தேசிய மீனவர் பேரவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மா.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 106 தமிழக, காரைக்கால் பகுதி இந்திய மீனவர்களை சிறையில் இருந்து விடுவித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 75 படகுகளும் தமிழகம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தர மீனவர்களின் படகுகள் என்பதை இலங்கை வடக்கு மாகாண மீனவ தலைவர்களும், இலங்கை மீன்வள அமைச்சரும் நன்கு அறிவார்கள். அத்தகைய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் போக்கை கைவிட்டு பொங்கல் திருநாளுக்கான நல்லெண்ண அடிப்படையில் படகுகளையும் விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment