ஆந்திராவிலிருந்து
தமிழகத்தின் வழியாக இறைச்சிக்காக மாடுகளை கடத்துவது வழக்கம் போல் நடைபெற்று வரும் நிலையில்
ஆங்காங்கே சமூக நல ஆர்வலர்கள், மாடுகளை பசு வதை செய்யக் கூடாது என்றும் ஆங்காங்கே போர்கொடி
நடத்தி லாரிகளை சிறைபிடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான மாடுகளை
வியாபாரிகள் அடிமாட்டிற்காக அதாவது இறைச்சிக்காக எடுத்து கேரளாவிற்கு கொண்டு செல்ல
முயற்சி செய்திருந்தனர். இந்நிலையில் கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பகுதியில் கேரளாவிற்கு
மாடுகளை கொண்டு செல்ல முயன்ற லாரிகளை இந்து மகா சபா கட்சி கரூர் நிர்வாகிகள் மறைத்து
மீட்டனர். மேலும் இத்தகவலை பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு
போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை சிறைபிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு
செய்ய முயற்சி செய்துள்ளது. அப்போது நாங்கள் தான் சார் உங்களை கூப்பிட்டோம், நீங்கள்
அவர்களுக்கு உறுதுணையாக பேசுகீறீர்கள் என பசுக்களை மீட்டெடுக்க கரூர் இந்து மகா சபா
கட்சி மாவட்ட தலைவர் காலனி மணி, மாவட்ட செயலாளர் வினோத், மாநில துணை செயலாளர் சுரேஷ்
ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிக பாரம்
ஏற்றி வெளி மாநிலத்திற்கு பசுக்களை ஏற்றியதாக கண் துடைப்பிற்காக வழக்கு பதிவு செய்வதாக
காவல் துறையினர் சமாதான படுத்தி அனுப்பினர். பொது நல ஆர்வலர்கள் மற்றும் இந்து மகா
சபா கட்சி நிர்வாகிகளின் சாதூர்த்தியத்தால்
அப்பாவி 48 பசுக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment