கரூர் லெட்சுமி
விலாஸ் வங்கி பதிவு அலுவலகத்தில், பணியாளர்கள், பயிற்சி கல்லூரி சார்பில் வங்கிப் பணியில்
ஒய்வு பெற உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒய்வினையொட்டிய பயிலரங்கு நடைபெற்று
வருகிறது. இந்த பயிலரங்கில் திருக்குறள் பேரவை செயலாளரும், தமிழிசை சங்க செயலாளருமான
மேலை.பழநியப்பன் கலந்து கொண்டு “அறுபதுக்கு மேலும் ஆனந்த வாழ்க்கை” என்ற தலைப்பில்
பயிலரங்கை 3 மணி நேரம் நடத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
பேசிய மேலை.பழநியப்பன் பேசியதாவது., பணி ஒய்வு என்பது வயதால், உடல் தளர்வை எண்ணி தரப்படுவது
தவிர இனி எப்படி இருக்குமோ, எப்படி இருக்குமோ என்று தளராமல் எப்பொழுதும் போல் செயல்படுங்கள்,
ஆசைப்பட்டு சேமிப்பை தெரியாதவர்களிடமோ, மாய வார்த்தைகளுக்கு மயங்காமலோ பாதுகாப்பாக
உங்கள் பெயரிலேயே சேமிப்பாக்குங்கள், உறவுகளிடம் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்துங்கள்
நூல்கள் நிறைய படியுங்கள், உடற்பயிற்சியை பின் பற்றுங்கள், வளரும் தலைமுறைக்கு வங்கி,
வங்கிப்பணி, வங்கி பயன்பாடு கற்றுக் கொடுங்கள், கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நல்ல
எண்ணங்கள் சிந்தனைகளை நிறைய வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை நிறைய வாங்கிப் படித்து
உங்கள் பெயரப்பிள்ளைகளுக்கு சேமிப்பாக்குங்கள், பணி நேரத்தை பயனுள்ள தன்னார்வ சேவைக்கும்,
வழிகாட்டுதலுக்கும் பயன்படுத்துங்கள். இயற்கையை நேசித்து. இயற்கை உணவை பின்பற்றி, கனிவான
சொற்களை பயனுள்ள சொற்களைப் பேசி, பிடிவாதம் தளர்த்தி அன்பால் நூற்றாண்டுக்கு மேலும்
ஆனந்தமாக, ஆரோக்கியமாக வாழலாம் என்றார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பயிற்சிக் கல்லூரி
முதல்வர் டாக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். பயிற்சி பட்டறைக்கு வந்த அனைவரையும்
பேராசிரியை அன்புலதா வரவேற்றார். பேராசிரியர்கள் கார்த்திகேயினி, ரான்சம் ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஒய்வு பெறும் அலுவலர்கள்
கலந்து கொண்டு பயன்பெற்றனர்
No comments:
Post a Comment