கரூர் லிட்டில்
ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 8 வது வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.நித்ய ஸ்ரீ
சுரேஷ், 2 வது தேசிய உலக சாதனை நிகழ்ச்சியில் இடம்பிடிக்கவும், இந்தியாவின் ஜெட்லி
புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவும் உள்ளார். கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ்
ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள கிருஷ்ணா கார்டன்ஸ் ல் வீணை, கீ போர்டு வாசித்து
2 தேசிய உலக சாதனைகள் நடத்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளி
தாளாளர் என்.மணிராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு
லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டாக்டர் கே.பத்மப்பிரியா தலைமை
ஏற்கவும், இசை ஆசிரியை ராஜலெட்சுமி முன்னிலை வகிக்கவும், நடுவராக டாக்டர் டிராகன் ஜெட்லி
(இவர் மட்டும் 60 முறை தேசிய, ஆசிய, உலக சாதனைகளில் பங்கேற்றதோடு, நிபுணரும் ஆவார்),
மேலும் மற்றொரு நடுவராக கரூர் லயன்ஸ் மாவட்ட ஆலோசகரும், கரூர் திருக்குறள் பேரவையின்
செயலாளருமான மேலை.பழநியப்பனும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு வருகை
தரும் அனைவரையும் எஸ்.நித்ய ஸ்ரீ சுரேஷின் பெற்றோர்கள் டாக்டர் எஸ்.என்.சுரேஷ், திருமதி
ஜெட்டிலா சுரேஷ், அண்ணன் நிரஞ்சன்ம் தாத்தா பாட்டி, சுபநரசிம்மன், அன்னபூரணி ஆகியோர்
அழைத்துள்ளனர். மேலும் நிகழ்ச்சியின் முடிவாக கரூர் ஷட்ஸ்ருதி மியூசிக் அகாடமி கீ போர்டு
மாஸ்டர் பி.லோகநாதன் நன்றியுரையாற்ற உள்ளார்.
No comments:
Post a Comment