கரூர் அருகே உள்ள
புன்னஞ்சத்திரம் பகுதியை சார்ந்தவர் பழனியம்மாள், இவரது கணவர் அமாவாசையுடன் அருந்ததியர்
தெருவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவரான சுப்பிரமணி
என்பவர் இவர்களது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அவர்களுடைய நிலத்தை கையாடல் செய்ததாக
புகார் தெரிவித்து அந்த புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில்
பாதிக்கப்பட்ட அந்த முதிய தம்பதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே மண்ணெண்ணெய் ஊற்றிக்
கொண்டு தீடீரென தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்
தீக்குளிக்க தீப்பட்டியை எடுக்கும் போது போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும்
அசம்பாவதம் தடுக்கப்பட்டன. மேலும் அந்த பழனியம்மாள் என்ற பெண்மணி அங்கேயே ஒப்பாரி வைத்ததால்
கூட்டம் கூடியது. இச்சம்பவத்தையடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி போலீஸார் விசாரணைக்கு
அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீக்குளிக்க முயற்சி செய்யும்
சம்பவங்கள் தற்போது தொடர் கதையாக உள்ளதாக பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


No comments:
Post a Comment