Wednesday 20 January 2016

விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ


ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்து இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இன்று(ஜன.,20) காலை 9.31 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இயற்கைச் சீற்றம், இயற்கைப் பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,-1 என்ற செயற்கைக்கோளுடன் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இந்தியாவிலேயே முழுதும் வடிவமைக்கப்பட்டது இந்த செயற்கைகோள். கடல் ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்ப உள்ள 5வது செயற்கைக் கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர் கிரண்குமார், விண்வெளிக்கு ராக்கெட்டில் மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், இத்திட்டம் துவங்கும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment