர் மாவட்டம், மாயனூர்
செல்லாண்டியம்மன் கோயிலில் எங்கள் சங்கம் சார்பில் விஷேச வேள்வி நடத்தினோம். பிறகு
நன்கு மழை பெய்தது, சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சில
இடங்களில் மழை சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை செல்லும் பாதையை அபகரித்து கட்டிடம்
கட்டியதால் தான் இந்த சேதம், ஆதலால், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும்
நீர்வழிப்பாதைகளை எடுக்கணும், இது போல செய்தால் எதிர்காலத்தில் நல்ல ஒரு தண்ணிறைவு
பெற்ற மாநிலமாக மாறும் தற்போது மாறியுள்ளது. இரு மாதத்திற்கு முன்னர் நாம் நதியிலிருந்து
வரும் தண்ணீரை சேகரித்தால் போதும் தமிழகம் தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும், ஆதலால்
விவசாயம் செழிக்கவும், இண்டஸ்ட்ரீஸ் போன்றவைகளின் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டுமானால்
மத்திய, மாநில அரசு ஒன்றிணைந்து வறட்சி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி ஆகியவற்றைகளை
ஒன்றிணைத்து அணை கட்டினாலே போதும், உலகளவில் தமிழகம் தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும்
என கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment