Tuesday, 26 January 2016

இந்திய குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 42 பயனாளிகளுக்கு ரூ.65.19இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்!!!







கரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவல வளாகம் அருகே  கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  இன்று இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (26-01-16)  காலை 8.00மணியளவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே முன்னிலை வகித்தார்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சமாதான புறாக்களை பறக்கவிட்டு பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுபரிசு வழங்கி கௌரவித்தார்மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 18 காவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் பதக்கங்களையும்,  மாவட்ட நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய 24 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு கேடயமும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ராஜேஷ் வழங்கினார்.
                பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்;ச்சி பணிகள் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 400 ம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்,  வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 900 ம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்,  தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரத்து 750 ம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்,  கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 875 ம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்  புதுவாழ்வுத்திட்டத்தின் மூலம்  22  பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும்  என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.65.19இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  டி.பி.ராஜேஷ்  வழங்கினார்.
                அதனை தொடர்ந்து  அரசு  இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம்,  கரூர் காவல்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் டாக் (மோப்ப) குழுவின் சாகச நிகழ்ச்சி,  கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் சி.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளி,  பசுபதீஸ்வரா மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி..வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி,  புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளி  பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  வீனஸ் மெட்ரிக் பள்ளி,  அன்புக்கரங்கள் ஆகிய பள்ளிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதுகலைநிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்ற அன்புக்கரங்கள் மாணவ, மாணவியர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும்,   மூன்றாம் இடம் பெற்ற பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்று மற்றும் நினைவுபரிசுகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேஷ் வழங்கினார்.

                இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  அருணா,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன்,  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்ரமணியம், சக்திவேல்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமல்சாமி,  வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மதனகோபால்  கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment