கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கொத்தபாளையம் பகுதியில் 04.12.2015 இன்று அமராவதி அணையில் தண்ணீர் திறந்ததன் காரணமாக அமராவதி ஆற்றில் கரூர் மாவட்டம் கொத்தபாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் வந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி பார்வையிட்டு தெரிவிக்கையில்,, அமராவதி ஆற்றில் தற்போது 6900 கனஅடி தண்ணீர் தடுப்பணைக்கு வந்தடைந்துள்ளது. மேலும் அமராவதி ஆற்றில் 88 அடி தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மேலும் அணைக்குவரும் தண்ணீரை சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் திறக்கும் அளவு மாற்றம் இருப்பதை கருத்தில்கொண்டு கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் பாதுகாப்பு நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என டாம்-டாம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் காவல் துறை மற்றும் வருவாய் துறையின் மூலம் கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் தரைப்பாளத்திற்கு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் நலன்கருதி நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் முழுஒத்துழைப்பு கொடுத்து ஆற்றில் தண்ணீர் வருவதையொட்டி குளிக்க செல்வதோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதோ மற்றும் மக்கள் திரண்டு வேடிக்கை பார்ப்பது போன்ற செயலில் ஈடுபடாமல் பாதுகாப்புடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது அமராவதி ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் குழந்தைசாமி, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கோமகன், அமராவதி ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், ராஜா வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment